எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை


எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை

கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானை சுனாமி தாக்கிய போது அங்கே அமைந்திருந்த 5 அணுமின் நிலையங்களை மூடிவிட உத்தரவிட்டது அரசு. காரணம் சுனாமியால் அந்த அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன . மேலும் அவைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்ப்பட்டால் ஜப்பானின் ஒரு பகுதி அழிந்தே போகும் என்று உலகமே பயந்து இருந்த நேரம் அது. அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆபத்தைத்தான் இப்போது கூடன்குளத்தில் துவங்க இருக்கிறது இந்திய அரசு. 

தமிழர்கள் என்ற சமுதாயமே பிடிக்காத அதிலும் மீனவர்கள் என்றால் கவனத்திலே கொள்ளாத இந்திய அரசு ரஷ்யாவுடன் 1988 ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்திய நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்தியாவில் அணுமின் நிலையம் அமைப்பது என்று முடிவானது. இந்தியாவில் வடக்கு மாநிலங்கள் பலவற்றில் முயற்சி செய்து முடியாத பட்சத்தில் தெற்கே அதிலும் தமிழ் பேசும் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகிய கூடன்குளத்தில் அமைக்கலாம் என்று முடிவு செய்தது இந்திய அரசு.

மக்களுக்கு எதிரான ஒரு திட்டம் என்பதாலோ என்னவோ ரஷ்யா பல துண்டுகளாக உடைந்து போக செய்வதறியாது இந்திய தவித்து கொண்டிருந்தது, மேலும் அணுக்கரு வழங்குவோருக்கான குழுமத்தின் ஒப்புதல் பெற வில்லை என்ற காரணத்தை காட்டி அமெரிக்காவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது, எனவே ரஷ்யாவால் 3.5 பில்லியன் டாலர் பணத்தில் உருவான இந்த திட்டம் முடக்கப்பட்டது.

அதன் பின் 2001 ல் மறுபடியும் இத்திட்டத்திற்கு உயிர் கொடுத்து அனைத்து ஒப்புதல்களையும் பெற்று இயங்க துவங்கியது இந்திய அரசு. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடைபெற்றன. அதன் பின் 2004 ம் ஆண்டு கூடன்குளம் பகுதியில் கடற்படை தளம் ஒன்றை அமைக்க எண்ணி ஒரு சிறு துறைமுகத்தையும் கட்டியது, இதற்கு வேறு காரணங்களும் இருந்தது. அதன்முன்பாக தூத்துகுடி துறைமுகத்திலிருந்து கொண்டுவந்த பொருட்கள் சேதமுற்றதால் அங்கேயே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட்டது.

இந்த வேளையில் முதல் முறையாக 2001 – 2002 ம் ஆண்டில் கூடன்குளத்தை அடுத்துள்ள பெருமணல் என்ற கிராமத்தில் மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல் என அடுத்துள்ள ஊர்மக்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது, அராஜக அரசாங்கம் தங்களது அராஜகத்தை பயன்படுத்தி காவல்துறையினாரால் பொதுமக்களாகிய பெண்களையும் குழந்தைகளையும் அடித்து விரட்டப்பட்டனர், ஊர்தலைவர்களும் பங்குத்தந்தையும் தாக்கப்பட்டார்கள் , அரசு இவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விட பொதுமக்களை விரட்டியதில் ஆர்வம் காட்டியதுதான் கொடூரம்.

2004 ம் ஆண்டிற்கு பிறகு அத்துறைமுகம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 1500 மீட்டர் தொலைவிற்கு வெளியேதான்மீன் பிடிக்கலாம் என்ற எழுதப்படாத சட்டம் கொண்டுவரப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாகிய மீன்பிடித்தொழிலை நசுக்கத்துவங்கியது அரசு.

இப்போது வரும் டிசம்பர் முதல் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய அணு உலை இயங்கப்போவதாக செய்திகள் வருகிறது. இது வேதனை தரக்கூடியது மட்டுமல்ல அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இதற்கு முன்னோட்டமாக அணுமின் நிலையத்தை அடுத்த பல கிராம மக்களை மூன்று தினங்களுக்கு வெளியேறும் படியும் அக்காலகட்டத்தில் சோதனை ஓட்டம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைக்கிறது.

வரும் டிசம்பரில் அணுமின் நிலையம் செயல் படத்துவங்கினால், கண்டிப்பாக இடிந்தகரை மற்றும் கூடன்குளம் பகுதி மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த படுவார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மேலும் டிசம்பருக்கு பின் சுற்றளவில் 16 அல்லது 20 கிலோமீட்டருக்கு அப்புறத்திலே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் செய்திகள் கசிகின்றன. என்னதான் செய்வார்கள் மக்கள் . . .

சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழ அனுமதிக்காத அரசிடம் இதற்கு மேல் என்ன கேட்டுவிட முடியும், தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சொந்த மண்னையும் காத்து கொள்ளும் கடைசி நம்பிக்கையில் உள்ளனர் அப்பகுதி மீனவர்கள்.

அவர்களின் நம்பிக்கைக்கு விடை கிடைக்குமா, 

ஊழலுக்கு எதிராக ஒரு மசோதா கொண்டு வர போராடும் மரியாதைக்குரிய ஒரு நபரை கைது செய்து ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அதே சிறையில் அடைக்கும் அராஜகமான மத்திய அரசு நம் அழுகைக்கு என்ன பதில் தந்துவிடும்.

அரசியலும் அரசியல்வாதிகளும் மக்களின் நலனில் என்றுமே அக்கறை கொண்டதில்லை என்பதற்கு கூடன்குளம் ஒரு எடுத்துக்காட்டு.

மீன் தன் இருப்பிடமான கடலை விட்டு விலகினால் இறந்து போகும் மீனவனும் அப்படித்தான், எப்படியும் இறந்துதான் போகப்போகிறோம் ஆனால் இருக்கும் வரை போராடிப்பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இறங்கி இருக்கிறார்கள் மக்களும் மீனவர்களும் . . .

இத்தனைகாலமும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டோம் எங்களுக்கான வாழ்வு உங்களால் முடக்கப்படுகிறது. இனி பொறுத்திருந்து பயனில்லை என்று வரும் பட்சத்தில் போராட்டமே எங்கள் ஆயுதம் என்று புறப்பட்டு இருக்கும் போராட்டம் ஒரு துவக்கமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 1200 படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை இது இன்னும் அதிகரிக்கலாம், அடுத்தடுத்துள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் அனைவரும் உண்ணாவிர போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். அவரகளுக்கு ஆதரவாக அடுத்துள்ள பல கிராம மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டையும் மண்ணையும் நேசிக்கும் இவர்களால் அநீதிக்கு எதிரான ஆயுதமாக போராட்டத்தைத்தான் முன்வைக்க முடியும் இவர்களையும் அன்னா ஹசாரே போல் அரசே அடுத்த கட்டத்திற்கு போக வைத்துவிடுமோ என்று நினைக்கவும் தோன்றுகிறது . . .

1.6 லட்சத்து கோடி ரூபாய்களை கொள்ளையடித்து விட்டு சுதந்திரமாக திரியும் கூட்டத்தை ஆதரிக்கும் அரசுக்கு , இந்த 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டத்தை வாபஸ் பெறுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சிந்தித்து பாருங்கள்.

எங்கள் உலைக்கு உலை வைக்கும் அணு உலைக்கு நீங்களாக ஸ்டாப் பட்டன் அடித்து விடுங்கள். அதை விடுத்து பிளே பட்டனை அழுத்துவீர்களேயானால் நிச்சயம் விளையாட்டு துவங்கி விடும் . . .

அன்னா ஹசாரே நடத்தும் போராட்டங்களால் இந்த போராட்டங்கள் பிசிபிசித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது , ஏறக்குறைய 15 கிராமத்தில் உள்ள 2 லட்சம் குடும்பங்களின் இருப்பிடங்களையே மாற்ற நினைக்கும் அரசுக்கு எதிரான இந்த போராட்டம் பலரது கவனத்திற்கும் கொண்டு செல்லபட வேண்டிய ஒன்று என்பதை யாரும் மறந்த விட வேண்டாம்.

4 comments on “எங்கள் உலைக்கு வேட்டுவைக்கும் கூடன்குளம் அணு உலை

  1. 1.6 லட்சத்து கோடி ரூபாய்களை கொள்ளையடித்து விட்டு சுதந்திரமாக திரியும் கூட்டத்தை ஆதரிக்கும் அரசுக்கு , இந்த 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டத்தை வாபஸ் பெறுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. சிந்தித்து பாருங்கள்.

    good lines..but i dont know that these politicians will be having room in their ear to hold our grievance

  2. good lines..but i dont know that these politicians will be having room in their ear to hold our grievance

    “1.6 லட்சத்து கோடி ரூபாய்களை கொள்ளையடித்து விட்டு சுதந்திரமாக திரியும் கூட்டத்தை ஆதரிக்கும் அரசுக்கு , இந்த 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டத்தை வாபஸ் பெறுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை”

kootapuli -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி