பில்லா 2 – பாடம் (இயக்குனருக்கு)

பில்லா 2 – பாடம் (இயக்குனருக்கு)

தலைவரின் சினிமாவுக்கு அப்புறம் மெனக்கெட்டு சினிமா பார்க்க போகிறேன் என்றால் அது “தல” சினிமாவுக்காகத்தான், மங்காத்தா என்னை ஏமாற்றவில்லை காரனம் அதற்கு கூடுதலாக அஜீத் திடம் நான் எதிர்பார்க்கவில்லை . . நல்ல நடிகன், இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலே அழகான நடிகனும் கூட , உழைப்பாளி, அதுவும் கொடுத்த வேலையை எப்படியும் வேலை தந்தவர் திருப்தியடையும் வகையும் முடித்து தரும் உழைப்பாளி . . இப்படியெல்லாம் இருப்பதால் கூட என்னை கவர்ந்திருக்கலாம் . .அந்த ஒரு நிலையில் தான் பில்லா 2 ஐ கண்டிப்பாக தியேட்டர் போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்

மீடியா வேறு பல்ஸை எகிற வைத்திருந்த்து, பில்லா 2ன் கிளைமேக்ஸ் தெரிந்த்துதானே (பில்லா எப்படீன்னு பில்லா பாத்தா தெரியும் அந்த இட்த்துக்கு வந்து சேர்ரதுதான் பில்லா 2 கிளைமேக்ஸ்), சரி இப்போ தேவை என்ன பில்லாவோட துவக்கம் அதாங்க டேவிட்டோட துவக்கம் . . அதுவும் இலங்கை அகதின்னு ஒரு சூப்பர் மேட்டர் கிடைச்சாச்சி , இனி என்ன அதகளம் பண்ணி இருக்க வேண்டாமா? செய்யலியே ராசா இந்த டோக்கால்டி .சே பேர்கூட சரியா வரமாட்டேங்குது . . சரி அத விடுவோம்

அங்கங்கே கேமராவும் லொக்கேஷனும் சும்மா நச்சுன்னு இருக்கு, இதெல்லாம் வச்சிகிட்டு இப்படி பண்ணிட்டாங்களேன்னு கோபம் வந்த்து பாருங்க சரி விசயத்துக்கு வருவோம். . .

படம்

ஒத்த ஆளா வர்ர அஜீத் எப்படி இண்டெர்நேஷனல் டான் ஆகிறார் என்பதுதான் கதை . .

இலங்கை அகதியாக இந்தியாவுக்கு வரும் அஜீத் ஒரு கட்டுக்கடங்காத இளைஞனாக இருக்கிறார், அவருக்கு நிழலுலகத்திற்குள் நுழைய முதல் வாய்ப்பு தன்னாலே கிடைக்கிறது, அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு நுழைகிறார், அத்தோட நிற்காமல் ஆசை அல்ல பசியென சொல்லி அடுத்தடுத்த முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏற ஏற எதிரிகள் அதிகரிக்க அத்தனை பேரையும் கொன்று தான் நினைத்த இட்த்தை பிடிக்கிறார் என்பதுதான் திரைக்கதை . .

இதற்காக அமைக்கப்பட்ட திரைக்கதையில் மொத்தம் 5 சூப்பர் சீன்கள் கிடைத்தும் அதை படமாக்கிய வித்த்தில் இயக்குனர் செம சொதப்பல் சொதப்பி இருக்கிறார்.

படம்

கள்ளகட்த்தல் உலகத்தில் முதல் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த முதல் வாய்ப்பு சினிமாவுக்கு எவ்வளவு முக்கியமானதாக, செம இண்ட்ரெஸ்டா இருந்திருக்கணும் , இயக்குனர் சொதப்பிட்டார். அப்படியே வளர்ந்து ஸ்டேட் தாண்டுகிறார் அஜீத் (பில்லா) . .அப்போ அந்த இரண்டாவது சீன் ஆயுத வண்டியை போலீஸ் வளையத்திலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் . .ம் ம் ம்கூம் தெமேன்னு சேரிலே இருந்திருக்கிறார் இயக்குனர் . . . மூணாவது பார்வதியை காப்பாற்றுகிற சீன் , கொஞ்சம் மெனக்கெட்டு யேசிச்சிருந்தா, ம் ம் ம் அடுத்து நாலாவது வாய்ப்பு ஒரு முதல் மந்திரியை கொன்று இந்தியா அளவுல வளர்கிறார்னு காட்டணும் இதுக்காவது மெனக்கெடணுமே . .வேண்டாம்னு முடிவே பண்ணிட்டார் இயக்குனர். . .லாஸ்டா இண்டெர்நேஷனல் டானாக மாற கிளைமேக்ஸில் இண்டெர்நேஷனல் வில்லனை கொல்கிறார் , சரிதான் இப்பதான் இயக்குனர் முழிச்சி ஏதாவது பண்ணுவோம்னு டிரை பண்ணி இருக்கார் சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கு என்ன இன்னும் கொஞ்சம் நேரம் கூடுதலா கிளைமேக்ஸ் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் . .

ஆகா இப்படி 5 சூப்பர் சிச்சுவேஷன் கிடைச்சும் அதை கலக்கலாக த்ரில்லராக அல்லது இண்ட்ரஸ்டா எடுத்திருந்தா படம் நன்றாகவே வந்திருக்கும் . . ஜெகதீஸும் பில்லாவும் நெருக்கமாக இருக்காங்கன்னு காட்ட கிளைமேக்ஸில் ஒரு சீன் வைக்க வாய்ப்பு வந்தும் வைக்கல இந்த மங்கூஸ் இயக்குனர் . .

இண்டெர்நேஷனல் வில்லன் இந்திய வில்லன் கூட சேர்ந்தாச்சு, பில்லாவை கொல்ல திட்டமும் போட்டாச்சு, இத தெரிஞ்சி எப்படியும் பில்லா எல்லா வில்லனையும் கொன்னுவாரு. . இதெல்லாம் சரிதான் ஆனா எப்படி வில்லன் ஆயுத தொழிற்சாலைக்கு வர்ரார்னு யோசிக்க வேண்டாமா?, ஜெகதீஸ் மூலமா வில்லன் ஏரியாவுக்குள் வர்ராருன்னு காட்டி, வில்லன் குருப்பை அழித்து இருவரும் சேர்ந்து, இண்டெர்நேஷனல் டானாகிறார் முடிச்சிருக்கலாம் . . ம் ம் ம் ம்கூம்

5 பரபரப்பான சூப்பர் சீன்கள் அமைத்து, உரையாடலிலும் ஸ்டைல் மேக்கிங்கிலும் சூப்பர் ஹிட்டாக முடிக்க வேண்டிய சினிமாவை, அனைத்தும் இருந்தும் சுமார் பிலிமாக மாற்றிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

படம்

காதாபாத்திரங்களின் தேர்வு நன்றாகவே இருக்கிறது, பார்வதியை தவிர. அஜீத் மீது காதல் கொள்ளும் நாயகி, அஜீத்தோ வேண்டாமென ஒதுக்குகிறார், ஆனா அதற்கான காரணத்தை நமக்கு சே அட்லீஸ்ட் ரஞ்சித்துக்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்!!! , இப்படி ஒரு தலையாக தலயை எண்ணி 5 சீன்களில் வந்து செத்து போகும் பாத்திரத்திற்கு ரொம்பவும் பரிச்சயப்பட்ட ஒரு நடிகை ஹோம்லியா வந்திருந்தா கொஞ்சம் வெயிட் கூடி இருக்கும் . இது என்னடான்னா பார்வதியை கொல்லும்போது , இதை ஏண்டா முன்னாடியே செய்யலன்னு கத்தணும் போல் இருக்கு. . .

படம்

பில்லா, ரஞ்சித், ஜெகதீஸ் என அறிமுகமாகிய கேரக்டர்கள் என்பதால் ஓகே. அப்புறம் இளவரசு, கோவா வில்லன் மற்றும் இ.வில்லன் என அனைவருமே நல்ல செலக்‌ஷன். அதிலும் புருனே அய்யோ ஆக்‌ஷன் பட்த்துக்கு ஏற்ற நடிகை என்றால் மிகை இல்லை, கண்களில் காம்மும் வில்லத்தனமும் சேர்ந்து இருந்து கடைசியில் செத்தும் போகிறார்.

இயக்குனர் ஏமாற்றிய போதும் அஜீத் தனியாளாக நின்று உழைத்திருக்கிறார் அவருக்காக நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம், அகதியாக வந்து இறங்கும்போதும், முதல் கட்த்தலில் தெரியாமலே நுழைந்து பின் அதையே ஏற்றுக்கொள்ளும்போதும் சரி, அடுத்தடுத்த கட்ட்த்திற்கு போகும் போதும் சரி நன்றாகவெ செய்திருக்கிறார்.

 

அஜீத் கூட சேர்ந்து சினிமாவுக்கு உழைத்த இன்னொருவர் ஒளிப்பதிவாளர், ரொம்பவே உழைச்சிருக்கார். காட்சிகள் தெள்ளத்தெளிவாக சூப்பரா இருக்கு அதிலும் அந்த பனி அடர்ந்த வீடு இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு . .

அப்புறம் மேக்கிங் ஆப் பிலிம் . . சும்மா சொல்லக்கூடாது இது மட்டும்தான் இயக்கம்னு இயக்குனர் முடிவு பண்ணி இருந்திருக்காரு, ஒவ்வொரு சீனும் அப்படி ஒரு ஸ்டைல், ரசிச்சிகிட்டே இருக்கலாம் (விசயம்தான் பலவீனமா போச்சு) விசயமில்லாம ரசிக்க முடியல் அதான் பிரட்சனை . .

 

என்னை பொறுத்த வரையில் சினிமாவில் வந்த உரையாடல்கள் அனைத்துமே ரசிக்க்கூடிய ரகம்தான் . . என்ன இன்னும் கொஞ்சம் அதிகமாக டயலாக் வைத்திருக்கலாம்,

பாடல்கள் ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது, பின்ன்னி இசை கலக்கல் யுவன். 

அப்புறம். . .

ரிலீஸாகி என்னவெல்லாமோ செய்திருக்க வேண்டிய ஒரு சினிமா, எப்படியோ வந்து முடிந்து விட்ட்து . . .

இதுவரை திரைக்கதை சரியில்லை என்றால் சினிமா தோல்வியை பெறும் என்று மட்டுமே நம்பி இருந்த என்னை திரைக்கதை நன்றாக கிடைத்தாலும் ஒரு சினிமா தோல்வியடையும், அதிலும், அனைத்தும் நன்றாக இருந்தபோதிலும் ஒரு சினிமா தோல்விய்டையும், காரணம் காட்சிகள் அமைப்பு என்பதை உணரவைத்த சினிமா பில்லா 2.   

மார்கெல்லாம் வேண்டாம்ங்க . .