கபாலி ரஜினி படம்தான்

என்னப்பா இப்படி சொல்லிட்டன்னு கேட்காதீங்க, இரஞ்சித் இயக்கிய இரண்டுபடங்களிலுமே அழுத்தப்பட்ட சமூகத்தின் மீதான அக்கறையை காட்ட வேண்டுமென்ற இயல்பு இருந்தபோதிலும் ஒரு கட்டத்திற்கு மேல் அது சம்பந்தமான காட்சிகளை வைத்திட பயந்தே இருந்தார் என்பதே உண்மை.

kabali_posters_15
எப்போ சூப்பர்ஸ்டாருக்கு கதை சொன்னாரோ அப்பவே தலைவருக்கு தெரியும் இது எதுமாதிரியான சினிமாவாக இருக்கும் என்பது, அதை தெரிந்துகொண்டே இரஞ்சித்துக்கு மட்டுமல்ல அவரது சமூக அக்கறைக்கும் சேர்த்து “சரி” சொன்னவர் ரஜினி என்பதாலே இது ரஜினி படமாகிறது.
70 நெருங்கும் வயதில் தன்னை வளர்த்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அடிக்கடி தன்னை கேள்வி கேட்பவராகத்தான் ரஜினியை நான் பார்க்கிறேன், அரசியல் வேண்டாம் என்ற முடிவை எடுத்தவர், அதை தவிர்த்து எது செய்தாலும் அதற்கும் ஜாதி இனம் மதம் என்ற சாயம் பூச அலையும் கூட்டம் தமிழகமெங்கும் பரவி கிடப்பதை அறியாதவரல்ல அவர்.

13718755_10208217883863238_6187712594671992260_n

காவிரித்தண்ணீர் பிரச்சனை கூட்டத்திலே உடன் பணியாற்றும் ஒருவராலே (மரியாதை நிமித்தமாக இப்படி குறிப்பிடுகிறேன்) அசிங்கபடுத்தப்பட்டார், ஆனால் அவர் கவலை கொள்ளவில்லை, மாறாக எங்கேயும் போகமாட்டேன் இங்கேதான் இருப்பேன் என்றார்,

சொல்றதத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன், அதன்படியே இருக்கிறார்.

இன்னும் சொன்னால், சீண்டுபவர் சீண்டட்டும், காபாலியாக இறுதிகாட்சியில் சொல்வது போல் கால்மேல் கால் போட்டு ஸ்டைலா இருப்பேண்டா, புடிக்கலன்னா செத்து போடா  என்றே தான் சொல்ல வேண்டும்,

தன்னை எப்படி பார்க்க வேண்டுமென்று தன் ரசிகன் வருவான் என்பது தெரியாதவரல்ல தலைவர், இருப்பினும் இளமை துள்ளலும் ஸ்டைலும் கண்டு ஆர்பரிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் 30 ஆண்டுகால ரசிகர்களின் முதிர்ச்சியும் அவர்களின் ரசிப்பின் தன்மையும் அறிந்தவராக இப்படத்தை அதே ஸ்டைலில் தந்திருக்கிறார் ஒரு சில சமூக அக்கறையான கருத்துக்களோடு,

kabali_gallery_172016_000012__1

அப்பா என்று தன் மகள் தன்னை அழைத்து காப்பாற்றும் காட்சியில் சண்டை போடவேண்டுமென்றுகூட தோன்றாமல் தன் மகளை பார்த்து சந்தோசம் கொள்ளும் காட்சியாகட்டும், மனைவியை பார்க்க போகும் முன் துவங்கி பார்த்தபின் அங்கிருந்து கிளம்பும் வரை ஆகட்டும் ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து பாருங்கள் அப்போ தெரியும்டா ரஜினி யாருன்னு

தனக்குள் இருக்கும் சமூக சிந்தனை மற்றும் நடிப்பின் மீதான ஆசை இரண்டையும் நிறைவேற்றவும் தன் ரசிகனை விசிலடிக்கும் ரசிகனாக மட்டும் பார்க்காமல் அவனது ரசனையையும் புரிந்தவராக நடித்த படம்தான் காபாலி

எனவே தன் தேர்ந்தெடுத்த பணியை திறமையாக சினிமா முழுவதும் தன் உடல்மொழியாலும் வசனத்தாலும் இன்னும் சொல்லபோனால் முகபாவனையின் மூலமாகவும் வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார்,

 

யாருக்காக போராடினாரோ அம்மக்களின் நிலைகண்டு பொங்குபவராக இருந்தாலும் துணை இல்லாத அநாதை நிலையை தன் உடல்மொழி மூலம் சிறப்பாக வெளிக்காட்டி நடித்திருக்கும் அவரை சூப்பர் ஸ்டார் என்று அர்த்ததுடன் நூரு முறை அழைத்துக்கொள்ளலாம் . . .
வேகம் என்பது பிரட்சனை அல்ல என்று சொல்வதை விட இக்கதையையும் ரஜினியையும் ரசிக்க வேண்டுமானால் இந்த வேகத்தடை வேண்டும் என்பதே என்கருத்து.

காபாலி தலைவர் படம்தான், இரஞ்சித் சினிமா அல்ல. . . .