பஹ்ரைனில் எந்திரன்

பஹ்ரைனில் எந்திரன்

உலகமெங்கும் எந்திரன்மயமாகிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் என் அனுபவத்தையும் பஹ்ரைனில் எந்திரனின் சாதனையையும் இங்கே பதிவிடுகிறேன்

முதலில் பஹ்ரைனின் இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் சீஃப் சினிமா எனப்படும் சினிகாம்ப்ளக்ஸில் மூன்று திரையரங்குகளில் வெளியாகியது எந்திரன். அதுவும் மொத்தமாக 13 காட்சிகளாக 30ம்தியதி காலை 11 மணிக்கே வெளியாகியது எந்திரன். முதல் நாளே பார்க்க துடிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் சென்று டிக்கெட் பதிவுக்கு போக அனைத்து காட்சிகளும் ஏறக்குறைய புக்காகி இருந்தது. இருந்தாலும் சிரமங்களுக்கிடையில் முயன்று இரவு 11 மணி காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. அதாவது 10வது காட்சி.

இதற்கிடையில் மலேசிய ஆடியோ விழாவிற்கு மலேசியாவிற்கு கூட்டிகொண்டு போக சொன்னான். அதிலும் சன் தொலைக்காட்சியின் விளமரங்களை கண்டு கண்டு எப்போ எப்போ எனக்கேட்டு கொண்டிருந்தான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி வந்தேன். (டிக்கெட் ஒன்று மூன்று பஹ்ரைன் தினார்கள் அதாவது ரூபாய் 360)

இரவு 11 மணிக்கு சினிமா பார்க்க போனதும். துவக்கமே ஒரு ஏமாற்றம் . அது சூப்பர் ஸ்டாரை மிக சாதரணமாக காட்டியது வித்தியாசமாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அனேகமாக எல்லா ரசிகர்களும் இந்த மாதிரி நினைத்திருப்பார்கள். . . ஆனால் அதை உடனே நீக்கியது ரோபோ ரஜினியின் எண்டிரி.

கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் ரோபோ ரஜினிதான் சும்மா அதிருதுல்ல. . .செம கலக்கல், அந்த சிரிப்பாகட்டும், நடை உடையாகட்டும், அந்த வில்லத்தனமும் அப்பா இன்னும் பிரமிக்க வைக்குது. சும்மா இல்ல சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான். ரஜினியின் நடனமும் பிரமிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் பயிற்சியாளர் புதிய பரிணாமத்தையே ஏற்படுத்தி இருக்கிறார். அதிலும் அந்த ரயில்காட்சி சூப்பர்.

ஐஸ்வர்யா ராய் . . பல நேரங்களில் வயதாகிவிட்டது தெரிகிறது சில நேரங்களில் இளமையாக இருக்கிறார் அழகாக வேறு இருக்கிறார் , அழகாக ஆடுகிறார், பாடல்களில் சூப்பரா இருக்கிறார். . ரோபோ ரஜினியோடு சேர்ந்து நாமும் அவரை விரும்பலாம் போல் இருக்கிறது.

சந்தானமும் கருணாஸ்யும் சும்மா இரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள். அதன் பின் கதையின் போக்கை மாற்றவும் பயன்படுகிறார்கள் . .

வில்லனுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் டேனி சும்மா இல்லாமல் நல்லாவே செய்திருக்கிறார் பாதியில் செத்தும் போகிறார்.

இசை பற்றிய என்ன சொல்ல ஏற்கனவே பாடல்களில் உலகை கலக்கிய ரஹ்மான் பிண்ணனியில் பின்னி இருக்கிறார். அதே போல் நடனங்கள் அமைத்தவர்களும் நன்றாகவே உழைத்திருக்கிறார்கள்.

சண்டைக்காட்சிகள் அமைத்த பயிற்ச்சியாளர் மிகுந்த உழைப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

வழக்கமாக அதிக நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் ரஜினி படத்தில் நட்சத்திரங்கள் மிக குறைவு என்பது இந்த முறை ப்ளஸ் ஆகி இருக்கிறது.

கிளைமேக்ஸில் ஆயிரக்கணக்கில் ரஜினியின் உருவத்தில் வரும் ரோபோக்களின் சண்டை காட்சியை மறக்க சினிமா ரசிகர்களுக்கு 100 நாட்களாவது ஆகும்.

மொத்தத்தில் சினிமா எப்படி இருந்தது என்பதை விட  இந்த சினிமாவை தியேட்டரில் பார்க்க தவறவிடக்கூடாது என்பதே என் கருத்து.

தவறவிடக்கூடாத சில காட்சிகள் . .  ரோபோ செய்யும் சுகப்பிரசவம், கிளைமேக்ஸ், ரயில் சண்டை காட்சி, சிட்டி நடனம், ரோபோவை வில்லன் பரிசோதிக்கும் காட்சி, என சொல்லிக்கொண்டே போகலாம்

இருந்தாலும் படம் எப்படி என்பவர்களுக்கு என் பதில் என் மகன் படம் முழுவதையும் கண் சிமிட்டாமல் பார்த்து முடித்தான் அவனுக்கு வயது 6. இரவு படம் முடியும் போது மணி இரவு 2 மணி.

இதுவே எந்திரனி வெற்றி. . .