டிராவிட் – கிரிக்கெட் விக்கிப்பீடியா

கர்நாடகத்தில் 1973 ல் பிறந்த டிராவிட் சரியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறந்த வீரனாக கிரிக்கெட் உலகத்துக்குள் நுழைந்தார்.

நுணுக்கமான விளையாட்டு மூலம் அத்தனை விரைவில் அவுட்டாக்க முடியாத “தி வால்” என்றழைக்கப்பட்ட டிராவிட் , தனது விளையாட்டு மூலம் வெறும் நான்கு ஆண்டுகளில் விஸ்டேன் கிரிக்கெட் ஆப் த இயர் விருதினை பெற்றார். தொடர்ந்து 2004 ல் ப்ளேயர் ஆப் த இயர் விருது ஐசிசி சார்பிலும் டெஸ்ட் ப்ளேயர் ஆப் த இயர் விருதும் வளங்கி கவுரவிக்கப்பட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய ஆட்டக்கார்ர் என்ற பெருமையும், ஒரு நாள் போட்டியிலும் 10000 ரன்களை கடந்த திறமைக்கார்ர் இவர்.

இவரது பெருமைகளில் சில:

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் 100 ரன்களை பெற்ற முதல் மற்றும் ஒரே மட்டையாளர்.

அதிக கேட்சுகளை பிடித்த கிரிக்கெட்டர் (196 கேட்ச்கள்)

18 வீர்ர்களுடன் பார்ட்ணர்ஷிப்பாக 75 செஞ்சுரிகள் அடித்திருக்கிறார் டிராவிட், இது ஒரு உலக சாதனையாகும்

7 வது உலக்கோப்பை போட்டியில் (1999) அதிக ரன்கள் அடித்த வீர்ராக டிராவிட் சாதனை படைத்தார் (461 ரன்கள்)

பார்ட்ணர்ஷிப்பில் உலக சாதனையாக கருதப்படும் 331 ரன்கள் இவரும் டெண்டுல்கரும் இணைந்து அடித்த்தே .

300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் பார்ட்ணர்ஷிப்களில்  ஈடுபட்ட ஒரே வீரர்.

120 தொடர்ச்சியான ODI போட்டிகளில் டக் எடுக்காமல் இருந்தார்.

இப்படி பல சாதனைகளை படைத்து, கிரிக்கெட் உலகில் அசைக்கமுடியாத ஒரு பெயரை உருவாக்கி உண்மையாகவே இந்தியாவின் சுவர் என்ற பெருமையை கொண்டவர்.

இவரது எல்லா சாதனைகளை விடவும், இன்றும் கிரிக்கெட் விளையாட வரும் எல்லாவருக்கும் விளையாட்டு கற்றுக்கொள்ளும் வகையான ஒரு கிரிக்கெட்டர் என்பதுதான் அந்த பெருமை.

சக்தியுள்ள எல்லாருக்கும் சிக்ஸர் அடிக்கலாம் என்று, இன்று பலரும் நீருபிக்கும் வேளையில் தடுப்பாட்டம் என்பதும் , முறையான பேட்டிங் என்பதும் இவரது ஆட்டம் மூலமே படிக்க முடியும் என்பதும் உண்மை.

பலரும் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பொருத்தம் என்று கருத்து தெரிவிப்பது வழக்கம், எனினும் ஒரு நாள் போட்டிகளிலும் பல சாதனைகளையும் செய்திருக்கிறார், நியுசிலாந்து எதிராக 153 ரன்கள் இவரது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள், என கலக்கிய டிராவிட், ஒரு நாள் போட்டிகளில் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என மாறிய உலகில் டிராவிட் பலவிதமான விமர்சன்ங்களையும் எதிர்கொண்டார்.

இருப்பினும் இப்போ சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டியில் கலந்து கொண்டார், கலக்கினார், இறுதியாக விளையாடிக்கொண்டிருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் 50 ரன்களை கடந்து, புதிதாக வரும் அனைத்து விளையாட்டு வீர்ர்களுக்கும் ஒரு புத்தகமாக இருக்கும் டிராவிட்டுக்கு விடைதரும் இதே தருணத்தில், அவரது விளையாட்டு ஸ்டைலும், லெக் சைடு சாட்டும், இடம் பார்த்து அடிக்கும் திறமையும் எப்போதும் நினைவில் நிற்கும்.

கிரிக்கெட் உள்ள வரைக்கும் , நினைவில் நிற்கும் டிராவிட் விளையாட்டுக்காக மட்டுமல்ல , ஒரு நாள் போட்டிகளில் தன்னைவிடவும் ரன்களை விரைவில் சேர்க்கும் ஆட்டக்கார்ர்களுக்கு இடம் விட்டு விலகிய அவரது ஜெண்டில்மேல் மூவ் மிகவும் பிடித்த ஒன்று. பலமுறை நான் முதல் பலரும் அவரை விமர்சனம் செய்து இருக்கிறோம். அப்போதெல்லாம் அணித்தேர்வாளர்களின் நிர்பந்த்த்தால் அவரை விளையாட வைத்து விளையாடினார்கள் என்பதும் இங்கே சுட்டிகாட்டுகிறேன்.

கிரவுண்டின் எல்லா பாகங்களிலும் பந்துகளை விரட்டிவிடும் டிராவிட் கிரிக்கெட்டிலும் எல்லா ரசிகர்களின் இதயங்களிலும் பவுண்டிரிகளையும் சிக்ஸர்களையும் அடித்து நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் டிராவிட்டுக்கு விடைபெறும் விதமாக இந்த கடைசி ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்று அவருக்கு சமர்பிக்க என்னைப்போல் இந்திய ரசிகர்களும் உலக ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

Advertisements