மீண்டும் வணக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன் . . .
முகப்புத்தகம் வாட்சப் என துரிதமான உலகில் மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்
முதலில் சுவாதி நுங்கம்பாக்கம் கொலை
ஏதேதோ காரணங்கள் அடுக்கப்படுகின்றன, கொலையாளியை கண்டு பிடிக்கவும் காவல்துறை சிரமப்படுகின்றதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்ற இதே நேரத்தில் சிலர் சாதி வண்ணம் போட்டு தங்கள் “கைவரிசை” காட்ட இன்னும் சிலர் “மத சாயம்” பூசுகிறார்கள். இவர்களுக்கு அன்றைய தினத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த “மனிதர்” களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
நாம் அங்கே நின்றிருந்தால் என்ன செய்திருப்போம் என்ற எண்ணம் வராத இந்தியன் (கவனிக்க தமிழன் அல்ல) வெகு குறைவாகவே இருந்திருக்கும். ஆயினும் நடந்த ஒரு மகா கேவலமான சம்பவம் நடந்தே விட்டது. இதில் தவறு என்று பார்த்தோமையானால் முதலில் வருவது அரசாங்கமே
சம்பவங்களை தடுப்பது என்பது ஒரே வகைதான், சம்பவங்களை தடுக்க முடியுமா என்றால் வாய்ப்புகள் மிக குறைவுதான் ஆனால் சம்பவங்களை செய்பவர்களை தடுக்கலாம், எப்படி என்றால்
அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும், வளர்ந்துவிட்ட நாகரீக உலகத்தில் பொதுமக்கள் கூடும் ரயில் நிலையத்தில் சி சி டி வி வைக்க வேண்டுமென்ற சிறிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கையை கூட எடுக்காமல் இருந்த அரசு முதல் குற்றவாளி.

பாவம் யாரை குற்றம் சொன்னாலும் போன உயிர் போயித்தான் விட்டது.

மீண்டும் நாளை . . .

Advertisements