நிலாச்சோறு (24-02-2012)

நிலாச்சோறு (24-02-2012)

மீண்டும் நிலாச்சோறு மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எதிர்பாராத சில நிகழ்ச்சிகள் என்னை இந்த பக்கத்திலிருந்து கொஞ்ச நாட்களுக்கு விலக்கி வைத்திருந்த்து. இதோ மீண்டும் . . .

அது இது எது

டிசம்பர் மாதம் ஊரில் இருந்த போதிலும் கூடன்குளம் அணு உலைக்கெதிரான போராட்ட்த்தில் பங்கு கொள்ள முடியவில்லை காரணம் பலதும் இருந்த போதிலும் நான் கலந்து கொண்டேன் என்பதற்காக போராட்டகார்ர்களுக்கு பஹ்ரைன் நாட்டிலிருந்து நிதி வருகிறது என்ற பேச்சு கிளம்பாமல் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். பின்ன என்ன்ங்க இந்த சிங் இருக்காரே அடிக்கடி அமெரிக்கா போறார் அப்புறம் கூடன்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்காவிலிருந்தே நிதி வருகிறது என்கிறார், ஒரு மண்ணும் புரியல, அங்கிருந்து பணம் அனுப்ப்புவர்களை சந்தித்து அது உண்மையா என்பதை அறிந்து கொள்ளத்தான் இவர் அமெரிக்கா போறாரோ என்னமோ . . . போராட்டம் என்பது எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை முன்வைத்து நடக்கிறது. இதற்கு எதுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வர வேண்டும் . . . எதுக்குமே வாயை திறக்காத பிரதமர் இதற்கு மட்டும் அமெரிக்காவை குற்றம் காட்டி பேசுவது ஏன்?

முகப்புத்தகத்தில் நான் படித்து ரசித்த ஒரு செய்தியை இங்கே தருகிறேன்,

இதற்கு யார் பதில் தர போகிறார்கள் . . . இதற்கு மேலும் கூடன்குளத்திலும் அணு உலை வைத்து மின்சாரம் தேவை என்பதாக வரும் பிரச்சாரமும் , விளக்கு ஏந்தி காங்கிரஸ்கார்ர்கள் நட்த்தும் நாடகமும் எதுக்குங்கிறேன்.

கலக்கல் போலீஸ்

என்ன தைரியம் இருந்திருந்தா இந்த 5 பசங்க சேர்ந்து ஒரு மாத்த்துக்குள்ள இரண்டு வங்கிகளில் இருந்து இவ்வளவு பணத்தையும் கொள்ளை அடிச்சிருப்பாங்க, அதவிட நம்ம போலீஸுக்கு தண்ணி காட்டிட முடியுமா? யார்கிட்ட அம்மா உத்தரவு போலீஸ் அதிரடி நடவடி என சும்மா வளைச்சி வளைச்சி பின்னிட்டாங்கல்ல, பாவம் நல்ல படிப்பு படிச்சிட்டு கெட்ட்த்தனமா யோசிச்சி வம்பா செத்துப்போனான் . . ம் ம் என்ன செய்ய .  .

அதுசரி பணம் மொத்தமும் கிடைக்கலயாமே?

யாருக்கு யாரோ

சும்மாவா எல்லாரையும் வெளியே அனுப்பினாங்க அம்மா, அதுலயும் ச்சிகலா நீதிமன்றம் போறதுக்கு முன்னாடி போட்ட திட்டமெல்லாம் சூப்பரா ஒர்க் அவுட் ஆகிடும் யாருமே நினைச்சிருக்க முடியாது, ஆனா பாருங்க இப்ப என்னாச்சு, எல்லாமே எனக்குத்தான் தெரியும் ஜெ வுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு அந்த அம்மா நீதிமன்றத்துல அழ , . . போற போக்கை பார்த்தால் ஜெ மீது ஒரு குற்றமும் சே சே ஒரு வழக்குமே இருக்காது. வழக்கே இல்லாத குற்றமே செய்யாத அரசியல்வாதியாக அம்மா மட்டுமே இருப்பார். . .

ஆமா அம்மாவுக்கு வேற ஆசை வந்து ரொம்ப நாளாச்சே, இப்ப அதுக்கும் சான்ஸ் வரும் போல் தெரிகிறதே . . முதல் தென்னிந்திய பிரதமராக வர வாழ்த்துக்கள் . .(நடக்குமா)

நம்பிக்கைதான் வாழ்க்கை

ச்சிகலாவின் ஒப்புதல் வாக்குமூலம் – எல்லா வழக்கிலிருந்தும் ஜெ விலக்கு – வழக்கை இன்னும் கொஞ்ச நாளைக்கு தள்ளிவைக்க திட்டம் – பிரதமர் பதவிக்கு அம்மாவின் காய் நகர்த்தல் – பிரதமர் பதவி – ச்சிகலாவை விடுவித்தல் – தோழிகளின் சங்கம்ம் . . .

அப்போ கச்சத்தீவு கண்டிப்பா கிடைக்கும்

சினிமா பக்கம்

எனக்கு அப்பவே தெரியும் , இந்த சினிமா நடிகர்களுக்கு கிரிக்கெட் மேட்ச் வைக்கலாம் தப்பே இல்லை, ஆனா அதுலயும் இந்த நடிகைகளை கொண்டு வந்து கூத்தடிச்சாங்களே அய்ய்ய்யோ, இப்ப பாருங்க அவங்க இரண்டு பேருக்கும் காதல் இவங்க இரண்டு பேருக்கும் காதல்னு கிளப்பி விட்டுகிட்டு திரியறாங்க . . இப்ப பாவனாவுக்கு காதல் வந்திருச்சாம்.!

அன்ன்யா பேர் தெரியாம காதலிச்ச (எங்கேயும் எப்போதும்) இந்த பொண்ணு இப்ப ஆள பத்தியே தெரியாம கட்டிகிட சம்மதிச்சி இப்படி ஆகிடுச்சேன்னு பாத்தா, வீட்டுக்காரங்க வேண்டாம்னு சொன்னபிறகும் இல்ல அந்த ஆளுதான் வேணும் அடம்பிடிக்குது . . ம் ம் ம் எப்படியாவது நல்லா இருந்தா சரி .

கோச்சடையானுக்கு வாழ்த்துக்கள், நாயகி விசயத்துல முதல்ல குளம்பினாலும் ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க , ஆனாலும் தீபிகாவுக்கு இந்த வாய்ப்பு போக்க்கூடாதுன்னு பாலிவுட்டே கங்கணம் கட்டி இறங்கி விளையாடுது, ஆனாலும் பாவம் பொண்ணு “பேக்ரவுண்டே” இல்லாட்டி கூட நல்லா வந்துடுச்சின்னு நிறைய பேருக்கு பொறாமை.

பயப்படாதம்மா கோச்சடையானுக்கு நீதான் ஹீரோயின்

எந்திரனுக்கு பிறகு தேவையே இல்லாம ஒரு படம் பண்ணி சூடு பட்ட சங்கர், ஒரு மாதிரியா உளற ஆரம்பிச்சிட்டாரு . . முதல்வன் ரஜினிக்காக உருவாக்கினார் சரி, இந்தியனும் அவருக்காகத்தான் செய்தேன் , விட்டா காதலன் படம் கூட ரஜினியை மனசுல வச்சித்தான் செய்தேன்னு சொல்லுவாரே இந்த ஆளு ., . என்னாச்சு மிஸ்டர். சங்கர் . . அடுத்த படம் என்ன பண்ண போறீங்க. . .

கிரவுண்ட்ல விளையாடுங்கடா

நம்மாளுங்க இங்கிலாந்து அடிபட்ட பின்னரும் அதே மாதிரியே இருக்காங்க, ஆஸ்திரேலியாவிலயும் அடிபட்டாச்சு இன்னுமா அடி வேணும் , இனியாவது இந்த தோல்விகளிலிருந்து மீண்டு அடுத்த இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்குள் சென்று விடலாம். அதில் கவனம் வைக்காமல் நீ நான் என என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு . .

சேவாக் இந்த தொடரில் ஒரு மெட்சில் விளையாடினார் இரண்டு மேட்சிகளில் சொதப்பினார் , டெண்டுல்கர் சத்த்தை தேடித்தேடியே 30 ரன்களை கடந்தபாடில்லை, இந்த லட்சத்தின் இந்த இருவரையும் மாற்றி மாற்றி பயன்படுத்த தோனி நினைத்த்தே தவறு . . எந்த மேட்ச் என்றாலும் துவக்க ஆட்டக்கார்ர்களின் நல்ல துவக்கமே சிறந்த்தாக அமையும் வெற்றிக்கும் அதுவே வாய்ப்பாக இருக்க முடியும். எனவே அதில் குளப்பமில்லாமல் இருந்தாலே போதும்.

டேய் அடுத்த இரண்டு மேட்சாவது ஜெயிச்சிருவீங்கல்ல , ஜெயிக்கலன்னா டின் கட்டிடுவாங்க . . .

படித்த்தில் பிடித்த்து

வார இதழ் ஒன்றில் படித்த்து

“நீ சிரிக்கிற ஓவ்வொரு வினாடியும் உனக்கு பின்னாடி நானிருப்பேன்”

ஏன் தெரியுமா

அந்த கொடுமையை யாரு முன்னாடி நின்னு பாக்குறது

சிரிக்க

அம்மா: எதற்காக டா அழுதுக்கிட்டே வர்ற?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் பேது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா..

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!

இந்த வார டிரைலர்

எல்லா இடமும் கலக்கு கலக்குன்னு கலக்குற ”நீதானே என் பொன்வசந்தம்” டிரைலர் பாத்து சலிச்சிருப்பீங்க

இந்த படம் அப்படி இல்லை . .

வந்த புதுசுலே இந்த பையன் ஏதாவது பண்ணுவான் என எதிர்பார்த்த இவரின் அடுத்த படம் கழுகு . .வித்தியாசமான கதைக்களம் . .டிரைலரே கலக்கி இருக்காங்க பார்ப்போம் படம் என்ன சொல்லுத்துன்னு

அடுத்த்து

நிக்கொலஸ் கேஜ் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர், இவரது சின்ன சின்ன அசைவுகள் கூட அசாதாரணமாக இருக்கும் , இவரது கோஸ்ட் ரைடர் முதல் பாகம் தவிர “பேஸ் ஆப்” ல் ஜான் டிராவல்டோவுடன் இவர் நட்த்தும் கலக்கல் விளையாட்டு மிகவும் பிடித்த்து , இதோ இவரது கோஸ்ட் ரைடர் இரண்டு

மிகவும் எதிர் பார்ப்பில் இருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடியின் பாடல் வெளியீடு இன்னும் இரு தின்ங்களில் . . அப்பவே டிரைலர் வெளியீடும் . . ம் ம் சந்தானம் ராஜேஷ் கூட்டணி மீண்டும் ஜெயிக்குமா?

இந்த வாரம் பார்க்கத்தகுந்த படம்

பலவிதமான விமர்சன்ங்கள் வந்த போதிலும் மிக மென்மையான ஒரு திரைக்கதை இயல்பான கதாபாத்திரங்கள் என எளிமையான முறையில் ரசிக்க ஒரு படம் . .

மீண்டும் சந்திப்போம் . .

ரெஜோலன்.நெ.

Advertisements