மகிழ்ச்சியும் கோபமும்

என்னடா இது தலைப்பே ஒரு மாதிரியா இருக்கேன்னு நினைக்காதீங்க

விசயம் வேற ஒண்ணுமில்லை நம்ம இந்திய அணி தனது கேவலமான முதல் தோல்விக்கு பிறகு விளையாடிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மிக அபாரமாக விளையாடி தனது பேரை மீண்டும் நிலை நிறுத்த முயன்றுள்ளது அது மகிழ்ச்சி.

அதிலும் எனது விருப்ப ஆட்டக்காரர் சேவாக் நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் இரண்டு போட்டிகள் விளையாட உள்ளது அதிலும் தங்களது திறமை இந்திய அணியினர் வெளிக்காட்ட வேண்டும்.

அதே சமயத்தில் கிரிக்கெட் என்ற ஆட்டத்தின் மேன்மைத்தனத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கடைசி பந்தை நோ பாலாக வீசிய ரந்திர் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு அவமானம் என்றே நான் கருதுகிறேன். இது புதிதல்ல இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் சச்சினுக்கான பந்தை இதே மனநிலையில் வீசியவர் மலிங்கா. ஏன் இப்படி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

உண்மைதான் ஒரு அணி தனக்கு எதிராக விளையாடும் ஒரு ஆட்டக்காரர் 100 ரன்களை பெறுவதை விரும்பாதுதான். அதை தடுக்க அனைத்து வழிகளிலும் முயலும் தான் . அது போராட்டம் என்னும் வகை. அதைப்போல் ரந்தீர் தனது ஆறு பந்துகளையும் சேவாக்கிற்கு வீசி அவரை ரன் சேர்க்க இயலாத படிக்கு முயற்சி செய்து இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு வேண்டுமென்றே இப்படி நடந்து கொண்டது கிரிக்கெட் உலகிற்கு அழகில்லை.

அப்படி நடந்த போது தனது அணி வெற்றி பெற்றதே பெருமை என்று (தனக்குள் வேதனை இருந்தாலும்) சொன்ன சேவாக்கிற்கு வாழ்த்துக்கள். எதற்கும் வருந்தாத சேவாகின் முகம் அன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற வரும்போது வாடி இருந்தது. அதை கண்ட எல்லாருக்குமே புரிந்திருக்குமே இலங்கையின் கையாலாகதனம்.

எப்படி இருந்தாலும் அடுத்த ஆட்டத்தில் ரந்தீருக்கு பதிலடி உண்டு என்பது மட்டும் உண்மை. 10 ரன்னில் அவுட்டாகியாலும் பரவாயில்லை ஆனால் ரந்தீர் பந்துகளை சேவாக் அடித்து துவைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

சிறப்பு செய்தி: எந்திரன் பாடல்கள் பல மொழிகளில் வெளியாகி எல்லா இடங்களிலும் முதல் இடத்தை பிடித்திருப்பது ஒரு சாதனை. அடுத்த சன் நெட்வொர்க் தங்களது வியாபாரத்தை துவங்கி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.. சனி ஞாயிற்றுகிழமை என இரண்டு நாட்களாக எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒளிபரப்பி வருமானம் பார்த்தார்கள் அதன்பிறகு அடுத்த ஞாயிற்றுகிழமை எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழா உருவான விதம் என்று ஒளிபரப்பினார்கள் . .அடுத்தது என்ன???

Advertisements