மகளிர்தின ஸ்பெஷல் – தங்கைகள்

மகளிர்தின ஸ்பெஷல் – தங்கைகள்

Image

அம்மா என்ற பெண் எல்லார் வாழ்க்கையிலும் செய்து கூட்டும் தொண்டு அனைவரும் அறிந்த்தே. அம்மாவை தவிரவும் நம் வாழ்க்கையில் பல பெண்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் . . அவர்களை பற்றி இங்கே

என் இரு தங்கைகள்

அண்ணன் தம்பி எனக்கில்லை என்ற போதிலும் தங்கைகள் இரண்டு பேர். பாசமும் நேசமும் எங்கள் மூவருக்கும் அதிகம், அண்ணனை பற்றி பேசியே தன் கணவரிடம் இன்றளவும் சண்டை பிடிக்கும் முதல் தங்கை பாசத்தில் என்னை விட மூத்தவள். இன்றளவும் அவருக்கு என்னை பிடிக்காமல் போனதற்கும் அவளின் பாசமே காரணம். நானும் சளைத்தவனல்ல . .

மூக்குத்தி போட்டுக்கொள்வது அதீத விருப்பமாக இருந்த காலத்தில் என் முதல் வருமானத்தில் என் தங்கைக்கு என தங்கத்தில் மூக்குத்தி வாங்கி போடச்சொன்னா, மூக்கு குத்தும் போது இரத்தம் வர எனக்கும் மூக்கு குத்த வந்தவருக்கு நடந்த சண்டை இன்னும் நினைவில் வருகிறது (இரத்தம் வருதுன்னா அந்த மூக்குத்தியே போட வேண்டாம்னு அத தூக்கி எறிந்த்து தனிக்கதை)

ஏறக்குறைய அவளது திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் மனம் விட்டு இருவரும் பேசிக்கொள்கிறோம்.

அடுத்தவள், என் மேல் உனக்கு பாசமே இல்லை உனக்கு உன் தங்கையிடம்தான் பாசம் என்று மூத்த தங்கை குற்றம் சுமத்தும் அளவிற்கு இவளோடு எனக்கு பாசம் உண்டு, அவளுக்கும் அது போல்தான், எப்போதும் நாங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு முதல் தங்கையை கலாய்ச்சிகிட்டே இருப்போம். ம் ம் இப்பவும் அப்படித்தான்.

Image

என் தந்தையுடனே சண்டை போட்டிருக்கிறேன் அவளை கடிந்து கொண்டமைக்காக. ஓவர் செல்லம். அவள் கேட்ட்து அவளுக்கு கிடைத்துவிடும், அது என்னவோ தெரியல அவள் மீது மட்டும் அப்படி ஒரு பாசம், இப்போது திருமணம் முடிந்து நன்றாக இருக்கிறாள் எனினும் இன்னும் அவள் நன்றாக இருக்க வேண்டுமென நினைத்து கொண்டிருக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் மிக தைரியமாக என்னிடம் வாதம் செய்ய அவளால் முடியும் .

நான் பஹ்ரைனில் இருப்பதால் எல்லா ஞாயிற்றுகிழமைகளில் காண்ப்ரன்ஸ் முறையில் மூவரும் பேசிக்கொள்கிறோம் .

தங்கைகளின் பாசமும் அன்பும் மற்ற பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் கற்று கொடுத்த்து,

இப்படி இரு தங்கைகளை தந்த ஆண்டவனுக்கு நன்றி.

தங்கைகளுக்கு வாழ்த்தும் பாராட்டும் . .

Advertisements