வாழ்த்துக்கள் (ஒலிம்பிக் ஸ்பெஷல்)


வாழ்த்துக்கள் (ஒலிம்பிக் ஸ்பெஷல்)

படம்

வாழ்த்துக்கள் என்பது என்னையும் சேர்த்து நம் இந்தியர்கள் அனைவரையும் கவுரமாகவும் கொஞ்சம் தெம்பாகவும் ஒலிம்பிக் பார்க்க வைத்த, பார்த்த்தினால் பெருமைப்பட வைத்த அந்த நான்கு வீர்ர்களுக்கும் தான்.

படம்

முறைப்படி, மக்கள் தொகையில் முதலிட்த்தில் இருக்கும் சீனாவிற்கு அடுத்த இட்த்தில் இருக்கும் இந்தியா, ஒலிம்பிக் தங்கபதக்க வரிசையிலும் சீனாவிற்கு அடுத்த்தாக இருக்க வேண்டும் என்ற காலங்காலமான சப்பைக்கட்டு கட்டாமல்,

படம்

பல்வேறு கயிறுகளால் எங்கள் மக்களின் செயல்பாடுகளை, வெற்றிகளை தடை போட்டுக்கொண்டிருக்கும் அரசியல், மதம், ஜாதி, போன்ற தீய சக்திகளிடமிருந்து போராடி இப்பதக்கங்களை பெற்று தந்த்தனால் மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் . . .

படம்

மற்ற நாட்டிலிருந்து வரும் வீர்ர்கள் ஒரு ஒலிம்பிக் போட்டியை எதிர் கொள்ள வருகின்றனர் ஆனால் இந்தியாவில் அய்ய்ய்யோ . . . சரி சரி இதை எழுதி என் மகிழ்ச்சியை கெடுக்க நான் விரும்பவில்லை . .

படம்

என்ன ஒரு சாதனை . .

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை நாம் எடுத்த பதக்கங்களை விட இந்த ஒலிம்பிக்கில் எடுத்த பதக்கங்கள் தான் அதிகம் . . நான்கு, இன்னும் வரும் என்பது என் நம்பிக்கை . . மல்யுத்த்த்தில் கனடாக்காரியோடு கீதா மோதும் போது என் பலமும் கீதாவுக்கு போய் சேரட்டும்.

அது போல் லூக்கா டிண்டுவும் ஓடும் போது இந்தியர்கள் அத்தனை பேருடைய நம்பிக்கையும் ஓடும் என்பதும் அவர் ஜெயிப்பார் என்பது நம்பிக்கை.

படம்

இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று தந்த வீர்ர்களில் பெண்கள் அதிகம் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் . . அதே சமயத்தில் சில பெண் வீர்ர்கள் செய்யும் இண்டெர் பாலிட்டிக்ஸ் பற்றி என்ன சொல்வது. . . ஒலிம்பிக் போட்டிக்கு போகும் முன்பே விளையாட்த்துவங்கிய சானியா . . . ஒலிம்பிக் போட்டிகளின் போது டென்னிஸ் மறந்து போனார் . . அந்த அளவுக்கு ஒலிம்பிக் குழுவில் இடம்பெற வேண்டிய விளையாட்டு இருந்த்து . . இப்படி நாட்டிற்காக பதக்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் சுய லாபங்களுக்கான வீர்ர்களை பரிந்துரை செய்வதை இந்திய ஒலிம்பிக் குழு தவிர்க்க வேண்டும் . .

படம்

இன்று வேதனை தரக்கூடிய சில பெண் தலைவர்கள் நம்மிடையே இருந்த போதிலும் அம்மா , மனைவி , அக்கா , தங்கை என்ற வகையில் மட்டுமல்லாது வீராங்கனைகளாகவும் நம்மை பெருமைப்படுத்திய பெண் இனத்திற்கு மரியாதை செலுத்துவோம் . .வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவோம் . . .

நடைபெற உள்ள போட்டிகளில் இன்னும் இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் பட்சத்தில் 6 பதக்கங்களில் 4 பதக்கங்கள் பெற்று பெண்கள் ஆண்களை 33 சதவிகித்த்தில் கொண்டு தள்ளுவார்கள் என்றே நம்புகிறேன் . . . .

மீண்டும் வாழ்த்துக்களுடன்

நெ.ரெஜோலன் . . .

Advertisements

One comment on “வாழ்த்துக்கள் (ஒலிம்பிக் ஸ்பெஷல்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s