திருமணநாள் வாழ்த்துக்கள்


திருமணநாள் விழா செய்தி

இயற்கையின் பல விசயங்களை கண்டு வியந்து நின்றிருக்கிறேன். ஒளிக்கென சூரியன், தாங்கிக்கொள்ள பூமி, அதே சமயத்தில் இந்த பூமிக்கும் அந்த சூரியனுக்குமான தொடர்பாக பல பல உயிர்கள் . .வியந்திருக்கிறேன் இறைவனின் படைப்பாக பார்க்கப்பட்டாலும் சரி இயற்கையின் எழிலாக எழுதப்பட்டாலும் சரி . . இவை அனைத்துமே ஆச்சர்யங்கள் தான் . .

Image

அத்தனை ஆச்சர்யங்களிலும் வியக்க கூடியதாக இருப்பது ஒவ்வொன்றிற்கும் உள்ள தொடர்புதான் . . . பூமியிலிருந்து எது வேண்டுமானலும் அதற்கு சூரியனின் உதவி தேவைப்படுகிறது. வானில் இருந்து மழை வேண்டுமானால் கடலின் உதவி தேவைப்படுகிறது இப்படி இயற்கை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் உதவியோடுதான் உலாவுகிறது

சரி சரி இங்கே சொல்லவந்ததை சொல்லி விடுகிறேன், திருமணநாள் விழாக்கள், இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று என்பேன் நான். பலரும் திருமணம் என்பதின் மகத்துவம் புரியாமலே இருக்கிறார்கள். ஒரு வேளை அன்றைய காலகட்டத்தின் சிறப்பான நிகழ்வுகளோடு திருமணம் இப்போது நடப்பதில்லை என்பதால் என்று கூட நினைக்க தோன்றுகிறது . ஆனால் ஆண் பெண் என்ற இரு எதிர்பாலினத்தை ஒன்றுக்கொன்று உறவாக உதவியாக துணையாக என்று இயற்கையே படைத்துவிட்ட மேன்மையான ஒன்றுதான் திருமணம். .

Image

அஜீத் ஒரு சினிமாவில் சொல்லுவார்

“ நான் தானா வளர்ந்த காட்டுமரம்“ என்று . . .

பல  சமயங்களில் பலரும் நினைத்து கொள்ளக்கூடிய வரிதான் அது, அக்காலகட்டத்தில் தேவைப்படுவது சரியான வழிகாட்டுதலும் தோள் தர முடிகிற அன்பும் மட்டுமே,

அப்படியான, ஒரு மாதிரியான காலகட்டத்தில் தான் “அவள்” என் வாழ்க்கையில் நுழைந்தாள், நிச்சயமாக சொல்லமுடியும் அது இயற்கையின் விளையாட்டு, இவனுக்கு இவள்தான் என்பது நிச்சயமாக மறுக்க முடியாதது. எல்லாருக்கும் அப்படித்தான் என்பதும் என் கருத்து.

காட்டுமரமாக இலக்கில்லாமல் வளர்ந்து நின்ற என்னை சீர்திருத்தி கிளைகளை சரி படுத்தி முறையான வளர்ச்சிதனை தந்தவள் அவள். உரமாக அவள் அவளையே தந்தாள் என்றால் மிகையில்லை என்பேன். என் வளர்ச்சி அவளின் வெற்றி என்பதாக மட்டும் முடிந்துவிடுவதில்லை. என்னை நானாக்கியவள் அவள்,

பல சமயங்களில் நான் நினைத்து பார்க்கிறேன், என்னைப்போன்ற வீம்புக்கு மண் அள்ளித்தின்னும் ஒருவனை இன்று ஓரளவிற்கேனும் பொறுமையும் நிதானமும் கொண்டவனாக மாற்ற வேண்டுமானால், அவளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் . .

திருமணநாள் என்பது எப்போதும், அவளுக்கு நன்றி செலுத்தும் நாளாகத்தான் நினைக்க தோன்றுகிறது. நன்றி என்பதை ஒரு வார்த்தையில், ஒரு முறை சொல்வது என்பது உற்சாகமானதுதான் இருப்பினும் வாழ்க்கை என்பதின் முழுவதிலும் நன்றியாக, நன்றி செலுத்தும் விதமாக அவள் அமைத்து தந்த பாதையில் அவளுக்கே பிடித்தவண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் நான் அவளுக்கு தரும் ஒவ்வொரு திருமணநாள் பரிசாக இருக்கும், இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன் . .

Image

இயற்கை

இணைத்தபோதிலும்

இரண்டும் ஒன்றான

இதயத்தோடு

இனிதே

இனிவரும் காலமும்

இருந்திடுவோம்  – என்

இதயராணியே. . .

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் . . .

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s