தேவை முடிவு, பேச்சுவார்த்தை அல்ல . . .


 

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும் எனவும், எங்களது எதிர்காலத்தை நிலைநிறுத்த வேண்டி எங்கள் மக்களின் போராட்டம் பல விதமான சோதனைகளுக்கிடையேயும் இன்றோடு ஒன்பது நாட்களை கடந்துள்ளது.

எங்கள் போராட்ட்த்தை மிகமிக சாதரணமாக நினைத்த இந்தியாவின் பல தலைவர்களையும் எங்கள் மேல் திருப்புவதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்ற வார்த்தையால் வாழ்த்தினாலும் வெளியில் சொல்லமுடியாத நன்றியுணர்வோடு நன்றி சொல்கிறோம்.

பாதுகாப்பு குறித்து பல கருத்துக்களை வெளியிட்ட முதல்வர் கூட இப்போது எங்கள் மக்கள் மேல் சிறிய அக்கறை கொண்டிருக்கும் இந்த நேரத்தில்  . .

அணுமின் நிலையத்தின் பாதுகாப்போ, எங்கள் மக்களின் தொழிலும், விவசாயமும் பாதிக்குமே என்ற அச்சமோ இந்த போராட்ட்த்துக்கு காரணமல்ல. . . இந்திய பிரஜைகளாக வாழும் பொதுமக்களின் எதிர்காலத்துக்கான போராட்டமே இது.

வளர்ச்சி என்பது, பொதுமக்களுக்கான தேவைதானே, அல்லது பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலான அல்லது அவர்களது நலனில் அக்கறை இல்லாத செயல்பாட்டால் வரும் வளர்ச்சி . . . யாருக்கு தேவை, கொஞ்சம் யோசித்து பாருங்கள். .

இதற்கிடையில், எம்பகுதி மக்களின் போராட்ட்த்துக்கான ஆதரவுக்காக, தங்களை தாங்களே போராட்ட்த்தில் உட்படுத்தி கொண்ட லட்சகணக்கான மக்களின் ஆதரவையும் அன்பையும் என்று மறக்க முடியாது.

பல அரசியல் கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்களும், மக்களின் பொதுநலனுக்காக போராடும் சமூக ஆர்வலர்களும் வந்து தங்கள் ஆதரவை தந்தார்கள் அவர்களுக்கும் நன்றி, எனினும் அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதிகளே எனவே அவர்கள் மக்களுக்காக போராட வேண்டும்.

மத, ஜாதி களை கடந்து ஒன்றிணைந்து போராடும் என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி.

இத்தனை பேருக்கு நன்றிகள் சொன்னாலும் . .

நேற்று .நமது போராட்ட்த்தை ஆதரித்து நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு குளுமிய உடல்வளர்ச்சிகுறைபாடு உள்ள சகோதர சகோதரிகளின் ஊர்வலமும், அவர்களின் ஆதரவும் கண்களில் கண்ணீர் வர வைத்த்து. அவர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்ல முடியும் . .

மனவளர்ச்சியிலும், மக்களின் வளர்ச்சியிலும் குறைபாடுள்ள தலைவர்களால் நாம் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். . . அதே நேரத்தில் இவர்களின் இந்த செயல் இறையையும் மீறிய செயல் . .

எங்களுக்கு இது தெய்வம் தந்த்து, அது இயற்கை . . செயற்கையாக எங்களைப்போல் ஆயிரமாயிரம் மக்களை உருவாக்கிவிட வேண்டாம் என அவர்கள் கெஞ்சுவது போல் உள்ளது அவர்களது ஆதரவு . .

பேச்சுவார்த்தை என்ற பன்னில் அக்கறை வார்த்தைகளால் தேன் தடவி எங்களை ஏமாற்ற எண்ணாமல், பொதுமக்களின் தேவையான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். . .

அணுமின் நிலையத்தை மூடிவிட்டால் அதன் இழப்பு என்பது ஒரு சில கோடிகளே, அது ஒன்றும் அத்தனை பெரிய விசய மில்லை என்பதை நான் சொல்லி தெரிய வேண்டும் என்பதல்ல . .அதே சமயத்தில் அதன் செயல்பாட்டால் கிடைக்கும் நலன்களை விட இழக்க இருக்கும் விசயங்கள் கோடிகளை விட ஏன் விலைமதிப்பற்ற பொதுமக்களின் வாழ்க்கை என்பதை அரசு உணர்ந்து முடிவு எடுக்கட்டும் . .

நல்ல முடிவை எண்ணி காத்திருக்கும் லட்சகணக்கான மக்களில் ஒருவன் . . .

 

படங்கள் உதவி :  கூடல்பாலா . . .

நன்றி பாலா

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s