நாங்களும் மனிதர்கள்தான்


கூடன்குளத்தை சுற்றியுள்ள கிட்டதட்ட 30 கிராமங்களின் எதிர்கால பாதுகாப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு வரும் என் உறவுகளுக்கு நன்றியும் வணக்கமும்.

இன்றோடு நான்கு நாட்களாகிவிட்ட நிலையில், 127 தியாக உள்ளங்களும் அவர்களுக்கு ஆதரவாக தினமும் ஆயிரமாயிரம் ரத்த பந்தங்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டும், போராட்டத்திற்கான ஆதரவை தெரிவித்து கொண்டும் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் என் நன்றி. . .

பல தலைவர்களும் அரசியல்வாதிகளும் வந்து போய்க்கொண்டிருந்தாலும், அரசு மட்டும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் உயிர்களுக்கு விலை இல்லையா என்று கேட்பதை விட , நாங்களும் இந்தியர்கள்தானே என்ற கேள்விதான் எங்கள் நெஞ்சங்களில் எழுகிறது. . .

பலரும் இதனால் ஆதயம் ஈட்ட தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்தே வைத்திருக்கிறோம்,

அவர்களுக்கெல்லாம் ஒன்று:

இந்த போராட்டம் அங்கே குழுமியிருக்கும் நபர்களுக்கும் மட்டுமல்ல, உங்களுக்கு சேர்த்துதான், விளைவுகள் எழாதவரை தமிழன் தூக்கம் கலைவதில்லை என்பது பல நூற்றாண்டுகளாக கண்டு கொண்டிருக்கும் உண்மை, இனியும் நீ தூங்கி கொண்டிருந்தால் . . ம் ம் ம் சொல்வதற்கு ஒன்றுமில்லை . .

ஒருசிலர் நினைப்பது போல, விபத்து ஏற்ப்பட்டால் மட்டுமல்ல, அணு உலை இயங்க துவங்கினாலே வரும் தீமைகளை நாமும் தெரிந்திருக்க வேண்டும் . . .நண்பர் கூடல்பாலா உதவியுடன் இதை இங்கே சுட்டி காட்டுகிறேன் . .

அணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் …

∙ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன. வழக்கம் போல பணம் சம்பாதிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் முதலாளித்துவம் அணு உலைகளால் பாதிப்பில்லை என்று கூறி வருகிறது. ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இனியும் அணு உலைகளை மின் தேவைக்காக நம்பியிருப்பது முட்டாள்தனம் என்று கூறி வருகிறார்கள். பல்வேறு விதத்திலும் ஆராயும்போது எந்த ஒரு வகையிலும் அணு உலைகள் நாட்டிற்கோ, மக்களுக்கோ நன்மை தருபவை இல்லை என்பது விளங்குகிறது.∙

1. அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன. செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள்
குறைபாட்டோடு பிறக்கின்றன.

2. அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000 முதல் 5000 ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .

3. அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர்
சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும்
இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும். அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .

5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி) மிக அதிகம். மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )

6. 30 வருடங்கள் மட்டுமே மின்சாரம் தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .

7. விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .

8 . அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான். மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம்

9. எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்.

10. ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான். ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது. அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .

இப்போதெங்கிலும் புரிந்து கொள்ளுங்கள் . . நாங்கள் போராடுவது இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல , எங்கள் மண்ணின், மக்களின் எதிர்காலத்துக்கும் சேர்த்துதான் . .

எங்களையும் மனிதர்களாக மதிக்காத இந்த அரசின் பார்வை எங்கள் மேல் படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் . . .

அது எங்கள் மரணித்தில் சென்று முடிந்தாலும் . . .

Advertisements

3 comments on “நாங்களும் மனிதர்கள்தான்

  1. எல்லோருக்காவும் நீங்கள் செய்கின்ற உங்களுடைய இந்த மஹத்தான தியாகத்துக்கு நான் தலை வணங்கி என்னுடைய மன்மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s