மங்காத்தா – சில சுவாரசியங்கள்


மங்காத்தா – சில சுவாரசியங்கள்

ரொம்ப நாளாவே அஜீத்துக்கு நேரம் சரியாகவே இல்லை, ஒரு வாலி மாதிரி நடிக்க வாய்ப்பான படம் அமையவில்லை , ஒரு அட்டகாசம், வில்லன் மாதிரி ரகளையான படமும் அமையவே இல்லை . . . மேலும் சமீபத்திய வரிசையான ஹிட்டில்லாத படங்கள் இப்படியான வேளையில்தான் 50 வது படம்.

மங்காத்தா ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த வேளையில், மங்காத்தா பற்றிய சில சுவாரசியங்கள்.

50 வது படம் கண்டிப்பா நல்ல ஒரு ஹிட் படமா இருக்கணும்னு தல ரசிகர்கள் விரும்ப தல யும் கண்டிப்பா சூப்பரா ஒரு படமா அமையணும்னு நினைச்சி கிட்டு இருந்த நேரத்துலதான், நம்ம பிரேம்ஜீ மூலமா வெங்கட்டை பிடிச்சி ஒரு வழியா இந்த மங்காத்தாவை 50 வது படமா பண்ண முடிவு செய்தாங்க . .

டெக்னாலஜியா பாத்தா, ஒளிப்பதிவும் இசையும் மிக சிறந்த வகையில் இருந்த்து முதல் சுவாரசியம். . இது போல் ஒரு கதைக்கு ஒளிப்பதிவு மிக மிக முக்கியம் , அதை மிக திறமையாக பயன்படுத்தி கலக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசை, ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்ட்து. பின்ன்னியிலும் கலக்கி இருக்கிறார் யுவன்.

அடுத்த்து சண்டைக்காட்சிகள், செம ஹாட் மச்சி, அதிலும் கிளைமேக்ஸுக்கு முன்னாடி வரும் பணம் வைத்திருக்கும் குடோன் பைட், துப்பாக்கியிலுருந்து வரும் தோட்டாக்கள் செம கலக்கல், கிளைமேக்ஸ் பைட்டும் சூப்பர். . .

திரைக்கதைதான் இந்த மாதிரி கதையில் முக்கியம், ஆனால் கிரிக்கெட் சூதாட்ட கதை என்பதால், அது பற்றி மிக விபரமாக ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்தணும் என்பதால் முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் வீக்,

நடிப்பு . . . நடிப்பு பற்றி சொல்லணும்னா, வெங்கட் படம் எடுத்தா அதில் நடிக்க வாய்ப்பும் இருக்காது அது தேவையும் இருக்காது, ஆனா இதில் அப்படி இல்லை, ஒரு நட்சத்திர பட்டாளாமே இருந்தாலும் ஒவ்வொருத்தருடைய நடிப்பும் நல்லா இருக்கு, இரண்டு சீன்ல வந்தாலும் ஆண்டிரியா கூட நடிச்சிருக்கார்.

காட்சிகள் அமைப்பு, மிகவும் சிரத்தை எடுத்து பண்ணி இருக்காங்க, அந்த தியேட்டர் செட்டப், பணம் வண்டி மாத்துறது, மத்த பசங்கள கொல்றதுக்கு அஜீத் போடும் செஸ் ப்ளான், அஞ்சலி வைபவ் கல்யாணமும் அந்த பாட்டும், குடோன் பைட், கிளைமேக்ஸ் என எல்லாம் அசத்தலோ அசத்தலான இயக்கம்.

தியேட்டரை காட்டும் முதல் காட்சியில் விஜய் நடித்த படம் திரையில் ஓடறது, (ஒரு ரசிகர் இவனை ஏன் காட்டுறாங்க என்றார்) சந்தானம் பெயரை அஜீத் சொல்றது, சிம்பு மாதிரி பிரேம்ஜீ விரலாட்டுறது, எல்லாத்துக்கும் மேலே சூப்பர் ஸ்டாரையும் மரியாதை செய்கிறார் அஜீத்.

சுவாரசியத்திற்காக அஜீத் ஓட்டும் அந்த பைக் காட்சியில் தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது.

கிளைமேக்ஸில் அஜீத் சுடப்பட்டு சாகும்போது, அதே ரசிகர் செம கடுப்பாகி போனார், (என்னடா சுட்டுபுட்டாங்க என்றார்), திரும்ப வரும் அஜீத் க்கு சிவாஜியில் திரும்ப வரும் எம்ஜீஆர் க்கு கிடைத்த மாதிரியே வரவேற்ப்பு. ரஜினி மாதிரி இல்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் பரபரப்பாக காட்டி இருக்கலாம்.

மொத்த்த்தில் ஒரு பெரிய கூட்ட்த்துக்கு நடுவிலும் அஜீத் பெர்பாமென்ஸ் தனியா தெரியுது செம கலக்கல் காரணம், மத்த படங்களை விடவும், செம ஹாட்டான அஜீத், சத்தமா போல்டா பேசுறார், ரசிக்கிற மாதிரி பேசறார், குறிப்பா காலையில் பெட்டில் லட்சுமி ராயை பார்க்கும் சீன், பிரேம்ஜீ கூட காரில் வரும் சீன், கூட்ட்த்தோட ப்ளான் போடும் சீன், திரிஷாகிட்ட போன் பேசும் சீன், இனி குடிக்கவே கூடாது என்று சொல்லும் சீன், மணி மணி மணி என அவர் புலம்புவது என எல்லாத்துலயும் புது அஜீத்

ரொம்ப நாளைக்கு அப்புறம் அஜீத் அடித்த பெரிய கொள்ளை இது, ஆமாங்க 500 கோடியும், அவரது ரசிகர்களையும் சேர்த்து அடிச்சிட்டாரே .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s