மங்காத்தா – உள்ளே வெளியே (விமர்சனம்)


மங்காத்தா – உள்ளே வெளியே

ஊர்ல ஆகஸ்ட் 31 தான் ரிலீஸ், இங்க பஹ்ரைன்ல 30 ம் தியதியே போட்டுட்டாங்க, அதுவும் ரமலான் பெருவிழா விடுமுறை வேற வீட்டிலே ஒற்றைக்கு இருக்க பிடிக்கவும் இல்லை, மேலும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் படம் தவிர்த்து வேறு ஒரு நடிகரின் பட்த்தை பார்க்க ஆர்வப்பட்ட்து இந்த மங்காத்தாவுக்குத்தான் , எனவே படம் பார்க்க சென்று விடுவது என்ற திட்ட்த்தில் மாற்றமில்லாமல் தியேட்டருக்கு போய் இறங்கி விட்டேன் . .

சும்மா சொல்லக்கூடாது தொடக்கமே ஒரு கலக்கு கலக்கிட்டாங்க , அதிலும் பாகிஸ்தான் தீவிரவாதி மாதிரி அர்விந்த்தை கட்டிபோட்டு காட்டினதும், என்னடா இது விஜய்காந்த் படமான்னு ஒரு நிமிஷம் கலங்கிட்டேன். அப்போதான் நம்ம தல எண்டிரி . . ம்ம் கலக்கல்தான் . . போலிஸ்கிட்ட இருந்து அர்விந்தை காப்பாற்றிய சட்டவிரோத செயலால் சஸ்பெண்ட் ஆகிடறார் போலிஸ் இன்ஸ்பெக்டர் அஜித்.

மங்காத்தான்னா உள்ளே வெளியேதானே . . இதுல உள்ளே ஆக்ஷன் கிங், வெளியே தல. . . செம ஆட்டம்தான்

கதைன்னு சொன்னா , வழக்கம்போல வெங்கட் பார்முலாதான், ஆனா என்ன ஹாலிவுட் படம் ஓசோன் லெவென் ல கொஞ்சம் எடுத்து பவுண்டேசன் போட்டு தலயை வில்லனாக்கி (செம வில்லன்ங்க அதுவும் ஹாலிவுட் ஸ்டைல் வில்லன்) ஈசியா ஒரு ஹிட் கொடுத்துட்டார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்காக 500 கோடி ரூபாய் செட்டியார்கிட்ட வர அதை கொள்ளையடிக்க ஒரு நாலு சின்ன பசங்க ப்ளான் பண்றாங்க, பேசிக்காவே வில்லத்தனத்தோட இருக்கிற அஜித் இந்த பசங்கள பாலோ பண்ணி அந்த திட்ட்த்தை தெரிஞ்சிகிட்டு , தானும் அந்த கூட்ட்த்துல சேர்ந்து நாலு பங்கை அஞ்சா போட சொல்றார். தனது போலிஸ் புத்தியை பயன்படுத்தி கொள்ளையடிச்சிடறாங்க . .இதுதான் முதல் பாதி . .

என்ன இது எல்லாத்தையும் விபரமாக சொல்ல வேண்டி இருந்த்தாலே கொஞ்சம் மெதுவா போறமாதிரி தெரியுது . .

அடிச்ச பணத்தை அஞ்சு பங்கா போடுறதுல விருப்பமில்லாத தல . மத்தவங்களை காலி பண்ண ப்ளான் போடுறதுல போடுறாங்க இடைவேளை .

இனிதான் மங்காத்தா ஆட்டம், பணத்தை பறிகொடுத்த செட்டியார் பணத்தை தேட, கதைக்களமான மும்பையில இருந்து பணத்தை வெளியிட்த்துக்கு மாத்தவும் முடியாம பங்கு வைக்கவும் முடியாம திணறுகிறார்கள் அஞ்சு பேரும் . .

நினைச்ச படி அஜீத்க்கு பணம் கிடைச்சதா, இல்லை அவருக்கே கிடைக்காம பணத்தை வேற யாராச்சும் அடிச்சாங்களான்னு நீங்க பார்த்து தெரிஞ்சிக்கிங்க. . கிளைமேக்ஸ் யாரும் எதிர்பார்க்காத்து. நிச்சயமா நான் எதிர்பார்க்கல . . .

தல யோட எண்டிரியும் வில்லன் நடிப்பும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது. அதிலும் அந்த வயதான தோற்றமும் , பதட்டபடாத வில்லத்தனமும் தல க்கு நிச்சயமா 50 வது படம்தான். தினமும் காலையில் எழுந்திருந்து ராத்திரி குடிச்சதை பத்தி யோசிக்கும் தல புதுசு. வில்லத்தனமாக இருந்தாலும் பசங்களோட பசங்களா சதாரண ஆளா நடிச்சிருக்கிற அஜித் ரசிக்க வைக்கிறார்.

அர்ஜூன், கிரிக்கெட் சூதாட்ட்த்தை தடுக்க வரும் ஸ்பெஷல் ஸ்குவார்டு போலிஸ் , ,செம ஆக்ஷன் . . அதிலும் தலயும் ஆக்ஷன் கிங்கும் மோதும் கிளைமேக்ஸ் பைட் சூப்பர். . .

நாலு கதாநாயகிகள், சும்மா பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டாலும், இரண்டு பேர் கட்த்தப்பட்டு பேரம் பேசப்படுகிறார்கள், திரிஷா அஜித்துக்கு காதலியாக வருகிறார். அஜித்தால் ஏமாற்றப்பட்டு பாவம் . . . லக்ஷ்மிராய் காட்டி நடித்தும் கதையில் சின்ன ஒரு மாற்றம் தந்து அநியாயமாய் செத்து போகிறார். . .

வெங்கட் பசங்க இதிலும் பின்னி இருக்காங்க, இவங்கள வச்சி வெங்கட் இன்னும் எத்தனை படங்கள் செய்தாலும் பார்க்கலாம். . வைபவ், அர்விந்த் , ஒரு காட்சியில் வந்தாலும் வசந்த் & கோ மனதில் நிற்கிறார். அப்புறம் இரண்டு புது பசங்க இருக்காங்க எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க .

வழக்கம்போல் பிரேம்ஜீ சிரிக்க வைக்கிறார். . . சீரியஸான இந்த கதையிலும் இடையிடையே சிரிக்க வைக்கிறார் பிரேம்ஜி. அஜித்தும்தான் . . காமெடி பண்ண நான் என்ன சந்தானமா என்று கேட்டு சந்தானத்தை நினைவு படுத்துகிறார் . . .

மொத்த கதைக்கும் அடித்தளமான முதல் பாதி கொஞ்சம் போரடிச்சாலும் பின்னாடி வர்ர ஸ்பீட் திரைக்கதைக்கு அடித்தளம் என்பதால் பொறுமையா முதல் பாதியை பாத்துடுங்க . . .

மங்காத்தா ஆட்டம் துவங்கும்போது புரியாம போரடிக்கும் அப்புறம் பிடிக்கும் பாருங்க சூடு அதுமாதிரிதான் படமும் . . .

மொத்தமா சொன்னா மங்காத்தா – விருவிருப்பான ஆட்டம்தான், லோக்கலா எடுத்திருந்தா இன்னும் செம ஆட்டமா இருந்திருக்கும், ஆனா இந்தளவுக்கு ரசிக்க முடியுமான்னு தெரியல, ஹாலிவுட் ஸ்டைலில் இருப்பதால் ரொம்பவே ரசிக்க முடிகிறது .

மங்காத்தா – கிவ் மீ மோர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s