இனியும் தொடருவோம்


கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று இருக்கும் இந்த வேளையில், அணுமின் நிலையங்களும் அதன் பாதுகாப்பும் குறித்த பிரதமரின் பேச்சு அத்தனை ரசிக்கும் படி இல்லை, பயப்படும்படியாக எதுவும் இல்லை, மேலும் அதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் இல்லை எனும் ரீதியில் பேசியிருக்கிறார், இப்பவாவது பேசி இருக்கிறாரே என்று சந்தோசப்பட்டுக்கொள்வோம், எனினும் ஒன்று திடீரென அணுமின் நிலையங்கள் பற்றி பேச என்ன காரணம் என்றால் எப்படியோ நமது சொந்தங்கள் போராட்டங்களும் அதன் விளைவுகளும் பிரதமர் அலுவலகம் வரை போய் சேர்ந்திருக்க வேண்டும். அதன் விளைவாகவே பிரதமர் இப்பதிலை தந்து இருக்கலாம்.

விளைவுகளும் இல்லை பாதுகாப்பும் மிக சிறப்பாக இருக்கிறது என்றால் ஏன் உலக நாடுகள் பலவும் அணுமின் நிலையங்களை மூடுகின்றன. புதிதாக துவங்க இருக்கும் திட்டங்களை குப்பையில் போட்டு விட்டன. மேலும் கட்டுமான பணியில் உள்ளவற்றை மறுபரிசீலனை செய்யவும் முனைகின்றன. இந்த கேள்விகளுக்கெல்லாம் பிரதமிடம் பதிலிருக்குமா?

அணுமின் நிலையம் ஒன்று இயங்க துவங்கி விட்டாலே, பலவிதமான சுகாதார சீர்கேடுகள் வரும் என்பது உண்மை. மேலும் அதன் கழிவுகளையும் கடலிலே கலந்து விடலாம் என்று கூட திட்டம் இருக்கலாம், அப்படி இருக்கும் பட்சத்தில் மீன்பிடித்தொழில் என்பது முற்றிலுமாக அழிந்துவிடும்.  (ம் ம் ம் என்று இவர்கள் நம்மீது கவலைகொண்டார்கள்) . . . மீன்பிடித்தொழிலையே நம்பி இருக்கும் 80 சதவிகித மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டு எப்படி வாழமுடியும்.

ஏற்கனவே மின்சாரத்தேவையை நிறைவேற்ற எண்ணி தனியார்துறையும் அரசுத்துறையும் போட்டி போட்டு காத்தாடிகளை நிறுவியது. மின்சாரத்தேவை ஓரளவிற்கு பூர்த்தியாகியது உண்மைதான், ஆனால் சுற்றுபுறசூழல் கெட்டு தட்பவெப்பநிலையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியன இந்த காத்தாடிகள். எனினும் முன்பெப்போதும் இல்லாத நிலையாக வீடுதோறும் மரமும் செடியும் என இருப்பதால் , சுற்று சூழல் ஒரளவிற்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனினும் காத்தாடி என்பது நெல்லை விற்று உமி வாங்கிய கதைதான்.

இப்படித்தான் மத்திய அரசு உலகமயமாக்கல் என்ற கொள்கை வைத்துக்கொண்டு பல கிராமங்களையும் அதன் பெருமைகளையும் அழித்து விட்ட நிலையில், மனிதர்களையும் மனித்த்தையும் இழந்து நிற்கிறோம்.

பீசாவும் , பாஸ்ட் புட்டும் பெருகிவருவதைப்போல் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், கூட்டுகுடும்பங்களும் குறைந்து வருகின்றன, காரணம் உலகமயமாக்கல். தவறாக ஒன்றுமில்லை, மாறி வரும் இந்தியாவில் உறவுகளின் பெருமைகளும் இன்பமும் மாறிவிட்டன. இரண்டு கணிணி பொறியாளர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் நிச்சயமாக ஊரிலே இருக்க முடிவதில்லை , அவர்கள் அவர்களது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இடம்பெயர வேண்டியுள்ளது, இது அவர்களின் உறவின் பாலத்தை உடைத்து போடுகின்றது. அவர்களின் மக்களுக்கு அத்தை,மாமா,சித்தி, என்ற உறவுகளின் பொருள் தெரிவதில்லை இன்னும் சொல்லப்போனால் அத்தனை உறவுகளையும் ஆண்டி, அங்கிள் என்ற ஒரு வார்த்தைக்குள் சுருட்டி கொள்கிறார்கள்.

இப்படியா நாம் இருக்கிறோம், காலையில் பால் வாங்கும் போதிலிருந்து, இரவு சீரியல் பார்த்து முடியும் வரை எப்போதும் எதிலும் உறவுகளும் நட்பும் நம்மை பின்னி பிணைந்திருக்கிறது. இப்படி பட்ட நிலையில் நம்மை நம் மண்ணை விட்டு மாற்றி விடும் வேலை என்பது சாத்தியபடக்கூடிய ஒன்றா?

நாங்கள் எதையுமே கேட்கவில்லையே, எங்கள் மண், எங்கள் தொழில், எங்கள் வாழ்க்கை என்பவற்றை தட்டி பறிக்கவேண்டாம், அழித்து விட வேண்டாம் என்று சொந்த நாட்டிலே போராட வேண்டி வரும் சூழல் மிக கொடூரமானது.

எங்கள் நண்பர்கள் பலரது கடைகளும், விவசாய நிலங்களும் , விவசாயமும் , அழித்துவிட்டு அவர்களுக்கு அரசு என்ன கொடுத்துவிட முடியும். ஏற்கனவே உலகமயமாக்கலில் விவசாயத்தையும் அழித்து விட்டு இன்று சோத்துக்கு பதிலாக பீஸா சாப்பிடும் உலகமயமாக்கலும் வேண்டாம்,

வளர்ச்சி என்பது மனிதனின் தேவைகள் பூர்த்தியாவதில் வளர்ச்சி உள்ளது, மனிதனின் செயல்பாடுகளில் வளர்ச்சி உள்ளது, மனிதனிட்த்திலும் வளர்ச்சி உள்ளது, இப்படி எதுவுமே இல்லாத இந்த வளர்ச்சி, இந்த அணுமின்நிலையம் உண்மையான ஒரு வளர்ச்சியாக இருக்க முடியுமா?

இப்போதே அங்கிங்குமாக பல வடநாட்டு முகங்களை பார்க்கிறோம், இனி முழுவதும் அவர்களே இருப்பார்களோ, நம் சொந்தங்களும் நண்பர்களும் இனி எங்கே இருக்கப்போகிறார்கள்,

சரி இதெல்லாம் விட்டு விடுவோம், அணுமின்நிலையத்தில் செயல்பாடுகள் துவங்கிய பிறகு நிச்சயமாக ஏதேனும் ஒரு மாற்றம் தட்பவெப்பநிலையில் ஏற்ப்படும் , அது நிச்சயமாக பக்க விளைவுகளையும் , மக்களிட்த்திலே பரவலான நோய்களையும் ஏற்படுத்தும் என்று பயமுறுத்திகிறார்கள் வல்லுனர்கள், ஏற்கனவே நம்மை சுற்றி இருந்த இயற்கை அழிந்து போன நிலையிலும் காத்தாடிகள் அதிகமான நிலையிலும் பலவிதமான சுகாதார சீர்கேட்டில் இருக்கும் போது, இனி அணுமின் நிலையமும் துவங்கி அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இன்னும் மிக மோசமான நிலையை ஏற்படுத்துவது எந்த வித்த்தில் நியாயம்.

ஒன்று மட்டும் சொல்வேன், இன்று போராட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கும் என் சொந்தங்கள் பெருமைப்படுத்த கூடியவர்கள், அவர்களின் செயல்பாடுகளுக்கு தலை வணங்குகின்றேன்,  இந்த ஒற்றுமை எப்போதும் தொடரவேண்டும், ஒன்றுகூடி இழுத்தால் தான் தேர் வரும் என்ற நிலையில் இன்று இழுக்கிறோம் நிச்சயம் தேர் வரும் . .

அதே நேரத்தில் நினைவூட்ட வேண்டி ஒரு கருத்து, முன்பு ஒற்றுமையின்மையின் காரணமாகத்தான் நமது ஊரில் கிழக்கிலும் மேற்கிலும் இருந்த இயற்கையன்னையின் அழகை இழந்தோம் (தென்னைமரங்களும் பனைமரங்களும்) , இனியும் அதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டியதும் நாம்தான் . .

நல்லதே நடக்கட்டும் . .  . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s