சுதந்திரமாக இருக்கிறோமா?


 

இந்தியாவின் 65 வது சுதந்திர தினம் தொலைக்காட்சி பெட்டிகளின் வழியாக கொண்டாடப்படுகிறது, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என கேட்கும் சத்தமும் , இன்றைய தினத்தில் மட்டுமே நினைக்கப்படும் மகாத்மாவின் கொள்கைகள் தியாகங்கள் என்றூம், பள்ளிகளில் வழங்கப்படும் இனிப்புகளிலும் கட்சித்தலைவர்களின் மாலை அணிவித்தலும் கொடியேற்றுதலும் நினைவூட்டப்படுகிறது நமது சுதந்திரம்.

சுதந்திரத்திற்கு முன்பாக பல துண்டுகளாக இருந்த இந்தியா , சுதந்திரத்திற்கு பின் ஒற்றுமை கருதியும் சக்தி கருதியும் ஒன்றிணைக்கப்பட்டது, ஆயினும் ஒற்றுமை இருக்கிறதா?

கடந்த 65 ஆண்டுகளாக தென் இந்தியா என்றும் வட இந்தியா என்றும் சொல்லிக்கொள்ளும் அரசியல் இங்கே நடக்கிறது . . ஆட்சி என்று பார்த்தோமேயானால் அன்றிலிருந்து இன்று வரை ஏணிகளாக மட்டுமே இருக்கிறது தென் இந்தியா என்றழைக்கப்படும் பகுதிகளில் இந்த தென் இந்தியா வட இந்தியா என்ற வார்த்தைகளிலே எனக்கு உடன்பாடு இல்லை. . .

ஆனால் விடுதலை பெற்ற நாள் முதல் தமிழகம் எப்படி இந்திய அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளது, என்பதும் தமிழகத்தின் சக்திகள் எப்படி அவர்களின் ராஜ தந்திரத்தால் முடக்கப்பட்டது என்பதும் தெரியாத அரசியல் தலைவர்கள் இல்லை , இருப்பினும் இன்றும் அவர்கள் கால்பிடித்து கொண்டிருக்கும் இவர்களை என்ன செய்ய எப்போது இவர்களுக்கு சுதந்திரம் . . .

குடும்ப ஆட்சி என்ற ஒன்று இந்தியாவில் கடந்த 65 ஆண்டுகளாக நடைபெறுகிறது (நேரடியாகவோ மறைமுக மாகவோ) ராகுல் மக்களுக்காக மக்களோடு பழகுகிறார் என்றெல்லாம் சப்பை கட்டு கட்ட வேண்டாம், அவருக்கு இருக்கும் முதல் தகுதி அவர் ராஜீவ் மகன் என்பதால் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.

நாடளுமன்றம் முடக்கப்படுகிறது, ஊழலுக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, ஆங்கிலேய காலத்து அடக்குமுறை மெதுவாக எட்டி பார்க்கிறது அதற்கு எதிராக அமெரிக்கா கருத்து சொல்கிறது, சீனாவின் விரோதம் வளர்கிறது, நம்மால் வளர்த்துவிடப்பட்ட இலங்கை நம்மையே முட்டிபார்க்கும் சூழல் வருகிறது, இது எல்லாவற்றுக்கும் காரணம் யார் எந்த குடும்பம் என்பதும் ஏன் என்பது தெரியவேண்டிய சமையத்தில் நமக்கு ஒரு சுதந்திர தின விழா . . .

தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கான உதவித்தொகை மத்திய அரசால் மறுக்கப்படுவதாக ஜெ சொல்கிறார். மகிழ்ச்சியில் இருப்பாரோ கருணாநிதி. உண்மையில் வருந்தவேண்டியவர் அவர்தான். தமிழகத்தின் சட்டைக்காலரை தன்னாலே கொண்டு காங்கிரஸ் கையில் கொடுத்தவர் அவர்தானே இப்போது அவர்கள் அதை இருக்கி பிடிக்கிறார்கள் இனி என்ன செய்ய போகிறோம்.

அரசியல் தந்திரிக்கே அல்வா கொடுக்கப்பட்டது, அது தெரியாமலே ஆடினார்கள் இப்போது அவர்கள் அகப்பட்டதும் இல்லாமல் தமிழகத்தையும் தமிழனையும் சேர்த்தே அடகு வைத்து விட்டார்கள்,

65 வது சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படும் கைதிகளில் அந்த மூன்று தமிழர்கள் இருந்தால் மகிழ்வோம்தானே, ஒரு விமான கடத்தல் செய்தால் எப்படிபட்ட தீவிரவாதியையும் விடுவிக்கும் அரசு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக இத்தனை வருடம் சிறைவாழ்க்கை வாழ்ந்த போதிலும் கருணை காட்ட மறுக்கிறது காரணம் என்ன அந்த “துன்பியல் சம்பவம்” தானே, பழிவாங்கும் போக்கு பெண்களுக்கே உள்ளது போல , இருந்தாலும் 80 களின் சினிமா போல் ஆகிவிட்டது அரசும் அரசியலும்.

ராஜீவ் மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது இருக்கிறது சற்று சிந்தித்து பாருங்கள், இடையில் கொஞ்ச காலம் நல்லுறவாக இருந்தது (குடும்ப ஆட்சி இல்லை – பாஜக அரசு) மீண்டும் காங்கிரஸின் ஆட்சி காலத்தில் மறைமுக செக் வைக்கும் படலம் அதில் அறியாமல் மாட்டிக்கொண்ட கலைஞர், அதன்பின் காங்கிரஸின் அதிரடி மற்றும் அதிகார முடிவுகள் அடங்கி போன திமுக அழிந்து போன தமிழினம், எல்லாம் திட்டமிட்ட படியே நடந்தன, இனியும் என்ன இருக்கிறது சுதந்திரத்தில் . .

தண்ணீர் . . .காவிரி பிரட்சனை ஒருபுறம், இனி முல்லை பெரியாரும் அப்படித்தானோ (அங்கேயும் காங்கிரஸ் ஆட்சிதான்) , இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை அவதூறாக பேசும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் அதன் அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினராக அமர்த்தப்படுகிறார்கள் அவர்களுக்காகவே மாற்றியமைக்கப்படுகிறது நாடாளுமன்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் . . இலங்கை தமிழர் படுகொலை என்ற வாக்கு மாற்றப்படுகிறது , என்ன நடக்குதுங்க ஒன்னும் புரியலங்க

எப்படி இருந்தாலும் அரசின் செயல்பாடு மக்கள் வளர்ச்சியில் இருக்க வேண்டும் . . இப்போது வளர்ச்சியில் இருக்கிறோமா என்றால் சற்று பயமாக இருக்கிறது, வளர்ச்சிதான் ஒத்து கொள்கிறேன் ஆனால் அதே சமயம் அவசியமில்லாமல் எதிரிகளை அதிகம் சம்பாதித்து வைத்திருக்கிறோம், இலங்கைக்கு கை கொடுத்து உதவினோம் இப்போது அவர்களே எதிரிகளாகி போனார்கள் (அவர்கள் ஐநா சபையில் வெளிப்படுத்துவதாக சொல்லி மிரட்டல் விட்டது இந்தியாவுக்குத்தான் என்பது தெரியாதவர் இல்லை)

எப்படியானாலும் நான் இந்தியன் நான் என் நாட்டை நேசிக்கிறேன் என்றளவில் வாழ்த்து சொல்ல மனமில்லை என்றாலும் ஒரு வேண்டுகோள்

அன்று இந்தியனாக இருந்தாலும் வெளிநாட்டிலே வாழ்ந்த மகாத்மாவால் இந்தியாவிற்காக எதிர்காலம் முன்னெடுக்கப்பட்டது, அப்போது அவருக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தன பல நல்ல உள்ளங்கள், அவர்கள் கை கொடுத்தார்கள் ஆதரவு தந்தார்கள் வெற்றி கிடைத்தது, இந்த நாளும் பிறந்தது.

இன்று இந்தியாவில் வாழும் ஒருவருக்கு அதே போல் எண்ணம் வந்திருக்கிறது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவோம், இந்தியாவிலும் ஆதரவு இருக்கிறது புதிய வெற்றி கிடைக்கட்டும் புதிய சுதந்திரம் கிடைக்கட்டும் அதன்பின் வாழ்த்திக்கொள்வோம் இந்தியர்கள் என்று பெருமையோடு அதுவரை

இந்த நாளும் வழக்கம்போல கடந்து போகட்டும் . . . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s