நிலாச்சோறு – பிறை 4 (10-8-2011)


 

அப்பாடா ஒரு வழியா . . .

மீண்டும் மீண்டும் தனது வறட்டு பிடிவாதத்திற்காக மேல் முறையீடு செய்து முயற்சி செய்த ஜெ இப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அப்படியே பின்பற்றுவோம் அதுவும் இந்த ஆண்டிலே பின்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார். இத்தனை தூரம் மோதிபார்த்துவிட்டு அடங்கி இருக்கிறார் என்றால் என்னவோ இருக்கு என்பது அவரை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும். ஒருவேளை போதும் என்று நினைத்திருக்கலாம், அல்லது சோ சீ சீ சே என்று விட்டு இருக்கலாம், எப்படியோ மாணவர்களுக்கு நல்லது நடந்தா சரிதான். உச்சநீதிமன்றம் பாடம் சொல்லி கொடுத்திருக்கிறது என்பதும், ஆடு மாடு தான் கிடைக்கும் பயந்து கிடந்தவருக்கு பாடப்புத்தகம் கிடைத்ததாகவும் சொல்லி கொள்வது பொருமைக்காகாது, ஒன்றில்தானே சறுக்கி இருக்கிறார். பார்ப்போம் இன்னும் இருக்கிறது.

இன்றிலிருந்து புத்தகங்களை விநியோகம் செய்ய துவங்கி இருக்கிறது அரசு, பல விசயங்களை ஏறக்குறைய எம்ஜிஆரை பின்பற்ற துவங்கி இருக்கும் ஜெ. இதிலும் எதையாவது செய்தி மக்கள் விரோதத்தை தனக்கு சதகமாக மாற்ற முயல்வார்.

அரசு திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசின் வருவாயில் இருந்துதான் நிறைவேற்றபடுகிறது, மத்திய அரசு உதவி எதுவும் இதுவரை செய்யவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அரசு, ஏற்கனவே பல பிரட்சனைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு இனி அடுத்த நெருக்கடியாக என்ன வரும் என்று மன்மோகனுக்கே தெரியாது. அப்படி ஏதேனும் வரும்பட்சத்தில் தனது எதிர்ப்பை காட்ட இப்போதே புள்ளி வைக்க ஆரம்பித்து விட்டார் ஜெ. ஒன்றை அடைய நினைத்தால் அடங்க மாட்டார் என்பது தெரியும், அவர் மிகவும் விருப்பபட்ட பிரதமர் பதவிக்கு காய் நகர்த்த துவங்கி விட்டாரோ ..  ஒன்னும் புரியல போங்க . . .

 

ஆண்களுக்கு எது அழகு

சட்டசபையில் எழுந்து நின்று பேசும் போது மைக்கில் பேச வேண்டி குனிந்து வழைந்து நின்று பேசுவதை பல முறை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறோம், அப்போதெல்லாம் நமக்கு வராத யோசனை  இப்போது ஜெ க்கு வந்திருக்கிறது, ஆண்கள் நிமிர்ந்து பேசுவதுதான் அழகு எனவே அவர்கள் நிமிர்ந்து நின்று பேசுகின்ற வகையில் சட்டசபையில் உள்ள மைக்குகள் சரி செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார் . இனி உடன்பிறப்புகள் எங்களை நிமிர்ந்து நின்று பேச வைத்த அம்மா வாழ்க என்று முழங்க போகிறார்கள் . . .

 

இலங்கை – ஜெ.

இலங்கையின் கொடூரத்திற்கு எதிராக முழங்கிய ஜெவையும் தமிழ் மக்களையும் தனது கிருக்குத்தனமான வார்த்தைகளால் பேசிய கோத்தபயா வை என்ன செய்யப்போகிறது இந்திய அரசு, இந்திய அரசு வழக்கம்போலவே மவுனமாகத்தான் இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் கோத்தபயா ஜெவை குறித்து கவலை கொண்டதையும் இதனால் உணர முடிகிறது. இலங்கையில் சதிகாரர்கள் சதிக்கான பதிலை பெறுவதற்கான காலம் நெருங்கி விட்டதென கருதுகிறேன். தொடர்ந்து இரு நாட்களாக இலங்கையை வான் வழியாக நோட்டமிடும் அமெரிக்க போர் விமானங்களும் ஒரு அடி சருக்கிய அமெரிக்கா தனது நிலையை மீண்டும் உலக அரங்கில் சரிப்படுத்த ஏதேனும் பரபரப்பான ஒரு நடவடிக்கை அவசியமாகிறது. அது இலங்கை மீது ஏதேனும் வழியான நடவடிக்கையாக இருக்குமே என்றால், அய்யோ பாவம் . . இனி பேச அவர்களுக்கு நேரமிருக்காது.

 

நில அபகரிப்பு

எதிரணி மீது வேண்டுமென்றே வழக்கு போடுகிறார் என குற்றம் இருந்தாலும் ஜெ எதையோ நினைத்து துவங்கி வைத்த நில மோசடி வழக்குகளால் அனைத்து கட்சி மாநில செயலாளகள் துவங்கி மந்திரிகள் வரை நில மோசடி வழக்குகளில் சம்மந்த பட்டிருக்கிறார்கள், அனைவரையும் கைது செய்ய அரசு நினைத்தாலும் திமுக காரர்களை விரைவாகவும் அதிமுக வினரை மெதுவாகவும் என்றில்லாமல் அனைவரையும் ஒரே வித போக்கில் கைது செய்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உரிய நபர்களுக்கு கொடுக்க அரசு முன்வர வேண்டும். காவல்துறையிலும் அரசு நேரடியாக தலையிட்டு நில அபகரிப்புக்கோ அல்லது அப்படி செய்தவர்களுக்கோ உதவியாக இருந்த இருக்கின்ற காவல்துறையினர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

எங்க ஊர் பக்கத்திலும் இப்படி நிறைய நடந்து இருக்குன்னு கேள்விப்பட்டேன் கொஞ்சம் விசாரிங்க மக்காஸ், அப்படியே நாங்குனேரி டூ அஞ்சுகிராமம் ஏரியாவிலும் நிறைய நிலங்களை விற்றும் வாங்கியும் உள்ளார்கள் அனைத்தும் நேர்மையான முறையில் நடைபெற்ற வியாபாரமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

சினிமா பக்கம்

கிறிஸ்துவ அமைப்புகள் பிரபுதேவாவிற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது, காரணம் அவருடைய நிர்பந்தத்தின் பேரில்தான் டயானா என்றழைக்கப்பட்ட நயன் தாரா கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்திற்கு மாறியதாக அவர்கள் சொல்லி கண்டனம் தெரிவிக்கின்றனர். இதெல்லாம் என்ன கூத்து. அவருக்கு விருப்பமாக இருந்ததால்தானே மதம் மாறி இருக்கிறார் இதிலென்ன தவறு இருக்கிறது. அவரவர் விருப்பத்திற்கு அவரவருக்கு முடிவு எடுக்க உரிமை உள்ள நாட்டில் இப்படியெல்லாம் தேவையில்லாத கண்டனமும் அறிக்கைகளையும் முதலில் தடை செய்ய வேண்டும்.

தனது பரந்து விரிந்த மனத்தால் நமீதாவை ஓரம்கட்டி அந்த இடத்தை பிடிக்கலாம் என நினைத்த ஹன்சிகா இப்போது செய்த காரியத்தால் நிச்சயமாக எல்லா நடிகைகளையுமே ஓரம்கட்டி விட்டார் என்றே சொல்லத்தோன்றுகிறது, சுமார் 20 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களுக்கு எல்லா வசதிகளும் படிப்பு முதல் செய்து கொடுத்து கொண்டிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது, ஆனாலும் அதுதான் உண்மை என்கிறது செய்தி. நல்ல மனசுதான் இல்லையா, ஏன் இப்படி என்றால் ஒரு வேளை . . . வேண்டாம் நமக்கென்ன வம்பு . . ஏதோ நல்லதா நடந்தா சரிதான்.

நேற்று அதிரடியாக வெளியாகியது மங்காத்தா பாடல்கள் ஒருமுறை அல்ல மூன்று முறை கேட்டேன் பாடல்கள் சுகமாகத்தான் இருக்கிறது. 50 வது படமல்லவா ஒரு சூப்பர் ஹிட்டாக இருக்கட்டும். இல்லையென்றால் இளைஞர்கள் ஐகானாக திகழும் தலைக்கு அது இழக்க நேரிடும். ஆனால் ஹிட்டாக தடையாக இருப்பது படத்தின் தயாரிப்பாளராக உள்ள திமுக குடும்ப உறுப்பினர்தான், யாரும் ஒன்றும் செய்யவில்லை என்றால் தலை க்கு ஒரு சூப்பர் ஹிட் உறுதி.

 

 

சிரிக்க . . .

ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் “அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?”. அவர் சொன்னார் “6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி”. அந்த சிறுவன் கேட்டான் “அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க”.

அப்படியே இந்த தத்துவத்தையும் படிச்சிடுங்க

சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்

 

என்ன செய்யும் இந்திய அணி . . .

மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கி இருக்கும் இப்போது, என்றுமே இல்லாத அதிசயமாக இங்கிலாந்தில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டமைக்காக என்ற பேரில் ஏதோ கலவரம் , கலவரம் அதிகமாகி கொண்டிருக்கும் அதே வேளையில் தடையில்லாமல் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. சாகீர்கான் இல்லாத அணி சற்று பலவீனமாக தோன்றினாலும் சேவாக் வந்திருப்பது புது ரத்தம் பாய்ச்சியது போல்தான் என்றாலும். எனக்கென்னவோ சேவாக் முதல் இன்னிங்ஸில் ஒன்றும் செய்து விட மாட்டார் என்றும் சச்சின் 100 அடிக்க வாய்ப்பு உள்ளது என்று தோன்றுகிறது பார்க்கலாம் இன்னும் 8 மணி நேரத்தில் . . . கங்குலி சொன்னது போல் எப்படியும் இந்த சீரிஸ் டிரா ஆக வாய்ப்பு இருப்பதாகவே நானும் கருதுகிறேன். தோனிக்கு பயம் போயிருக்கும் என்று நினைக்கிறேன் . . கமான் இந்தியா . .

 

இந்த வார டிரைலர்

மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த தல யின் 50 வது படம் ஒரு வழியாக ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது , எதற்காகவும் அதிகம் யோசிக்காத வெங்கட் இயக்கத்தில் தல நெகடிவ் கேரக்டர் செய்திருப்பதாக வரும் செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டி இருக்கிறது. நெகட்டிவ் என்றால் “வெற்றிவிழா” கமல் மாதிரியாக இருக்குமோ தெரியல காரணம் போலிஸ் யுனிப்பார்மில் இருக்கிறார் தல, முழு வில்லன் என்றால் அவருக்கே அது நல்லதுதான் காரணம் வாலி – அட்டகாசம் என கொஞ்சம் தொட்ட அஜீத் இதில் முழுமையாக செய்திருந்தால் கலக்கல்தான் , பின்ன அவரே சொல்றார் பாருங்க

 

தல யின் 50வது படம் வர விருக்கும் அதே நேரத்தில் இளையதளபதியின் வேலாயுதம் ரிலீஸ். விஜய் படத்திலே அதிக அளவில் பில்டப் இல்லாமல் அதே சமயத்தில் அதிகம் அலட்டலில்லாமல் சூட்டிங் நடைபெற்றிருக்கும் படம் வேலாயுதம், அவரது சூப்பர் ஹீரோ உடை குறித்து பேஸ்புக்கில் பல கமெண்ட்கள் வந்தாலும் படத்தின் டிரைலர் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு . . ஆசாத் என்ற தெலுங்கு படத்தில் ரீமேக் என்கிறார்கள். நாகர்ஜூன் நடிப்பில் சவுந்தர்யாவும் கலக்கிய ஆசாத் சூப்பரான பொழுதுபோக்கு படம், நம்ம தமிழ் இயக்குனர்தான் அப்படத்தின் இயக்குனர் நல்லா வரவேண்டிய அவர் ஒரு ஆக்ஸிடென்றில் இறந்தது சோகம்தான்.

 

இந்த வாரம் பார்க்கத்தகுந்த படம்

இப்போ வருகின்ற ஒரு சில படங்களை தவிர மற்ற எல்லா படங்களும் ஏதேனும் வழியில் கிளாமரைத்திணிக்கவே செய்கின்றன, அல்லது கதையே கிளாமர் கலந்த கதையாக எடுக்க நினைக்கிறார்கள். . .

அப்படி ஒன்றுமில்லாமல் பொழுது போக்கு அம்சங்களை மிக சரியான அளவில் கலந்து சீரியஸாக இல்லாமல் ஒரு சினிமா தந்தமைக்கு லாரன்ஸை பாராட்டலாம் . .

 

அதிலும் சுப்ரீம் ஸ்டாரின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும் , கிட்டதட்ட முற்றும் போட்டு விட்ட அவரது சினிமா வாழ்க்கையில் இது சொல்லிக்கொள்கின்ற ஒரு படம்தான்.

லாரன்ஸும் தேவதர்ஷினியும் தங்களது பங்கினை சிறப்பாக செய்திருந்தாலும் , மீண்டும் ஒரு முறை தனது சொந்த பாஷையில் கலக்கி இருக்கிறார் கோவை சரளா.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s