நிலாச்சோறு – பிறை 3 (06-08-2011)


வணக்கம் நண்பர்களே, இந்த புதிய பகுதியான நிலாச்சோறு இனி வாரம் ஒரு முறை எனது பதிவலையில் கிடைக்கும் . . . உங்களது ஆதரவுக்காக காத்திருக்கிறேன்.

 

பாதிப்பில்லாத பட்ஜெட்

சமச்சீர் கல்வியை தவிர ஏறக்குறை அனைத்து விசயங்களிலும் பாஸ் மார்க் வாங்கி கொண்டிருக்கும் ஜெ அரசு (திமுக அரசு என்பார்கள் ஆனால் அதிமுக அரசு என சொல்ல மாட்டார்கள் அது ஏன்?) நடப்பாண்டின் பட்ஜெட் அறிக்கையை தந்து இருக்கிறது . பெரிதாக குறை சொல்ல முடியாத அளவில் அமைந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன், என்றாலும் திமுக தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்ற அளவிலே அறிக்கை வெளியிட்டதும் வெறும் கண்கட்டு வித்தைதான். குறிப்பாக பட்ஜெட்டில் சுட்டி காட்டப்பட்ட மின்சார தடை குறித்த செய்தி சென்னை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழகத்திற்கும் நல்ல செய்திதான் , நடப்பாண்டில் மட்டும் ஏறக்குறைய 2150 கோடி ரூபாய்களை இலவச பொருட்கள் வழங்க ஒதுக்கி உள்ளது அரசு, ஏற்கனவே கஜானா காலி என்ற நிலையில் இவற்றை ஈடு கட்ட என்ன செய்யும் பார்க்கலாம்.

 

அடேயப்பா குடும்பம்

தேர்தலுக்கு பின் திமுக தன்னை நிலை நிறுத்தி கொள்ள முற்படும் முயற்சிகள் எல்லாம் வீணாகுதே இல்லையோ அடித்தளமே கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்கிறது. அதிலும் தங்களுக்கு கிடைத்த துருப்பு சீட்டாக சமச்சீர் கல்வியை பிடித்து அவர்கள் நடைமுறை படுத்தி போராட்டங்களும் போரடித்துள்ள நிலையில் என்ன தான் செய்யும் திமுக. இப்போ ஒருவர் பின் ஒருவராக கைது என்ற நிலையில் அடுத்த பெரிய அடியாக இன்று வெளியாகிய ஒரு செய்தி . .அதை அப்படி இங்கே தருகிறேன்

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.

21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

 

புனித ரமலான்

1996 முதலே மத்திய கிழக்கு பகுதியில் இருப்பதால் வருடம்தோறும் வரும் புனித ரமலான் மாதம் எனக்கு மிகவும் பிடித்த மாதம், அமைதியான மாதம் என்று குறிப்பிடுகின்ற மாதம் இது, என்ன ஒன்று ரமலான் மாதம்முழுமைக்கும் காலை உணவும் மதிய உணவும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும், குடும்பம் உள்ளவர்கள் வீட்டில் சமையல் பிரட்சனை இல்லை, தனியாக வசிக்கும் தோழர்கள் அதிலும் சமைக்க தெரியாத மற்றும் சமைக்க வசதியில்லாத தோழர்கள் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் கொஞ்சம் கஷ்டம்தான். . . இந்த நிலையில் நேற்று குவைத் நாட்டில் ஒரு போலீஸ்காரர் 4 ஆந்திர தேசத்து தோழர்களை தனது துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கிறார், அவரை கைது செய்த காவல்துறையின் விசாரணையில், அந்த போலீஸ்காரர் (அரபி) ஒரு மனநிலை குறைபாடுள்ளவர் என்றும் அந்த 4 பேரும் நோன்பு முடிவதற்கு 10 நிமிடம் மீதமுள்ள நிலையில் சாப்பாடு உண்டதால் சுட்டு கொன்றதாகவும் தெரிவித்திருக்கிறார், புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கான பதிலை அல்லாஹ் தருவார் . .

சினிமா பக்கம்

தெய்வத்திருமகள் தந்த வெற்றியும் மதிப்பும் அமலா பாலை சியானிடம் ஓவராக ஒட்ட வைத்துள்ளது, இவர் ஏற்கனவே மைனா படம் தந்த இயக்குனரை தலையில் தூக்கி வைத்தார் பின் அவருக்கே ஆப்பு வைத்தது நினைவிருக்கலாம், இப்போ சியான் முறை ஆனா சியான் விபரமானவர் என்பது திரிஷாவுக்கும் தமிழ் திரை உலகிற்குமே தெரிந்ததல்லவா. . .

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராகிவிட்டார், வழக்கமாக இந்த வாரிசுகளுக்கு இது ஒரு வாய்ப்பு, சினிமாவில் மிக எளிதாக நுழைந்து விடலாம் ஆனால் அங்கே நிற்க வேண்டுமானால் திற்மை இருக்க வேண்டும், பார்க்கலாம் ஒரு படத்தோடு வீட்டிலே அமர்ந்து வேலை பார்க்க போகிறாரா இல்லை , அடுத்த படம் எடுக்க மக்களே கேட்க போகிறார்களா என்று, இருந்தாலும் திறமை மிக்க ஒரு கூட்டமே வாய்ப்புக்காக காத்திருக்கும்போது இந்த செய்தி கொஞ்சம் நெருட்த்தான் செய்யும் , எப்படி இருந்தாலும் ரிசல்ட் வரும்வரை காத்திருப்போம்.

இந்த வாரம் நடந்த காமெடியில் ராமதாஸ் தீக்குளிக்க தயார் என்பதை விட அம்மாவும் மகளும் கூட்டிய திருமண நாடகம்தான் காமெடி, உண்மையில் திருமணம் உண்டா என்றால் எனக்கு தெரியாது, ஆனா சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஒரு நாடகம் நடத்தி இருக்கிறார்கள் , ரிசல்ட் எப்படி என்பதை ஒரிரு மாதங்கள் பொறுத்து பார்க்கலாம், இருக்கும் ஒரே படமான மங்காத்தாவிலும் த்ரிஷாவிற்கு பெரிதாக ஒன்றுமிருக்காது எனவே ஒரு தூண்டலாக திருமண நாடகம் , மீன் கிடைத்தால் பிடித்து கொள்வோம் இல்லையென்றால் திருமணமே.

சிரிக்க . . .

நண்பனிடம்

டேய் மாப்ளே எம்பொண்டாட்டி என்னை டைவர்ஸ் பண்ணிடுவானு பயமா இருக்குடா

ஏண்டா அப்படி

மிக்ஸி, கிரைண்டர்னு இலவசமா எல்லாம் கொடுக்கிறாங்க அதான் . . .

முதலிடம்  இந்திய அணிக்கு நிலைக்குமா . . .

தொடர் தோல்விக்கு காரணம் ஓய்வில்லை என்று சப்பை கட்டு கட்டி இருக்கிறார் தோனி, அய்யோ பாவம் வேறு என்ன காரணம் சொல்ல முடியும், ஒன்றுமே செய்யாத துவக்க ஆட்டக்காரர்கள், நடுநிலை ஆட்டக்காரர்கள் என ஒரு அணியை வைத்து கொண்டு விளையாடும் போது தோனிக்கு பயம் மட்டுமே இருந்தது அதனால் தோற்றது ஆச்சர்யம் இல்லை, இனி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வென்று சீரியஸை டிரா ஆக்கினால் மீண்டும் தனது முதல் இடத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு அதற்க்காகவே வீறு கொண்டு வந்துள்ளார் வீரு,  பேட்டிங்கை விட (தோனியை தவிர) பந்து வீச்சுதான் மிக மோசம், கானும் சாந்தும் இணைந்து பந்து வீசினால் ஏதேனும் செய்ய முடியும் என்றே நான் நம்புகிறேன் , பார்க்கலாம் 10 ம் தியதி . . . இன்னும் ஒன்று அடுத்த டெஸ்டிலாவது முதலில் பேட் செய்ய தோனி நினைக்கட்டும் . .

 

இந்த வார டிரைலர்

கோ என்ற வெற்றி படத்திற்கு பிறகு வெள்ளாவில வச்சு வெளுத்த தாப்ஸி உடன் நடித்து கொண்டிருக்கும் வந்தான் வென்றான் படம் அடுத்த எதிர்பார்ப்பு

எனக்கு மிகவும் பிடித்த நடிகை அழகி மோனிகா (இவர் சிலந்தி மோனிகா ஆனாலும் எனக்கு அழகி மோனிகாதான்) நடித்து விரைவில் வெளிவரவிருக்கு வர்ணம் . . அடுத்த எதிர்பார்ப்பு மிக்க படம் . .

 

இந்த வாரம் பார்க்கத்தகுந்த படம்

கடந்த வாரம் வெளியான படங்களில் பார்க்கத்தகுந்த அல்லது பார்க்க கூடிய படமாக கருதும் சினிமா இங்கே  . .

எனக்கு பிடித்த வெளி மாநில மொழி நடிகர்களில் முதல் இடம் லாலுக்குதான் , இவர் மோகன்லால் இல்லைங்க, சண்டைக்கோழியில் சண்டைக்கோழியாக வருவாரே வில்லன் அவர்தான் இந்த லால். இவர் நடித்து சமீபத்தில் வெளியாகி மலையாளப்படம்தான் சால்ட் & பெப்பர் , அதிகளவில் யோசிக்க வைக்கவில்லை நெருட வைக்கவில்லை என்றால் மிகவும் ரசிக்க வைத்த படம். ஒரு மெல்லிய நகைச்சுவையும் தெளிவான திரைக்கதையும் படம் பார்க்கும் போது ரசிக்க வைக்கிறது . குறிப்பாக லாலின் அலட்டலில்லாத நடிப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு தடவை பாத்து பாருங்க . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s