நிலாச்சோறு – பிறை 2 (20-7-2011)


வணக்கம் நண்பர்களே, இந்த புதிய பகுதியான நிலாச்சோறு இனி வாரம் ஒரு முறை எனது பதிவலையில் கிடைக்கும் . . . உங்களது ஆதரவுக்காக காத்திருக்கிறேன்.

நீதித்துறைக்கு நன்றி

அப்பாடா ஒரு வழியாக சமச்சீர் கல்வித்திட்டம் ஒரு தற்காலிக முடிவுக்கு வந்து விட்டது. இப்போதும் ஆளும்கட்சிக்கு இது ஒரு தோல்வி என்று நினைத்து மீண்டும் மீண்டும் மறு அப்பீலுக்கு முயற்சி செய்தால் என்றும் இல்லாத அளவில் ஜெ. பெற்று கொண்டிருக்கும் நல்ல பெயருக்கு அது களங்கத்தையே விளைவிக்கும். எனவே ஜெ இப்போதே சுதாரித்து நீதிமன்ற தீர்ப்பை போல் ஒரு குழு அமைத்து பாடத்திட்டங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை மாற்ற முயற்சி செய்யலாமே தவிர மீண்டும் சமச்சீர் கல்வித்திட்டம் வேண்டாமென்று முருங்கை மரம் ஏறினால் . . ம் ம் ம் என்னத்த சொல்ல . .

அடுத்தது கைதா அல்லது ஜாமீனா?

ஒருவழியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் பிரதமரின் காத்திருப்பு என அரசியல் காற்று சற்று ஓய்ந்துள்ள நிலையில், இன்னுமொரு மந்திரி ராஜினாமா செய்யும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏற்க்கனவே இரண்டு சீட்களும் காலியாக உள்ள நிலையிலும் அதற்கான புதிய மந்திரிகளை நியமிக்காத நிலையிலும் மூன்றாவதாக ஒரு இடம் காலியானால் அடுத்த நடக்கவிருப்பது கைதா அல்லது ஜாமீனா என்பதை சொல்ல முடியவில்லை.

மிரட்டலுக்கு பயந்து ஜாமீன் என்றால் , ஏற்கனவே மத்திய அரசு மக்களிடம் பெற்றிருக்கும் ஊழல் குறித்தான பெயர் இன்னும் கெட்டுப்போகவே வாய்ப்பிருக்கிறது. எனவே அதற்கான கிரீன் சிக்னல் சோனியாவிடம் இல்லை என்றே நான் நம்புகிறேன் . அப்படி இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு கைது எதிர்பார்க்கலாம். ஆனால் அதன் முன்பாக “சில” தயாரிப்புகளோடு களமிறங்கும் ராசா வால் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் சில இக்கட்டுகள் வரக்கூடும் அதை எதிர்கொள்ள பிரதமர் தயாரோ இல்லையோ ,சோனியா தயாராகிவிட்டதாக தெரிகிறது . .விரைவில் புதிய பிரதமரை எதிர்பார்க்கலாம் அனேகமாக அது நமது பக்கத்து மாநிலத்து காரராக இருக்கலாம்.

அப்படி மாறும் பட்சத்தில் திமுக இன்னும் திணறவே செய்யும்.

குடும்ப சண்டை

குடும்ப அரசியல் குடும்ப அரசியல் என எல்லா அரசியல் கட்சியும் சுட்டிகாட்டியும் மாற்ற முடியாத நிலையில் சிக்கித்தவித்த கலைஞர் இப்போ வேதனையின் உச்சத்தில் இருக்கிறார் . . தன் குடும்பமே இப்படி இக்கட்டில் சிக்கி தவிக்கும் என ஒருநாளும் நினைத்திராத அவர் இப்போ செய்வதறியாது சிக்கலில் இருக்கிறார். .

மகள் திகாரில் இருக்கின்ற இந்த வேளையில் தந்தைக்கு உறுதுணையாக நின்று தங்கையை மீட்டு வர வேண்டிய இரு அண்ணன்களும் சண்டையிட்டு கொண்டு இருக்கிறார்கள். காரணம் பதவி . . .  இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால் ஸ்டாலினின் விருப்பமும் நடவடிக்கையும் மிகச்சரி என்றே படுகிறது. படுதோல்விக்கு என்ன காரணம் என்பதை விட்டு விடுவோம் அதன்பின்பாவது தொண்டர்களையும் கட்சியையும் வலுவாக்கும் முயற்சியில் ஈடுபடாது கைது ஜாமீன் ஊழல் என்பவையின் பின்னால் செல்லும் திமுக தலைமை தன் தொண்டனை மறந்துவிட்டதாகத்தான் தொண்டன் நினைத்து கொண்டு இருக்கிறான். அதானல் ஸ்டாலினின் முடிவு வரவேற்க்கத்தக்கதே. தலைமைப்பொறுப்பை ஸ்டாலின் வசம் கொடுத்துவிட்டு வேண்டுமானால் தனது மகளுக்காக தந்தை போராடட்டும். ஸ்டாலின் கட்சியின் வளர்ச்சியிலும் வளம்படுத்துவதிலும் கவனம் செலுத்தட்டும் . .

இத்தகைய முடிவுகளை எடுக்கவிடாமல் இங்கேயும் குழப்பம் செய்யும் சிலரை என்ன செய்ய இருக்கிறது திமுக . . .

நாம்தான் திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் இருந்து விட்டோமே இனி கட்சி என்ன ஆனால் எனக்கென்ன என்ற நிலைப்பாட்டில் கலைஞர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றே நம்புகிறேன்.

அடுத்த ஒரு கைதுக்கு முன்பாகவே முடிவுகள் அறிவிக்கப்பட்டால் கட்டுக்கோப்பான திராவிட முன்னேற்ற கழகம் வீழ்ச்சி பெறாது இல்லையென்றால்  . . . . .

சினிமா பக்கம்

நான் போனவாரம் சொன்னது போலவே விக்ரமின் படத்துக்கு ஏக வரவேற்ப்பு, அவரது நடிப்பும் செம கிளாஸ் ,எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் குழந்தை சாரா வை எப்படி வாழ்த்தினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். இதுல கொடுமை என்னன்னா, தான் நடித்த எல்லா படத்திலும் ஆடைகுறைப்பு செய்தே பழகிய அனுஷ்கா “தமிழர்களின் சினிமா பார்வை மாறிவிட்டது” என்று கருத்து கூறி இருப்பது தான் . . .முதல்ல நீங்க மாறுங்க மேடம் . . .

பாவம் நமீதா, நடிக்க கூடாத படங்களில் நடித்து விட்டேன் என்று இப்போ கண்கலங்கி இருக்கிறார். . . இது எதுக்கான நடிப்பு என்பதே தெரியவில்லை . . . காட்ட வேண்டியதை காட்டி . கூட்ட வேண்டியதை கூட்டிட்டு (பேங்க பேலன்ஸ்) இப்போ சும்மா நடிக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியுமே . .

மைனாவின் மூலம் நல்ல பெயர் எடுத்த அமலா , இப்போ நடிச்சி வந்திருக்கும் படம் “தெய்வத்திருமகள்” இந்த பட போஸ்டருக்கு பக்கத்துலயே அவர் ஏற்கனவே நடிச்ச “சிந்து சமவெளி” போஸ்டரை ஒட்டி மறுபடியும் படத்தை ரிலீஸ் செய்து காசு பார்த்துட்டாங்க . .நம்மாளு யாரு மூளைக்காரன்ல . . இதுல வருத்தம்  யாருக்குன்னா அமலா பாலுக்குத்தான் . . கெட்ட பெயரை சரி செய்த பின்னும் மறுபடியும் இப்படி டேமேஜ் பண்றாங்களேன்னுதான் . .

சிரிக்க . . .

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும்தான், பேஸ்புக்கில் தம்பி ஜெலாஸ்கர் பக்கத்துல் படித்தது . . .

கோழையாட்டம் ஏண்டா குண்டு வைக்கிறீங்க? எங்க ராணுவம் நீங்க குண்டு வைக்கிற இடத்துல எல்லாம் நின்னு கண்டு பிடிக்கவா முடியும். தைரியம் இருந்தா மிலிட்ரி காம்பவுண்ட் உள்ளார வந்து மரத்துல இருக்குற முந்திரி பழத்தை பறிச்சு பாருங்கடா… அப்ப தெரியும் எங்க ராணுவத்தை பத்தி 😦 # மும்பை குண்டு வெடிப்பு)

என்ன செய்யும் இந்திய அணி . . .

வரலாற்று சிறப்புமிக்க 2000 மாவது டெஸ்ட் போட்டியை ஆட இருக்கின்றன இங்கிலாந்தும் இந்தியாவும், சிறப்பு மிக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள இந்திய அணி இந்த டெஸ்டை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் அதைவிட எனக்கு தனிப்பட்ட முறையில் இப்போட்டியில் சச்சின் தனது 100 வது சதத்தை அடித்து வெற்றி பெற்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் . .எனினும் 100 வது சதம் என்ற ஒன்று சச்சின் ஆட்டத்தை பாதிக்காமல் இருப்பது நல்லது.

அப்படி இப்படி என அறிக்கை விட்டு கொண்டிருக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்துமாறு தோனிக்கு யாராவது அறிக்கை கொடுத்தால் நல்லது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலானது இல்லை என்று நினைக்க வேண்டாம் , வேகப்பந்துக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் சோபிப்பார் என “நம்பி” சாந்த குமாரனை உள்ளே வச்சிருக்காங்க, இரு தினங்களுக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மிக மோசமாகவே இருந்தது குறிப்பாக மலையாளத்து பையனின் பந்து வீச்சு மிக மோசம் . . சரி விடுவோம் பேட்டிங்கில் நம்ம ஆளுங்க சொதப்பின சொதப்புக்கு அப்புறம் இங்கிலாந்து ரொம்பவே தெம்பா இருக்கும் . . கவனம் மக்களே . . .

இந்த வார டிரைலர்

இந்த வாரம் நடைபெற்ற ஆடியோ விழாவில் வழக்கம் போல் எல்லாரும் படம் பற்றி புகழ்ந்து பேசினாலும் இந்த படம் ஏனோ வித்தியாசமாக இருக்கும் என்றே தோன்றியது. எப்போதும் மீடியமாகவே இருக்கும் கரணின் சினிமா வாழ்க்கையில் இப்படம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் பார்க்கலாம் . . நடிக்க தெரிந்த நடிகை அஞ்சலி நடித்திருக்கிறார்  . . .

இந்த வாரம் பார்க்கத்தகுந்த படம்

கடந்த வாரம் வெளியான படங்களில் பார்க்கத்தகுந்த அல்லது பார்க்க கூடிய படமாக கருதும் சினிமா இங்கே  . .

விக்ரமும் பேபி சாராவும் சைகையால் பேசும் இந்த காட்சி கிட்டதட்ட அனைத்து தமிழர்களாலும் ரசிக்கப்படுகின்ற காட்சி இது ஒன்று போதுமே இப்படத்தின் வெற்றிக்கு. . .

வெற்றி தோல்வி என்பதையெல்லாம் மறந்து விட்டு, வழக்கமான சுட்ட படம் என்ற குறையும் கூறாமல் இந்த உறவுகளின் உணர்வை மென்மையாக திரையில் காட்ட நினைத்த தைரியத்தையும் நேர்த்தியையும் பாராட்டமல் இருக்க முடியவில்லை

வாழ்த்துக்கள் மிஸ்டர் விஜய் . . . 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s