நிலாச்சோறு – பிறை 1 (13-7-2011)


 

வணக்கம் நண்பர்களே, இந்த புதிய பகுதியான நிலாச்சோறு இனி வாரம் ஒரு முறை எனது பதிவலையில் கிடைக்கும் . . . உங்களது ஆதரவுக்காக காத்திருக்கிறேன்.

 

இன்றைய தினம் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் சூப்பர் ஸ்டார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன். .

 

காவல்துறைக்கு நன்றி

சிறுவன் தில்ஷனை மனசாட்சியே இல்லாமல் சுட்டு கொன்ற இராணுவ அதிகாரியை கைது செய்த தமிழிக காவல்துறைக்கு நன்றி. மாநில முதல்வர் ஜெயலலிதாவும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார். நல்லது, சம்பவம் குறித்து பதிலளித்த இராணுவ அதிகாரி “தொந்தரவாக இருந்ததால் சுட்டேன்” என்றிருக்கிறார். இவரை என்ன செய்யலாம். குழந்தைகள், சிறுவர்கள் செய்கின்ற விளையாட்டுகளை ரசிக்கத்தெரியாத இவரை என்ன செய்யலாம். தண்டனை என்பது திருந்துவதற்கு என்றால் இவர் இனி திருந்த என்ன இருக்கிறது. எனவே இவருக்கான தண்டனை அறிவுரையாக இல்லாமல் ஒரு இளம் பிஞ்சின் எதிர்காலம் சிதைக்கபட்டதற்கான தண்டனையாகத்தான் இருக்க வேண்டும் . அரசு இதில் எந்த சமாதானமும் செய்யாமல் விரைந்து தீர்ப்பு அளிக்க வேண்டும். மகனை இழந்து தவிக்கும் தாயின் மனம் சந்தோசப்படும் விதமாக அமைய வேண்டும் அந்த தீர்ப்பு .ஏற்கனவே குற்றவாளியை கைது செய்து அந்த தாயின் உள்ளத்தை குளிர்வித்த அரசு இதையும் செய்யும் என்று நம்புகிறேன்.

இலவசம் எல்லாம் இலவசம்

செப்டம்பர் 15 ம் தேதி முதல் தமிழகத்தில் இலவச வேட்டை நடக்க விருக்கிறது. இலவச மடிக்கணினி, இலவச மிக்ஸி மற்றும் கிரைண்டர், இலவச கறவைப்பசு என களை கட்டவிருக்கிறது தமிழகம். இவை எல்லாவற்றையும் வழங்கும் அரசு கறவைப்பசுக்களையும், ஆடுகளையும் ,கட்டுவதற்கும், பராமரிக்கவும் சிறிய உதவி செய்தால் தேவலாம். மேலும் செப்டம்பர் 15 க்கு மேல் தமிழகத்தில் பசுவாலும் ஆடுகளாலும் வரும் சட்ட ஒழுங்கு பிரட்சனைகளை சீர்படுத்த இப்போதே ஆயத்தமாவது நல்லது.

மிக்ஸி கிரைண்டர் உறுபத்தி ஆலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதால் கிடைக்கின்ற இலவச பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் இந்த வருடம் மட்டும் சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு இவை சென்றடையும் என்ற கணிப்பும் வரவேற்க்கத்தக்கது.

ஏற்க்கனவே நான் சொன்னது போல் மடிக்கணினி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அரசு சார் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கும் சென்று சேர்ந்தால் தான் திட்டம் வெற்றி பெற்றதாக பொருள் கொள்ள முடியும். என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

நேற்று வெளியான வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு மூலம், தமிழக அரசு இலவசமாக வழங்க இருக்கும் பொருட்களுக்கான செலவுகளை, ஈடுகட்டும் வகையில் புதிய வரி விதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஆடம்பர பொருட்கள் மீதான வரியை அதிகப்படுத்தியது, சதாரண பொதுமக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும் . மேலும் இவ்வரிவிதிப்பின் மூலம் அரசிற்கு கடந்த ஆண்டு வருமானத்தைவிட 4200 கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும். இலவசங்கள் இன்னும் கிடைக்கலாம் . . .

கடந்த நாட்களில் ஒளிபரப்பட்ட இலங்கையில் கொலைக்களம் என்ற வீடியோ ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது அதே சமயம் இந்திய அரசு இவ்வீடியோ குறித்து இன்னும் கருத்து எதுவும் கூறாமல் இருப்பது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் மந்திரி சபை மாற்றத்திற்கு பிறகு ஒரு வேளை இலங்கை குறித்த கருத்துக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்களில் கண்ணீரை வர வைத்த அந்த கொடூர சம்பவத்திற்கு அந்த இரத்தத்தில் கை நனைத்த அனைத்து கயவர்களும் பதில் சொல்லும் நாள் விரைவிலே வரும்.

விளையாட்டு ஆரம்பம்

நேற்று வெளியாகிய புதிய மந்திரி சபை பட்டியலில் எதிர்பார்த்தபடியே தி மு க தனது மறைமுக எதிர்ப்பை காட்டியுள்ளது. இது திமுக வின் எதிர்காலத்திற்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பது தெரியவில்லை, மேலும் திமுக வசம் இருந்த இரண்டு தொகுதிகளை தனி அமைச்சர்களிடம் ஒப்படைக்காமல் பிரதமர் விட்டது, மீண்டும் திமுக விற்கு ஒரு வாய்ப்பு என்றுதானே பொருள். எனினும் காங்கிரஸ் தன் நிலையிலிருந்து சற்று கீழிறங்கி உள்ளது என்றே நான் கருதுகிறேன். இதையே பிடித்து கொண்டு கனிமொழியின் ஜாமின் வரை திமுக செல்லுமானால் அது வெற்றி பெற வாய்ப்பும் இருக்கிறது.

அதே சமயம் படுதோல்விற்கு பிறகு இன்னும் தனது கட்சி வளர்ச்சிக்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாத வண்ணம் ஊழல் பிரட்சனைகளிலும் மந்திரி சபை பிரட்சனைகளிலுமே கவனம் செலுத்தி வருவது அதன் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும் . . ஸ்டாலினாவது இதில் கவனம் செலுத்துவது அவருக்கு நல்லது.

 

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நானும்டா

 

என்னங்க ஆச்சு இந்த தமிழ் சினிமாவுக்கு, சிறப்பான படங்களாக மைனாவும் தென்மேற்கு பருவக்காற்றும் பட்டி தொட்டியெல்லாம் நல்ல பெயர் வாங்கியபோதிலும் இளம் நடிகர்களுக்கு தாங்களும் ஒரு ரஜினியோ அல்லது விஜயோ ஆக வேண்டுமென்ற கிறுக்கு இன்னும் விட வில்லை. பருத்தி வீரன், நான் மகான் அல்ல என துவங்கியவருக்கும் சிறுத்தையாக பாய ஆசை என்ன செய்ய தலையெழுத்து. அதே போல் சுள்ளானுக்கு ஒரு முறை சூடு பட்டபின்பும் வேங்கையாக சீறினார் அவரும் அய்யோ பாவம் என்ன செய்ய இவர்களை. திருந்துக்கப்பா. . .

 

சிரிக்க . . .

மாலா : ஏண்டி கலா கல்யாணம்தான் நல்லபடியா முடிஞ்சிடுச்சே அப்புறம் ஏண்டி கவலையா இருக்கே?

கலா: போடி , மாப்பிள்ளை பசையுள்ள ஆளுன்னு அப்பா சொன்னாதாலதான் கட்டிகிட்டேன்

மாலா: இப்போ என்னடி ஆச்சி

கலா: மாப்பிள்ளை போஸ்டர் ஓட்டுற வேலை பாக்கிறாராம்டி . .

 

 

தோனியா இப்படி . . .

மேற்கு இந்திய தீவுக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டி 18 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இரு அணித்தலைவர்களாலும் கைகுலுக்கி டிரா என அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்தும் தோனி இப்படி செய்தது மிக தவறானது. அதைவிட கொடுமை என்னன்னா இது பற்றி கருத்து கூறும்போது ஒரு வேளை தோல்வி அடைந்திருந்தால் என்றார், இவரே இப்படி என்றால் இளம் வீரர்கள் என்ன செய்வார்கள். ஏன் தோனி இப்படி சொன்னார். மேலும் சேவாக், காம்பீர் மற்றும் சச்சின் இல்லாத நிலையில் இந்த இலக்கு கடினமானது என்னும் போது இளம் வீரர்களின் திறமையை இவர் சந்தேகப்படுகிறாரோ என்று நினைக்கத்தூண்டுகிறது.

 

இந்த வார டிரைலர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் சியானின் சினிமா .. எதிர்பார்ப்பு அதிகமாக்கி இருக்கு இப்படம் பப்படமா அல்லது பார்க்கும்படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

இந்த வாரம் பார்க்கத்தகுந்த படம்

கடந்த வாரம் வெளியான படங்களில் பார்க்கத்தகுந்த அல்லது பார்க்க கூடிய படமாக கருதும் சினிமா இங்கே  . .

 

கதாநாயகனுக்கு கேன்சர் என்ற பழைய விசயத்தை மறந்துவிட்டால் ஒரு சூப்பர் பொழுதுபோக்கு சினிமா இது . . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s