நாகரீக ரஜினி


நாகரீக ரஜினி

 

ஒரு சினிமா கலைஞனுக்கு மொத்த தமிழகமும் பிராத்தனை செய்தது என்றால் அது ரஜினிக்காக மட்டும்தான் இருக்க முடியும். ரசிகன் என்ற நிலைகடந்து பிராத்தனை செய்த கோடிக்கணக்கான பொதுமக்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர் அவர். அதனால்தானோ என்னவோ தனது கடிதத்தில் ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று காட்டி விட்டீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் ரசிகர்களின் அன்பு என்று குறிப்பிடவில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.

அடுத்தது, மாற்றங்களை விரும்பாதவர் எவரும் இல்லை, அன்று ஜெயலலிதா செய்த அதே தவறைத்தான் சிலபல மாற்றங்களோடு கருணாநிதியும் செய்தார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்தானே. அவரிடமிருந்து தமிழகம் காப்பாற்றபட மாற்றாக ஒரு ஆள் தேவை  . . .வேறு வழியில்லை நாம்தான் இது அல்லது அது என்ற பழக்கத்தில் உள்ளதால் இவருக்கே அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறோம். இவரும் தன் தவறை உணர்ந்தவராக இருப்பதால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் . . நம்மை போல் அவரும் மனிதர்தானே அதனாலே அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இன்று இந்தியா முழுவதும் தலைவரை ஆராதித்தாலும் அவர் தமிழகத்தின் சொத்தல்லவா. அந்த முறையில் தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் எந்த உதவியும் செய்ய தயாராக இருந்ததை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் அந்த நன்றி கடனையும் காட்டி இருக்கிறார் தலைவர்.

அதே சமயத்தில் நட்புக்கு மரியாதை செய்யும் தலைவர் தனக்கு உள்ளத்தில் இடம் தந்த நண்பர் கலைஞருக்கு ஆறுதல் தரும்பொருட்டு பேசி இருப்பதும் அவருக்கு உரிய மரியாதையை இப்போதும் காட்டி இருப்பதையும் பார்க்கும் போது இந்த உலகத்திலும் , சினிமா கலைஞனாகவும் , அரசியலில் ஒரு வாக்காளன் என்ற முறையிலும் தன் நாகரீகத்தை சிறப்பாக காட்டிய ரஜினி ஒரு சிறந்த மனிதர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது விடுத்து இதையும் காரணம் காட்டி விமர்சனங்களை எழுதும் சில அதிபுத்திசாலிகளை என்ன சொல்ல . . .

ரசிகர்களுக்கு தலைவர் நன்றி சொல்லத்தான் வேண்டுமா?

ஏன். . அவரே சொன்னதுபோல் அண்ணனாக தம்பியாக கருதப்படும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எல்லாரும் செய்வது போல் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள் நாம் நம் உறவுக்கு நன்றி சொல்வோமா இல்லை உறவும் எதிர்பார்க்குமா? எனினும் நன்றி தெரிவித்த தலைவா நீ இன்னும் உயர்ந்து விட்டாய். . .

நன்றி தெரிவித்த கடிதம் இங்கே

 

This slideshow requires JavaScript.


Advertisements
By ரெஜோலன் நெல்சன் Posted in ரஜினி

One comment on “நாகரீக ரஜினி

  1. ///ஏன். . அவரே சொன்னதுபோல் அண்ணனாக தம்பியாக கருதப்படும் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் எல்லாரும் செய்வது போல் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள் நாம் நம் உறவுக்கு நன்றி சொல்வோமா இல்லை உறவும் எதிர்பார்க்குமா? எனினும் நன்றி தெரிவித்த தலைவா நீ இன்னும் உயர்ந்து விட்டாய். . .///

    .
    Arumaiayana Vasagam…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s