வா தலைவா வா


“ நம்ம ரசிகர்கள் எல்லாரும் தலைநிமிர்ந்து நிக்கிற மாதிரி நான் நடந்து கொள்வேன்”

இந்த வார்த்தைகளை தலைவர் குரலில் அதுவும் உடைந்து போன நம்ப முடியாத நெஞ்சம் வலிக்கின்ற குரலில் கேட்டபோது ரசிகனாகிய நான் கலங்கவில்லை என்றால்தானே வியப்பு.

இந்த நேரத்திலும் விஷம் பரப்பும் சில நல்ல உள்ளங்களுக்கு நான் என்ன சொல்வது, தலைவர் பாணியில் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டாலே அது அவர்களுக்கான தண்டனைதானே. எதற்க்காக இவர்கள் இப்படி இருக்கிறார்கள், ரஜினி மீது இவர்களுக்கென்ன இத்தனை வெறுப்பு சிந்தித்து பார்த்தால் சிரிப்புதான் வரும்.

நடிகனுக்கு ரசிகனாக இருப்பது அப்படி ஒன்றும் தவறில்லை என்பதை உணராமல் முகமூடி அணிந்து கொண்டு தங்களை தானே அறிவாளிகள் என்றோ இல்லை புத்திசாலிகள் என்றோ எண்ணிக்கொண்டு இருக்கின்ற நண்பர்களே, ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலகில் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் தமிழினத்தின் ஒரு அங்கம் தான் நாம்.

நமது பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெரியவர்களை அத்தை மாமா என்று உரிமையோடு அழைக்கும் பழக்கம் நமக்கு மட்டுமே உண்டு என்பதைக்கூட புத்திசாலிகள் என்று நினைத்து மறுத்து பேசும் பழக்கமுடைய உங்களை நான் என்ன சொல்ல.

அத்தை மாமா உறவுகள் ஒரு நாளிலோ அல்லது ஒரு வருடத்திலோ மறைந்து விடாமல் மரணம் வரை நம்முடனே வருமே அதை எப்படி சொல்கிறீர்கள், இவை அனைத்தும் நமது உணர்வும் உறவும் சார்ந்ததே, அதைப்போல்தான் எனக்கும் என் நண்பர்களுக்கும் ரஜினியை ஒரு உறவாக பிடித்திருக்கிறது அதை நகைப்புக்காகவோ அல்லது விளையாட்டாகவோ கிண்டிப்பார்ப்பது அநாகரீகம் என்பதை நீங்கள் எப்போது உணர்வீர்கள்.

உங்களுக்கான பதிலாக இந்த பதிவு அமைவதில் எனக்கு விருப்பமில்லை இருப்பினும் உங்களுக்கு பிடித்த சில காரியங்கள் இருக்குமே அதைப்பற்றி அடுத்தவர் விமர்சித்தாலோ அல்லது கிண்டல் செய்தாலோ உங்கள் மனம் ஒரு வினாடியாவது வேதனைப்படுமே அதுபோல் தான் மற்றவர்கள் உணர்வும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள், இருப்பினும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி. ஏனென்றால் கிண்டலும் கேலியுமாக எங்களை பார்க்கும் நீங்களும் தலைவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு விசாரித்து மனது உருகும் அந்த வினாடிப்பொழுதுக்காக என் நன்றி.

முதல் வரியில் தலைவர் சொன்னது என்ன தெரியுமா?

இவருக்காகவா நீங்க எல்லாரும் இப்படி என்ற கேள்வி கேட்கும் சில நல்லவர்களுக்கு மத்தியில் இவருக்காகத்தான் என்று சொல்லும்படியாக திரும்பி வருவேன் என்று பொருளில்தான் தலைவர் அதை சொல்லி இருப்பதாக உணர்கிறேன்.

தலைவர் என்று ஏன் அவரை அழைக்கிறோம் என்பதையும் ரசிகன் என்றால் என்ன என்பதையும் நண்பர் கிரி அழகாக இங்கே எழுதி இருக்கிறார் அதையும் படியுங்கள்.

http://www.giriblog.com/2011/05/thalaivar-rajini.html
http://www.giriblog.com/2009/12/what-is-wrong-in-become-rajini-fan.html

எதிரியையும் நண்பனாக்கி கொள்கின்ற என் தலைவருக்கு என்ன வந்து விடப்போகிறது, மற்ற ரசிகனைப்போல் நான் பயப்பட வில்லை அழுதுவிட வில்லை மாறாக கனத்த இதயத்தோடு உன்னிப்பாக கவனிக்கிறேன், என் போன்ற பல கோடி ரசிகர்களின் பிராத்தனை உள்ளபோது என்ன நடந்துவிடும் என்றே உரக்க சொல்வேன்,
ஒரு காலத்தில் சின்ன பிள்ளைகளாக தலைவரின் ஸ்டைல் செய்து நடந்து நாங்கள் இன்று தலைவருடைய படத்துக்கு தலைவருடன் உழைத்து அதை உலகம் அறிய தந்திருக்கிறோம் என்றால் எங்கள் வளர்ச்சி பற்றிய உண்மை உங்களுக்கு தெரியும்,

எந்திரனின் குழுவில் இடம்பெற்ற அனைத்து இந்தியர்களும் தலைவரின் தீவிர ரசிகர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மற்றவர்களை குறை கூறுவது என்பது ஒரு மனநோய் அது உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அல்லது நாம் மற்றவர்களால் மதிக்கப்படுவதில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இதையும் மாற்றிக்கொள்ளுங்கள் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்,

அவரை குறைகூறும் சிலரை பற்றி தலைவர் இப்படி சொல்லுவார் (2.15 ல் கவனமாக கேளுங்க)

எனவே நண்பர்களே அவரை நல்லவர் என்றோ பெரிய ஒரு மகான் என்றோ நான் சொல்ல வரவில்லை உங்களுக்கு பிடித்தவர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று யாராவது சொல்ல முடியுமா, மகனுக்கு பிடித்த அம்மாவை மருமகளுக்கு பிடிப்பதில்லை அதற்காக அம்மா சரியில்லை என்பதாகிவிடுமா, எனவே உறவு என்பதும் உணர்வு என்பதும் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும் அவர்களை அரவணைக்க முடியாவிட்டாலும் அலட்சியப்படுத்தாதீர்கள் அம்புகளால் காயப்படுத்தாதீர்கள்,

என்னைப்போல் எங்களைப்போல் உங்களையும் எங்கள் தலைவர் சில நேரங்களிலாவது சந்தோசப்படுத்தி இருப்பார், உங்களுக்கு தெரியாமல் போன அல்லது உங்களால் மறுக்கப்பட்ட அந்த ஒரு நிமிடத்திற்காகவாவது எங்கள் தலைவருக்காக இல்லையில்லை நடிகர் ரஜினிக்காக ஒரு நிமிடம் மவுனமாக அவர் நலம் பெற நினையுங்கள் ,

நன்றி நன்றி நன்றி

Advertisements
By ரெஜோலன் நெல்சன் Posted in ரஜினி

One comment on “வா தலைவா வா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s