பிளஸ் டூ தேர்வு முடிவுகள்


பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

முதல் இடம் மாணவி கே.ரேகா

ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.

2வது இடத்தில் வேல்முருகன்

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி, ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா 1186 *-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.

கணிதத்தில் 2720 பேர் 200 மதிப்பெண்கள்

பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்து 720 பேர் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழில் 3 பேர் முதலிடம்:

தமிழ் பாடத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாடமி மாணவர்கள் கோகுல கிருஷ்ணன், மாதேஸ்வரன், தினகரன் ஆகியோர் 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர்.

கணிதப் பாடத்தில் அதிக பட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவர்கள் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியலில் ஆிரத்து 243 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

உயிரியலில் 615 பேரும், கணிணி அறிவியலில் 223 பேரும்,

தாவரவியலில் 4 பேரும் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஒருவர் கூட விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெறவில்லை.

தேர்ச்சி சதவிகிதம் 85.9
இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7 லட்சத்து 81 ஆயிரத்து 385 மாணவ-மாணவியரில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்

பிளஸ்டூ தேர்வில் ஒட்டுமொத்தமாக 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விகிதம் 85.15 சதவீதமாகும். மேலும் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகளே அதிக தேர்ச்சி

மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.3 சதவீதம்தான்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் அது அப்படியே நடந்துள்ளது.

அதேசமயம், ஒட்டுமொத்த் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மறு கூட்டல்

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில், விடைத்தாள் நகல் கோருவோர், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் அதற்காக விண்ணப்பிக்கலாம்.

அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

25ம் தேதி மதிப்பெண் பட்டியல்

வருகிற 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும்.

அதிக மதிப்பெண் பெற்றும் சோகம்

பிளஸ்டூவில் 1191 மதிப்பெண்கள் பெற்ற சென்னை குரோம்பேட்டை மாணவி சந்தியாதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராவார். ஆனால் அவர் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் ரேங்கிங் கிடைக்காமல் போய் விட்டது.

சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவர் தமிழை முதல் பாடமாக எடுக்கவில்லை, சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்திருந்தார். இதனால் இவருக்கு மாநில அளவிலான ரேங்கிங் கிடைக்கவில்லை.

தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழை முதல் பாடமாக சந்தியா எடுக்காததால் அவருக்கு முதலிடம் நழுவிப் போயுள்ளது.

அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

3வது இடத்தை பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்தவரான சென்னை அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த எச்.எப்.சி பள்ளி மாணவி மகாலட்சுமி பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 1189 ஆகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s