இது நல்லாவா இருக்கு


“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” தனது பேஸ்புக்கில் இயக்குனர் வெங்கட் பிரபு திருட்டு விசிடி பற்றி எழுதும் போது குறிப்பிட்டு இருக்கிறார், வானம் மற்றும் கோ திரைப்படங்கள் இப்போது டிவிடி வடிவில் மிக சரளமாக கிடைப்பதுதான் காரணம்,

அது எல்லாம் சரிதான் திருட்டு விசிடி குறித்து பேசும் போது பல தரப்பட்ட காரணங்களை சொல்கிறார்கள்

இயக்குனர்கள் “ நோ டு பைரஸி” என்று நம்மை சொல்ல சொல்கிறார்கள், நாமோ டிக்கெட் விலையும் தியேட்டரும் சரியில்லை என்கிறோம், சரி அடுத்து தியேட்டர்காரங்க என்ன சொல்கிறார்கள் படமே சரியில்லை என்கிறார்கள், இதெல்லாம்தான் காரணமா சற்று சிந்தித்து பார்ப்போம்

திரை உலகத்திற்க்கும் திருட்டி விசிடிக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுவார்கள்,

முதலில் எளிதான முறையில் வீட்டிலிருந்தே படம் பார்க்க விருப்பப்பட்ட பொதுமக்கள் திருட்டு விசிடிகளை வாங்க முன் வந்தார்கள் அதிலும் செலவும் மிக குறைவே என்பதும் ஒரு காரணம்.

அடுத்து ரசிகர்கள் என்ற போர்வையில் சினிமா ரீலீஸ் ஆகும் சமயங்களில் இவர்கள் பண்ணும் அலம்பு இருக்கிறதே பொதுமக்களும் சரி குடும்பமாக படம் பார்க்க போகவே முடியாது என்கிற பட்சத்தில் திருட்டு விசிடி எவ்வளவோ மேல்

வருடத்திற்கு ரீலீஸ் ஆகும் படங்களில் 5 படங்கள் நல்ல படங்களாக தேர்வு பெற்றாலே அதிசயம் என்கிற அளவிற்க்குத்தான் சினிமா உலகம் இருக்கிறது, வீட்டில் படம் பார்க்கும் போது பாதியிலே சிடியை எடுத்து “வீசிட” முடியும், தியேட்டரில் வெளியே வரலாம் ஆனால் இழந்த பணம் . . . . .

இதற்கு எல்லாம் அடிப்படையிலே சினிமாக்காரர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள், எனினும் அவர்களே திருட்டு விசிடிக்கு எதிர்ப்பு காட்டுவார்கள்

முதலில் அவர்கள் திருத்த வேண்டியவைகள் இவை;

நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்களும் கதாபாத்திரங்களும் படைக்கப்பட வேண்டும்

(மைனா மாதிரி படங்கள் ஜெயிப்பது எப்படி)

தியேட்டர் டிக்கெட் விலை பாதிக்காத நிலையில் இருக்க வேண்டும்

(ரானா துவக்க விழாவிற்கு கமெண்ட் அடித்த நண்பர் ஒருவர் இப்படி சொன்னார் “ம் ஆரம்பிச்சாச்சு இனி முன்னூரு ரூபாய வாங்கிற வரைக்கும் விடமாட்டானுக” ஆக ரஜினி படம் பார்க்க வேண்டுமானால் டிக்கெட் ஒன்றுக்கு முன்னூரு ரூபாய் தேவை என்பது புரிகிறதா)

ரசிகர் கூட்டங்கள் உங்களுக்கு தேவையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் (தல கலைச்சிட்டார் .. மத்தவங்களும் எப்படி)

இந்த மாதிரி எல்லாம் செய்த திருட்டு விசிடி குறையுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் ஆனா தியேட்டருக்கு வரும் கூட்டம் சற்று கூடலாம்.

கடைசியாக உங்கள் திரை உலகில் நடக்கும் சில பல தில்லு முல்லு வேலைகளை நீங்கள் நிறுத்தினாலே திருட்டு வீசிடி குறையும்,

அந்த நடிகர் நடிக்கும் சினிமாவுக்கு இந்த நடிகர் திருட்டு வீசிடி ரீலீஸ் செய்வதும், அதே போல் இயக்குனர்களும் இத்தகைய விளையாட்டை விளையாடாமல் இருந்தாலே பாதி திருட்டு வீசிடி வெளிவருது தடுக்கப்படும்,

இறுதியாக ஒன்று

தயாரிப்பு செலவை குறைக்க நடவடிக்கை எடுங்க போதும், கோடிகளில் கொட்டு கொடுக்கும் சம்பளங்களால் தான் சினிமா அழிகிறது என்பதை கண்கூடாக பார்த்தபின்பும் ஏன் அதில் இத்தனை தடுமாற்றம்,

பெருமழக்காலம், அச்சுவிண்டே அம்மா, ஒரேகடல், கருத்தபட்சிகள் என்று கதாபாத்திரங்களும் கதைகளும் மாநிலம் தாண்டியும் ஜெயிக்க வைத்த மலையாள சினிமாக்கள் ஆனால் அவர்களும் கோடிகளுக்கு ஆசைப்பட்டு செய்த படங்கள் என்ன ஆனது என்று பார்த்தும் நாம் நம்மை சரி செய்யா விட்டால் ம் ம் ம் ம் ம்

இறுதியாக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு,

நீங்கள் சொல்வது போல் “நோ டு பைரஸி” என்று சொல்கிறோம், ஆனால் முதல் இரண்டு படங்களில் சம்பாதித்த  பெயரையும் இரண்டே படங்களில் தனக்கென உருவான பாணியையும் மூன்றாவது படத்தில் வேண்டுமென்றே இழந்த உங்கள் நான்காவது படத்தை பார்க்க நாங்கள் தியேட்டருக்கு வரணுமா வேண்டாமா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s