ஐ பி எல் ஒரு பார்வை


கடந்த மூன்று ஆண்டுகளை விடவும் இந்த முறை ஐ பி எல் சூடு இல்லாமலே துவங்கியது காரணம் ஒருவேளை நாம் உலக கோப்பையை வென்று விட்டோம் என்பதாக கூட இருக்கலாம் இல்லை என்றால் வீரர்கள் அணிமாறியதும் கூட காரணமாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் 40 வது போட்டி நடைபெறும் இந்த சமயத்தில் ஐ பி எல் கொஞ்சமல்ல ரொம்பவே சூடு பிடித்திருப்பது உண்மைதான். அரை இறுதிக்குள் வரும் அணிகள் குறித்த சிலபல எண்ணங்களை மாற்றி அமைத்து பல திருப்பங்களை கடந்து கொண்டிருக்கிறது ஐ பி எல்.

39 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் அணிகளின் தரவரிசைப்பட்டியல் இப்படி இருக்கிறது

தரவரிசை பட்டியல்

 

அணி போட்டி வெற்றி தோல்வி முடிவில்லை புள்ளிகள் ரன்ரேட்

ராஜஸ்தான் ராயல்

9

5

3

1

11

-0.145

கொல்கத்தா

8

5

3

0

10

+0.530

மும்பை

7

5

2

0

10

+0.498

சென்னை

8

5

3

0

10

+0.247

ராயல் சேலஞ்சர்ஸ்

8

4

3

1

9

-0.052

டெக்கான் சார்ஜஸ்

8

3

5

0

6

+0.048

டெல்லி

8

3

5

0

6

-0.031

கிங்ஸ் லெவன்

6

3

3

0

6

-0.276

கொச்சி

8

3

5

0

6

-0.853

புனே

8

2

6

0

4

-0.089

வழக்கம்போல் ராஜஸ்தான் ராயல் அணி தன் மாயஜால வேலைகளால் முதலிடத்தில் இருக்கிறது. துவக்கத்தில் மிகவும் தளர்ந்த நிலையில் இருந்த சென்னை முன்னேறி முதல் நான்கு அணிகளுக்குள் வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம்தான் ஆனால் நல்ல வீரர்கள் இருந்தும் இன்னும் தடுமாறும் டெல்லியை நம்புவதற்கில்லை அது எப்போது “வீறு” கொண்டு எழும் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது , அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த ஆட்டத்தில் டெல்லியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய போதும் சேவாக் மட்டுமே நின்று அணியின் ஸ்கோரை 157 க்கு கொண்டு சென்றார். அதிலும் தான் சந்தித்த 47 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த சேவாக் தான் சந்தித்த கடைசி 15 பந்துகளில் அடித்த ரன்கள் எண்ணிக்கை 49. இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே சேவாக் நின்று ஆடி இருக்கிறார். இவர் ஆடினால் அவரது அணிக்கு நல்லது.

இத்தனை ஆண்டுகளில் சச்சின் செய்யாத சாதனைகளே இல்லை என்ற நிலையில் ஒருதினப்போட்டி மட்டுமல் 20 ஓவர் போட்டிகளிலும் அசைக்க முடியாத ஸ்டார் தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறார் சச்சின் மீண்டும் மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை தன் தலைக்கே கொண்டு வந்து கொண்டிருக்கிறார் 8 போட்டிகளில் விளையாடியுள்ள் சச்சின் அடித்த மொத்த ரன்கள் 327 இதில் 1 சதமும் 2 அரைசதங்களும் அடங்கும். ரன் பெறும் விகிதம் 114.7 ஆக உள்ளது. அதே சமயம் இன்றைய 41 வது ஆட்டத்தில் ஆடும் சேவாக் ஆரஞ்ச் தொப்பியை பெற 40 ரன்கள் அடித்தால் போதுமானது இவரது ரன் பெறும் விகிதம் 168.4. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

அதுபோல் வயல்ட் தொப்பியை பெற போட்டியே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறார் மலிங்கா, இந்த மலிங்காவை சரியான நேரத்தில் உபயோகிக்க தவறிய சங்ககார இழந்தது உலக கோப்பையை ஆனால் சச்சின் மிக சரியாக உபயோகித்து தன் அணிக்கான வெற்றி கனியை பறித்து கொண்டிருக்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட் செய்த போதே வெற்றி மும்பைக்குத்தான் என்பது உறுதியாகி விட்ட ஒன்று. அதிலும் சச்சினின் 51 ரன்கள் சேர்ந்து பஞ்சாப் அணியின் வெற்றி இலக்கு 160 ஆகியது.

இறுதியாக முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழந்து 62 ரன்களுக்கு ஆட்டம் தொடர்கிறது வழக்கமாக கை கொடுக்கும் வால்தட்டி 33 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளது பஞ்சாப்,

இந்த ஐ பி எல்லில் மிக சந்தோசமாக இருக்கும் அணி உரிமையாளர் ஷாருக்கான் தான், மற்ற மூன்று ஆண்டுகளிலும் இவர் அணி பட்ட அடிகள் அதிகம், இந்த முறை அதிக விலைக்கு எடுக்கப்பட்ட கவுதம் காம்பீர் இதுவரை அணி வீரர்களை நல்ல விதமாக வழிநடத்தி தானும் தேவைக்கேற்ப விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து செல்கிறார் , எனக்கும் இந்த அணி மீது நம்பிக்கை உள்ளது.

எது எப்படியோ வீரர்களின் செயல்திறன் அணித்தலைமை ஆகியவற்றை கணக்கில் சேர்க்கும் போது இறுதியாக முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் என நான் குறிப்பிடுபவை

மும்பை இந்தியன்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s