இப்பதான் நீங்க “தல”


On this special day i just want to say

Happy Birthday

மே 1 முதல் தன் தலைமையில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவதாக அறிவித்திருக்கிறார் “தல” அஜீத்.

வாழ்த்துக்கள் மிஸ்டர். அஜித்

சினிமா என்று வரும் வேளையில் என் ரசிப்பு ஏனோ ரஜினி என்ற காந்தத்தை விட்டு இதுவரை அசையவே இல்லை வேறு எந்த நடிகரும் என்னை கவரவுமில்லை, எனினும் சிலபல தருணங்களில் அஜித்தை ரசித்திருக்கிறேன், வழக்கமான நடிகர்களிடமிருந்து மிக வித்தியாசமானவர் அஜித், அவருடைய சினிமா உலக அறிமுகமும் சரி அதன் பின் அவருடைய நடிப்பும் சரி அவருடைய வளர்ச்சியும் சரி எல்லாமே வித்தியாசமாகத்தான் அமைந்தது.

உழைப்பு + தன்னம்பிக்கை இவற்றை மட்டுமே கொண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமா உலகில் உண்டாக்கியவர் அஜித்,

அரசியல் விழாக்களில் தேவையில்லாமல் நடிகர்களை அமரச்செய்வதை எதிர்த்து குரல் எழுப்பியவர் அதுவும் கருணாநிதியின் முன்னிலையிலே,

சினிமா நடிகர்களும் சினிமா கலைஞர்களும் ஏற்பாடு செய்கின்ற விழாக்களுக்களில் அவர் ஒருபோதும் கலந்து கொள்வதில்லை, காரணம் மிக யதார்த்தமானது மிக பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கான டிக்கெட் அதிக விலைக்கே விற்க்கப்படும் அது மட்டுமல்லாமல் விழாக்களில் கலந்து கொள்ள வரும் நடிகர்களை காண வரும் ரசிகர் கூட்டத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிரமப்படும் இப்படி பல காரணங்களை விட சினிமா வளர்ச்சிக்காக என்று நடத்தப்படும் விழாக்கள் மூலம் பொதுமக்களின் பணமே வசூலிக்கப்படுகிறது, இதை எதிர்த்தவர் அஜித்

This slideshow requires JavaScript.

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை மீடியாக்களிடமிருந்து தள்ளியே வைத்திருப்பார்கள், அது தேவையில்லை என்று நினைத்தவர் அஜித், எங்கு வந்தாலும் தன் குடும்ப சகிதமாக வரும் வழக்கம் உடையவர்,

மேலும் சினிமா இல்லை என்றால் பணம் உண்டாக்கும் தொழில் என இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் தன் விருப்பமான ரேஸ், விமானம் என விளையாட்டிலும் கவனம் செலுத்துவார்

இப்படி தன் சினிமா உலகத்தில் மட்டும் சினிமா எனவும் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு சாதாரண மனிதனாக இருக்கவே விருப்பபடுவார், இருப்பினும் தவிர்க்க முடியாத பல விசயங்கள் சினிமாவில் உண்டுதானே , அதற்காக தானும் விட்டு கொடுத்து இருந்தவர்,

இப்போது அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பு சினிமா உலகத்திற்கு புதுசு மட்டுமல்ல தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது, ரசிகர் மன்றங்கள் இல்லை என்றால் சினிமா நடிகன் வாழ்க்கையே இல்லை என்ற ஒரு மாய காலகட்டத்தில் தனக்கு தன் சினிமாவை ரசிக்கும் பொதுவானவர்கள் போதும் என்ற மனநிலையும், ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இளைஞர்களின் நேரத்தை வீணடிப்பதும் தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்

எப்படி இருந்தாலும் இது ஒரு நல்ல துவக்கமாக இருந்தால் தமிழ் சினிமாவுக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கும் நல்லது.

இனிதான் முக்கியமானது

மேற்சொன்ன இவையல்லாது, தன் சினிமா நண்பர் விஜயின் அரசியல் பிரவேசம் அவரது அப்பாவின் தேர்தல் பிரச்சாரம் என ஒரு கட்சி சார்பாக மாறிப்போன விஜய்க்கு எதிராக தன் ரசிகர்கள் தன் பேச்சைக்கூட கேட்காமல் திமுக அணிக்காக தேர்தல் வேலை பார்த்த கோபம் கூட காரணமாக இருக்கலாம், எப்படி இருந்தாலும் திமுக வின் அனுதாபி அல்லது அதிமுக வுக்கு எதிரானவர் என்ற ஒரு பெயர் தன் ரசிகர்களால் உருவாக்கப்பட்டால் அது தனிப்பட்ட முறையில் அஜித்துக்கு நல்ல பெயராக இருக்காது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.

எது எப்படியோ

அரசியல் அரசியல்வாதிகளின் தொழில்

சினிமா நடிகர்களின் தொழில்

நீங்க உங்க தொழிலை பாருங்க நாங்க எங்க தொழிலை பார்க்கிறோம்

என்பதை மிக சரியாக உணர்ந்திருக்கும் அஜித்திற்கு வாழ்த்துக்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s