உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டம் 2011


உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டம் 2011

ஏப்ரல் 24 ம் தேதி உலகமெங்கும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட உயிர்ப்பு பெருவிழா இங்கு பஹ்ரைனிலும் புனித திருஇருதய ஆலயத்தில் தமிழ் பங்கு இறைமக்கள் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது, அருட்திரு.ஆண்ட்ரூஸ் அவர்களால் சிறப்பான திருப்பலி நிறைவேற்றப்பட்டது, அதன்பின் எல்லாரும் ஒருவருக்கொருவர் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை சொல்ல பங்கின் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது, இத்தோடு உயிர்ப்பு பெருவிழா நிறைவு பெற்றது,

திருப்பலி நிறைவடைந்தது ஏறக்குறைய 11.45 மணிக்கு அதன்பின் நானும் எனது குடும்பமும் பாங்காக் இண்டெர்நேஷனல் உணவகம் சென்று மதிய உணவு உண்டபின் வீட்டிற்கு வந்தோம். இதுதான் இந்த ஆண்டின் உயிர்ப்பு விழா,

இந்த நேரத்தில் என் எண்ணங்கள் பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி நகர்ந்தது. இதே பெருவிழா எங்கள் ஊரான கூட்டப்புளியில் எப்படி கொண்டாடப்படும் தெரியுமா,

அன்றைய தினம் அனைத்து மக்களும் கடற்கரையில்தான் இருப்போம், ஆண் பெண் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லாரும் கடற்க்ரையில் நனைந்தும் குளித்தும் விளையாடி கொண்டிருப்பார்கள், அன்றைய தினம் விட்டிலுள்ள பெண்கள் அனைவரையும் கட்டுமரங்களில் ஏற்றி கடலுக்குள் உலா வருவது ஆண்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்

பசி என்ற ஒன்றை மறந்து விட்டு அன்றைய தினம் முழுவதுமாக கடலில் விளையாடி கொண்டிருப்போம், பசிக்கு வேண்டுமானால் கொல்லாம்பழம் கிலோக்கணக்காய் வாங்கி எல்லாரும் உண்டு மகிழ்ந்து கடலில் குளிப்பது வழக்கம்,

ஆலயத்தில் வழங்கப்படும் நேர்சை தண்ணீர் வாங்கி வந்து வீடு முழுவதும் தெளித்து வைப்பதும் பெரிய வெள்ளி அன்று வழங்கப்படும் கஞ்சி வாங்கி குடிப்பதும் என்று மண்ணோடு சேர்ந்த மகிழ்சியான தருணங்கள் அவை,

ஆனால் இன்றோ பைபர் படகுகள் வந்துவிட்டன, கொல்லாம்பழங்கள் போய்விட்டன, சண்டைகள் அதிகமாகிவிட்டன, சமாதானம் போய்விட்டது, மொத்தத்தில் கொண்டாட்டங்கள் குறுகி விட்டது. . .

இப்படி கொண்டாட்டங்களை எல்லாம் இழந்து விழா கொண்டாடும் போதுதான் ஊரின் மகத்துவம் புரிகிறது. என்ன செய்ய

உழைப்பு வேண்டி

உறவுகளை விட்டு

உலோக பறவையில்

உலாவுகிறோம்

மீண்டும் இத்தகைய கொண்டாட்டங்களை கொண்டாட நமது பாதுகாவலராம் புனித சூசையப்பரிடம் மன்றாடுகிறேன்

குறிப்பு:

இப்பதிவை படிக்கும் நமது ஊரைச்சார்ந்த நண்பர்கள் உயிர்ப்பு பெருவிழா குறித்த தங்கள் அனுபவங்களை எழுதி அனுப்பினால் நன்றாக இருக்கும், ஆங்கிலத்திலும் எழுதலாம். நன்றி. . .

ரெஜோலன் நெல்சன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s