பிறந்தநாள் வாழ்த்து


தலைப்பை படித்தவுடனே எல்லாருக்கும் புரிந்திருக்கும் இது யாருக்கான பிறந்தநாள் வாழ்த்து என்பது . . .

வாழ்த்து சொல்ல வயது தேவையில்லை, அதிலும் அன்று தமிழகத்தில் தனக்கான இருக்கையை அனேக பேர் இதயத்தில் போட்டு வைத்தவர் , . இன்று இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இதய இருக்கைகளை போட்டு சிம்மாசனம் இருக்கும் எங்கள் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கான வாழ்த்துதான் இது.

எத்தனை பதிவர்கள் எத்தனை எத்தனை விதமான வாழ்த்துக்கள் என கலக்கி கொண்டிருக்கும் சமயம் இதுவும் அதில் ஒன்றாக இருக்கட்டுமே . .

வாழ்த்துக்கள் தலைவரே

61 வது பிறந்தநாள், அதன் முன் 60 வது கல்யாணம் என கலக்குறீங்க. . எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள்.

என் நினைவு சரியாக இருந்தால் உங்களது நல்லவனுக்கு நல்லவன் என்ற சினிமாதான் என்னை உங்களது ரசிகனாக ஆக்கியது. அந்த படம் மூலம் தான் நீங்கள் ஒரு ஆதர்ச ஹீரோ வாக எனக்கு அறிமுக மானீர்கள். . அதனாலோ என்னவோ இன்று வரை உங்களது அனைத்து படங்களையும் ரசித்திருக்கிறேன்.

சில சினிமாக்கள் என்னை மவுனித்திருக்கிறது (உங்களது நடிப்பில்) சில சினிமாக்கள் அதிகம் பேசவைத்திருக்கிறது (உங்களது அதிரடியில்) சில சினிமாக்கள் செயல்பட வைத்திருக்கிறது (உங்கள் ஸ்டைலில்) இன்னும் சில திரைப்படங்கள் உணர்ச்சிபட செய்திருக்கிறது. இப்படி பல தரப்பட்ட சினிமாக்கள் செய்த நீங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் படிகள் ஏறி ஏறி புதிய பரிணாமத்தை தொட்டாதாகத்தான் வரலாறூ சொல்லும்.

எனினும் சமீப காலமாக நடிகன் என்ற நிலை மாறி மனிதனாக என்னை போன்ற பலர் இதயத்தில் நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்கள், இந்த நிலையை அடைய நீங்கள் எத்தனை சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பதை உங்களது சமீபத்திய பேட்டி மற்றும் “எந்திரன் உருவான கதை” மூலம் உணர முடிந்தது.

இப்படி பல ஆண்டுகளாக உருவான உங்களை அவ்வளவு எளிதில் அரசியலில் இழந்து விட நாங்கள் தயாரா இல்லை. இன்று கட்சி ஆரம்பிக்கும் சில நடிகர்களை பார்க்கும் போது நிஜத்தில் உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம். தன்னை பற்றி சினிமா உலகமல்லாது வெளிஉலகத்தில் யாரும் அறிந்திடாத நிலையில் ஒருவர் தன்னை கருப்பு எம்ஜிஆர் என சொல்லிக்கொள்வது எப்படி . . இதாவது பரவாயில்லை சினிமாவை பற்றியே இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளாத வெறு ஒரு நடிகர் கட்சி ஆசையில் இருப்பதும் என்ன சொல்ல . . . விட்டுத்தள்ளுங்கள்

எனினும் கையெட்டும் தூரத்தில் இருக்கை போட்ட பிறகும் விலகியே இருக்கும் மனதும் அறிவும் எதையுமே பற்றாத ஆசையும் எப்படி உங்களுக்குள் . .

சிலர் வேண்டுமானால் சொல்லலாம் தோரணம் கட்டும் போஸ்டர் ஒட்டும் ரசிகர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று . .நிச்சயமாக இந்த கேள்விக்கு பதில் தர நீங்கள் முன்வர வேண்டாம். எதிர்பார்த்து ரசிகராகவில்லை இன்னும் சொன்னால் உங்கள் வாயாலே சொல்லலாம் . .”இது தானா சேர்ந்த கூட்டம்” எனவே எனக்கு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. நீங்கள் அரசியலுக்கு வந்துதான் என் போன்ற ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இல்லை. .

எப்போதும் உங்களோடு இருக்கும் எங்களுக்கு நீங்களும் எப்போதும் எங்களோடே இருந்தால் போதும் . . புரியவில்லையா எங்களுக்கு நீங்கள் வெள்ளித்திரையிலே மின்னும் நட்சத்திரம் மட்டுமல்ல , அடுத்த தலைமுறைக்கு எடுத்துகாட்டான சரித்திரமாக, மனிதனாக, நடிகனாக ஏன் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டுகிறேன்.

2010 ல் இந்தியாவே குழம்பித்தவித்த ஒன்றில் உறுதியாக நின்று சரித்திரம் படைத்தது போல் இன்னும் படைக்க நிறைய காத்து இருக்கு . . அதற்கு நீங்கள் தயாரகுங்கள் . . நாங்களும் எப்போதும் போல் இப்போதும் உங்களோடு இருக்கிறோம் . .

மீண்டும் ஒரு முறை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . . .

 

கடைசியாக ஒன்று:

இப்பவும் உங்களை நினைத்தால் நினைவுக்கு வருவது

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மேமேமேமேமேமே

லகலகலகலகலகலகலக

ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னாமாதிரி

இப்படி பல

இன்னும் இதுமாதிரியான பல பவர்புல் பெர்பாமென்ஸ்க்கு காத்திருக்கும்

உங்கள் ரசிகன்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s