ஆஸ்திரேலியாவில் எந்திரன் சாதனை


நேற்று காலை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் எந்திரனது முதல் பிரதி விமானம் முலம் வந்தடைந்தது.

எந்திரனது ஆஸ்திரேலியாவுக்கான முதல் பிரதி நேற்று காலை 10 மணி அளவில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள கிங்க்ஸ்சிமித் சர்வதேச விமான நிலையத்தை வந்து அடைந்தது. இத் தகவலை ஆஸ்திரேலிய விநியோகஸ்தர் ஜெகா ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இதேவேளை கடந்த ஞாயிற்று கிழமை எந்திரனுக்கான முன்பதிவு சிட்னியில் தொடங்கியது படத்துக்கான டிக்கெட்டை பதிவு செய்ய ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். கட்டுங்கடங்காமல் ரசிகர்கள் கூட்டம் வந்திருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த நிர்வாகம் திணறியது..

சில மணி நேரங்களிலேயே முதல் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இன்னும் சிலர் அடுத்த வாரத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டுச் சென்றனர்

இங்குள்ள ஹாலிவுட்  திரையரங்கு உரிமையாளர்களையே புருவத்தை உயர்த்தும் அளவிற்கு டிக்கட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதுவரை ஹாலிவுட்டில் வந்த திரைப்படங்களில் அவதாருக்கான கட்டணம் 20 வெள்ளிகளாகும் ( இந்திய பணத்திற்கு 875 ரூபாய்கள்) ஆனால் எந்திரனுக்கான டிக்கட்டின் பெறுமதி 30 வெள்ளிகள் ( இந்திய பணத்திற்கு 1500 ரூபாய்கள்) . இது ஆஸ்திரேலிய சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். ஆஸ்திரேலிய திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 30 வெள்ளிகளுக்கு திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது. இதை அங்குள்ள ஹாலிவுட் திரையரங்கு உரிமையாளர்களே உறுதிப்படுத்தினார்கள்.

இங்குள்ள மற்றைய நகரங்களிலும், கன்பெரா, அடிலைட், பெர்த், பிரிஸ்பேன், மெல்பேர்ன் ஆகிய நகரங்களிலும் முதற்கிழமைக்கான முன்பதிவுகள் 85 விழுக்காடு அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதே போல் மற்ற பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கான அநேகமான காட்சிக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

விநியோகத்தர் ஜெகா கருத்து தெரிவிக்கையில்,

ஆஸ்திரேலிய தமிழ் சினிமா  வர்த்தகமானது மிகவும் குறுகியது. மற்றைய ஐரோப்பா கனடா நாடுகளுடன் ஒப்பிடளவில் மிகவும் குறுகிய தமிழ் ஜனத்தொகை உடைய நாடு. அவ்வாறு ஒப்பிடுகையில் எந்திரனது முன்பதிவானது ஆஸ்திரேலிய தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இமாலய சாதனையாகும். இதுவரை திரையிடப்பட்ட திரைப்படங்களிலேயே சிவாஜியின் வசூலை எந்த ஒரு படமும் முறியடித்திருக்கவில்லை, ஆனால் எந்திரன் முன்பதிவே அந்த சாதனையை முறியடித்துள்ளது என்று கூறினார்

Advertisements

One comment on “ஆஸ்திரேலியாவில் எந்திரன் சாதனை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s