எந்திரன் சிறப்புக் காட்சி… குஷியில் சினிமா நட்சத்திரங்கள்


எந்திரன் சிறப்புக் காட்சி குஷியில் சினிமா நட்சத்திரங்கள்

ரசிகர்களை குதுகலப்படுத்திவரும் எந்திரன்… நடிகர், நடிகைகளுக்கு மட்டும் மனவருத்ததை ஏற்படுத்தியது. காரணம், எந்திரன் படத்திற்கு பிரிமியர் ஷோ கிடையாது என்று அறிவித்திருந்ததுதான்.

எந்த ஒரு படத்திற்கும், படம் வெளியாகும் முதல் நாளே திரைத்துறையிருக்காக பிரிமியர் ஷோ காண்பிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எந்திரனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், எந்திரன் படத்தின் 2 வாரத்துக்கான மொத்த டிக்கெட்டுக்களையும் ரசிகர்கள் வாங்கிவிட்டார்கள். இதனால், திரைத் துறையில் இருந்தும், எந்திரன் படத்தை முதல் நாளே பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் நடிகர் நடிகைகளுக்கு.

ஏதாவது ஒரு படமென்றால் ஆற அமர பொறுமையா பார்த்துக்கலாம். எந்திரனுக்கு அப்படி இருக்கமுடியுமா என்ன… வெளியாவதற்கு முதல் நாள்தான் பார்க்க முடியாது. வெளியாகும் முதல் நாளாவது பார்த்துவிட வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் எந்திரன் பட நிறுவனத்திடம் போன் மேல் போன் போட்டு நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அழைப்பு வந்ததெல்லாமே முன்னணி நடிகர் நடிகைகளிடமிருந்துதானாம். பிறகு என்ன செய்ய தட்டமுடியாமல் பிரிமியர் ஷோவிற்கு சம்மதித்துள்ளது சன்பிக்சர்.

எந்திரன் வெளியாகும் அக்டோபர் 1ந் தேதி இரவில் சத்தியம் திரையரங்கில் சினிமா நட்சத்திரங்களுக்காக தனி ஷோ காண்பிக்கப்படுகிறதாம். எப்படியும் எந்திரன் படம் பார்க்க ஒவ்வொரு நட்சத்திரங்களும் குடும்பம் குடும்பமாகத்தான் வருவார்கள் என்று

கணித்து சத்தியம் வளாகத்தில் இருக்கும் சில திரையரங்குகளையும் ஒதுக்கித்தர முடிவு செய்துள்ளது எந்திரன் தரப்பு. ஒருவழியா அடம்பிடிச்சு எந்திரன் பிரிமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்துவிட்ட பரவசத்தில் பரபரப்பாக உள்ளது சினிமா வட்டாரம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s