எந்திரன் – திரைவிமர்சனம்


எந்திரன் – திரைவிமர்சனம்

நீண்ண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்திருக்கும் படம் என்பதை விடவும் சங்கர் இயக்கம் என்பதை விடவும் இந்தியாவின் ஏன் ஆசியாவிலே அதிக பொருட்செலவில் எடுத்த திரைப்படம் என்பதை விடவும் . . கலாநிதி மாறனின் முதல் தயாரிப்பு என்பதிலே அதிக விளம்பரம் கையாளப்படுகிறது. அப்படி அதிக பில்டப் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எப்படி இருக்கும் ஒரு முன் திரைவிமர்சனம்.

கதை இதுதான் என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்படித்தான் இருக்க முடியும் . . இந்திய விஞ்ஞானியான ரஜினி தன் கடின உழைப்பால் 10 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதிய வடிவ எந்திரனை உருவாக்குகிறார். இவனுக்கு மனிதர்களை போன்ற உணர்வுகளை படைக்கும் அவர் ஏறக்குறைய ஒரு மனிதனையே உருவாக்குகிறார் ஆனால் இவன் கூடுதல் சக்தி உடையவனாக இருக்கிறான். பன்முக சக்தி கொண்ட அவனை நல்லவிதமாக பயன்படுத்தி அழகு பார்க்கிறார் ரஜினி.

இந்த சமயத்தில் ரஜினியின் காதலியாக வரும் ஐஸ் ரஜினி மேல் கோபம் கொள்ள (காரணம்: ரஜினி லேபிலே இருப்பதாக இருக்கலாம்) ரோபோ அதாவது சிட்டி இருவரையும் சேர்த்து வைக்கிறான். இந்த சமயத்தில் ஏதோ ஒரு வினாடியில் சிட்டிக்கும் ஐஸ் மீது ஆசைவர அது ரஜினிக்கும் ஐஸுக்கும் தெரிய வர ரஜினி சிட்டி மீது கோபம் கொள்கிறார். அவனுக்குள்ள உயிரான ஆபரேட்டிங் சிஸ்டத்தை துண்டிக்கிறார். இதை கண்ட ஐஸ் மீண்டும் ரஜினி மீது கோபம் கொள்ள ரஜினி ஐஸை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

இந்த இடைவெளியை பயன்படுத்தி வில்லன் சிட்டிக்கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்கிறார். (ஏற்கனவே சிட்டியை பயன்படுத்துவதற்காக ரஜினியிடம் கேட்ட வில்லன் இப்போ அதை தன் உபயோகத்திற்காக அதாவது தீய செயல்களுக்காக பயன்படுத்த நினைக்கிறார்) சிட்டியும் தன் புதிய எஜமானனான வில்லனின் சொல்படி சில தீய காரியங்களை செய்கிறான். இதை உணர்ந்த ரஜினியும் ஐஸும் தங்கள் கோபங்களை மறந்து சிட்டியை சந்திக்கிறார்கள். சிட்டிக்கு அவனுடைய தீய செயல்களை உணர்த்த பாடுபடுகிறார்கள். சிட்டிக்கோ தன் நிலையை சரியாக விவரிக்க முடியாத நிலை. வில்லனோ ரஜினியையும் அவரது ஆராய்சி கூடத்தையும் அழிக்க நிற்கிறார். அப்படியே தொடர இறுதியில் சிட்டி வில்லன் ஆட்களையும் அவனது தீய செயல்களுக்கான லேபையும் அழித்து தானும் அழிகிறான், அழியும் முன்பு 100 மனிதர்களின் மூளையால் உருவாக்கப்பட்ட தனக்கு ரஜினிக்கு எதிர்காலத்தில் வரும் ஆபத்தை உணர முடிந்தது என்பதையும் அதை மாற்றவே தானும் வில்லனோடு நட்பு பாராட்டி அவனோடு இணைந்து அவனையும் அழித்ததையும் தன்னையும் அழித்ததையும் உணர்த்தி அழிகிறான் எந்திரன். இந்த தியாக முடிவோடு படம் முடிவடைகிறது.

சங்கரின் வழக்கமான ப்ளாஸ்பேக் இதில் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் ப்ளாஸ்பேக்குக்கு பதிலாக எதிர்கால நிகழ்வாக ஒன்றை வைத்திருக்கிறார். அதுதான் ரஜினியின் மரணம் எப்படி நடக்கும் என்பதை காட்டி அதை தடுக்கவே சிட்டி அழிவாதாக காட்டும் காட்சி மிக பிரமிப்பாக இருக்கும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறேன் என்று அதிகம் ஆக்காமல் தொழில்நுட்பத்தை தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

ஐஸ் சில சமயங்களில் கிழவியாகவும் பல சமயங்களில் அழகாகவும் தெரிகிறார். சமயத்தில் ரஜினியை விட வயதாக தெரிவதுதான் ஹைலைட்.

ரஜினி அழகாக இருக்கிறார். விஞ்ஞானியாக வரும் ரஜினி அழகு என்றால் சிட்டியாக வரும் ரஜினி அதிரடி. என கலக்குகிறார். ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்தே வைக்கிறார்.

சங்கரிடம் இருந்து எதிர்பார்த்த அனைத்து விசயங்களும் படத்தில் அங்காங்கே தூவி இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிகப்பழைய விசயமாக மாறிப்போன ரோபோக்கதையை இந்த காலகட்டத்திற்கேற்ப மாற்றி இயக்கிய துணிச்சல் பாரட்டுக்குறியது.

ரத்னவேலு காமிரா சும்மா அதிருது. அதுபோல சண்டைக்காட்சிகள் புதிய பரிணாமத்தை காட்டி இருக்கிறது வெல்டன் பீட்டர். நடனத்தில் வல்லவரான ஐஸ் கலக்கி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் நடனமே ஸ்டைல் அதிலும் சிட்டியின் நடனம் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது.

பாடல்களில் ஹிட் அடித்த ரஹ்மான் பிண்ணனியில் கலக்கி இருக்கிறார். புதிய அனுபவத்தை உணர வைக்கிறார்.

மொத்தத்தில் எந்திரன் எந்திரத்தனமானவன் இல்லை. இவன் பேரைச்சொனால் கடலும் கை தட்டும் என்பது முற்றிலும் உண்மை.

எந்திரன் நிச்சயமாக மந்திரன் தான்

வசூல் எப்படியும் 1000 கோடியை தொடும் . . .

Advertisements

4 comments on “எந்திரன் – திரைவிமர்சனம்

  1. தமிழ் சினிமாவின் திருப்பு முனையாக இது இருக்கும் என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்…

  2. //அப்படி அதிக பில்டப் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எப்படி இருக்கும் ஒரு முன் திரைவிமர்சனம்.

    சரிதான்… உங்க ரஜினி பாசத்துக்கு அளவே இல்லையா…

    • என்ன அப்படி சொல்லிட்டீங்க குந்தவை . . சூப்பர் ஸ்டார்னா சும்மாவா . .அதுசரி எங்க கொஞ்ச நாளா வரத்தே இல்லாம இருந்தது . .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s