எந்திரன் என்ன ஆவான்?


எந்திரன் என்ன ஆவான்?

பல ஆயிரக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் ஏற்றியிருக்கும் எந்திரன் இன்னும் சில தினங்களில் தியேட்டர்களில் வந்து உங்களை மகிழ்விக்க போகிறான்.

3000 திரையரங்குகளில் வெளியீடு, இந்திய அவதார், இந்திய சினிமா வரலாற்றின் புதிய சரித்திரம், 1600 கோடி வரை வசூல் கிடைக்கலாம் என்று ஏகத்தும் பயங்கர பில்டப்கள்.

உண்மைதானா இவை எல்லாம் இல்லை இந்த பில்டப்களில் நான்கில் ஒரு பங்காவது சாத்தியமா என்பதைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

வழக்கமாக பார்க்கும் சினிமாவாக மட்டும் இது இருக்காது என்பது உறுதி இருந்தாலும் சினிமாவின் கதைப்போக்கு கதாபாத்திரங்கள் என்று பல காரணங்களை வைத்து பார்க்கும்போது ஏமாற்றுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.

சினிமாத்தொழிலுக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கி தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதை வைத்துத்தான் இந்த பதிவே.

முதலில் வெளியிடப்படும் தேதி. இறுதியாக 1988 செப்டம்பர் மாதம் வெளியிட்ட தர்மத்தின் தலைவன் படத்திற்கு பிறகு செப்டம்பர் மாதம் வெளிவரும் ரஜினி படம் இது. கிட்டதட்ட 45 படங்களுக்கு பிறகு வெளியாகும் செப்டம்பர் மாத திரைப்படம்.

ரஜினியின் சூப்பர் ஹிட்களில் ஒன்றான 16 வயதினிலே வெளியாகியது செப்டம்பர் மாதத்தில்தான். சூப்பர் ஸ்டாரின் 100 வது படமான திரு ராகவேந்திரா வெளியானது செப்டம்பரில்தான். எனவே ரஜினியின் வாழ்க்கையின் சிலபல முக்கிய முடிவுகள் நடந்தது இந்த சில படங்களின் வெளியீட்டுக்கு பிறகுதான். எனவே செப்டம்பர் லக்கிதான்.

ரஜினிக்கு சரித்திர வெற்றியை பெற்றுத்தந்த சந்திரமுகியும் படையப்பாவும் வெளியாகியது ஏப்ரல் மாதத்தில் எனவே அப்படி பார்க்கும் போது செப்டம்பரை விட ஏப்ரல்தான் சிறந்தது. எனவே வெற்றி விகிதம் சற்று குறைகிறது.

பாபாவின் நெருக்கடிக்கு பிறகு மூன்றாண்டு இடைவெளியில் வந்த சந்திரமுகி சரித்திரம் படைத்தது. அதேபோல் குசேலனின் நெருக்கடிக்கு பின்னர் அதே இடைவெளியில் வரும் எந்திரன் சரித்திரம் படைக்க வாய்ப்புள்ளது.

அடுத்து நாயகி. . சில பெயர் பொருத்தங்கள் ரஜினிக்கு மிக நன்றாக பலம் தரும் உதாரனத்திற்கு சவுந்தர்யா, ஸ்ரேயா இதே வரிசையில் ஐஸ்வர்யா, இருந்தாலும் இதுவரை ஐஸ்வர்யா நடித்த தமிழ்படம் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இல்லை. ஆயினும் எஜமான் சினிமாவில் நடிக்கும் வரை ஐஸ்வர்யா (லக்ஷ்மி மகள்) சொல்லிக்கொள்ளும் வெற்றி பெறவில்லை. ஆயினும் எஜமான் நல்ல வெற்றிப்படமானது. எனவே எந்திரனிலும் இந்த மாற்றம் வரும்.

பொதுவாக இரண்டாவதாக அமையும் அதே கூட்டணி முதல் பட வெற்றியை தக்க வைப்பதில்லை என்பது சினிமாவின் இலக்கணம். உதாரணம் கில்லி, சரோஜா, கோவா, வில்லு,  அதே சமயத்தில் வீராவை இயக்கிய சுரேஷ் கிருஷனா வை வைத்து ரஜினி நடித்த பாட்ஷா சூப்பர் ஹிட் என்றாலும் பாபாவின் கதை எல்லாரும் அறிந்ததே. முத்துவிற்கு பிறகு படையப்பா சூப்பர் ஹிட் எனவே சிவாஜிக்கு பிறகு எந்திரன் என்ன ஆவானோ?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி எந்த சினிமாவும் மோசமாகவில்லை அதே சமயம் பாபாவிற்கு ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார்.

பாரதிராஜா மகன் நடித்த எந்த படம் நல்லா ஓடவில்லை எந்திரனிலும் அந்த தரித்திரம் இருக்கு ஆனாலும் விஜயகுமார் மகள்கள் நடித்த எந்த படமும் உருப்படவில்லை இருந்தாலும் அதில் ஒருமகள் நடித்த படையப்பா சூப்பர் ஹிட். அதுமாதிரி இதுவும் அமையும்.

இறுதியாக கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்த அனேக படங்கள் சூப்பர் ஹிட் அதன்படி பார்த்தால் வெற்றிவாய்ப்பு அதிகம். .

என்ன செய்ய எந்திரன் பீவர் பிடித்து இப்படி ஒரு மொக்கை பதிவையும் பதிச்சாச்சி இன்னும் படம் ரீலீஸ் இல்லை.  எப்படா ரீலீஸ் பண்ணுவீங்க . . .

Advertisements

One comment on “எந்திரன் என்ன ஆவான்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s