பஹ்ரைனில் அன்னையின் பெருவிழா


அரேபிய மண்ணில் 68 ஆண்டுகளுக்கு முன்பாக பஹ்ரைன் நாட்டிலே திருநிலைப்படுத்தப்பட்ட ஆலயம்தான் திருஇருதய ஆலயம். இது பஹ்ரைன் நாட்டின் நடுப்பகுதியாகிய மனாமாவில் அமைந்துள்ளது. இங்கு 1983 நவம்பர் மாதம் வரை ஆங்கிலத்திலே ஜெபவழிபாடுகளும் திருப்பலியும் நடைபெற்று வந்தது. திரு. தாமஸ் அவர்களின் முயற்சியால் தமிழ் ஆராதனை ஜெபக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக நவம்பர் 25ம் தேதி துவங்கப்பட்டது. அதன் பின் 1990ம் ஆண்டு முதன் முதலாக தந்தை கிளாரன்ஸ் அவர்கள் உதவி பங்குத்தந்தையாக வந்த பின் மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமைகளில் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அப்போது புனித அந்தோனியாரையே பாதுகாவலராக ஏற்று வழிபட்டார்கள்.

இதுவே நாளைடைவில் மாதத்தின் முதல் செவ்வாய்கிழமைக்கு மாற, 1993ம் ஆண்டு தந்தை கிளாரன்ஸ் நாட்டுக்கு திரும்பி விட அதன்பின் 1998ல் தந்தை மத்தியாஸ் உதவி பங்கு தந்தையாக வந்தபின்பு (இவர் மலையாளி) தமிழை மலையாளத்தில் எழுதி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். இவர்தான் பஹ்ரைன் நாடு முழுவதும் சிதறிகிடந்த தமிழர்களை ஒன்று திரட்டி அன்னை வேளாங்கன்னி மாதாவை பாதுகாவலியாக மாற்றி தமிழ் சபை வளர வித்திட்டவர்.

இப்படியாக வளர்ந்த நமது பஹ்ரைன் வாழ் தமிழ் கத்தோலிக்க இறைமக்கள் நேற்று அன்னைக்கு 12வது ஆண்டு பெருவிழாவை சிறப்பாக துவங்கி இருக்கிறோம்.

This slideshow requires JavaScript.

நேற்று மாலை 6.30 மணிக்கு துவங்கிய ஜெபமாலையும் அதன்பின் தந்தை அவர்களால் கொடியேற்றப்பட்டு அதை தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பங்குத்தந்தை லூர்து சேவியர் அவர்கள் இந்த 10 தினங்களும் சிறப்பான ஒரு மறையுரையாற்ற இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். வரும் 10 தினங்களும் ஆடம்பர திருப்பலியும் நடைபெறும்.

அனைவரும் அன்னையின் புகழ் பாடுவோம். அன்னை நம்மை காத்தருள்வாள்.

Advertisements

4 comments on “பஹ்ரைனில் அன்னையின் பெருவிழா

  1. Pingback: பஹ்ரைனில் அன்னையின் பெருவிழா « கூட்டப்புளி

  2. Pingback: பஹ்ரைனில் அன்னையின் பெருவிழா « கிங்ஸ்லின்

  3. கண்டிப்பாக திருவிழா தேவையா அதனால் யாருடைய நாமம் மகிமைப்படும் விளக்கி தாருங்கள் நண்பா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s