நன்றிகள் ஆயிரம்


மற்றவர்களுக்கு இது சாதரணமான விசயமாக இருக்கலாம் ஆனால் எனக்கு மிகப்பெரிய விசயம்தான்.

தனக்கு விருப்பமில்லாதவர்களை பற்றி வசைபாடி அதுக்கென்று ஒரு கூட்டம் கூட்டி “பார்வையாளர்களை” அதிகமாக பெற்றவர்கள் உண்டு. சும்மாவே ஏதாவது தினமும் எழுதி கவர்ந்தவர்கள் உண்டு ஆனால் ஆடிக்கொன்றும் அம்மாவாசைக்கொன்றுமாக எழுதி 10000 முறை எனது பதிவலைக்குள் பார்வையாளர்களை வரவைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

அந்த மகிழ்ச்சியை தந்த உங்கள் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதுவரைக்கும் எனது மொத்த பதிவுகள் 101, ஒரு பதிவுக்கு 100 பேர் வீதம் பார்த்தால் 10000 பேர் பார்த்தவர்களாவர். எனக்கு சந்தோசம்தான்.

வருத்தம் என்ன வென்றால் பார்வையாளர்களாக வந்த 10000 பேரில் பதிலோ அல்லது கருத்தோ பதிவாகி உள்ளது வெறும் 106 மட்டுமே.

பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் 10000 ஐ தொட்டது மகிழ்ச்சியை தருகிறது.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

இலங்கை மும்முனை போட்டியில் சேவாக் அடித்த சதமை சதி மூலம் இல்லாமல் செய்த ரந்தீரை ஒரு போட்டியிலிருந்து விலக்கும் தில்சனுக்கு அரை சம்பள பிடித்தம் என்று சப்பை கட்டு கட்டி முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்கள். அதே சமயத்தில் இதை எல்லாவற்றையும் விட சேவாக்கிற்கு அந்த 100 ரன்களை தந்து இருந்தால் அதுதான் இலங்கைக்கு நல்ல தண்டனையாக இருந்திருக்க முடியும்.

நல்ல ஒரு படத்தில் நடித்து அறிமுக மான கார்த்தி இப்போ தொடர்ந்து இரண்டு படங்களில் ரசிகர்களை சோதிக்க மட்டுமல்லாமல் கொடுமை படுத்துகிறார். இதை அவர் நிறுத்தவேண்டும். சூர்யாவாவது சொல்லித்திருத்த வேண்டும்.

இதுவரை பிற மொழிகளில் நடிக்காத சத்யராஜ் , பிற மொழியில் நடித்த முதல் படம் என்ற இடத்தை பெற்ற மலையாளபடத்தில் மிக மட்டமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அப்படத்தை பார்த்த பின் வந்த கோபம் இருக்கிறதே. அந்த வேடத்திற்கு மலையாளத்தில் ஆள் இல்லாமல் இல்லை ஆனால் தேசம் சம்பந்தபட்ட வேடம் அதிலும் ஒரு உயர் இராணுவ அதிகாரி வேடம் சத்யராஜூக்கு, ஒரு தீவிரவாத தாக்குதலின் போது அவர்களிடம் சிக்கி கொண்ட ஒரு குடும்பத்தை காப்பாற்ற வருகிறார் நமது அதிகாரியாகி சத்யராஜ். அப்போது பெற்றோர்களை இழந்து விட்ட ஒரு அக்காவும் தம்பியையும் காப்பாற்றுகிறார், அந்த அக்காவுக்கு 14-15 வயது, அவரை அணைத்து காப்பாற்றி வரும் போது ஏற்படும் வெறி அந்த பெண்ணை சூரையாட வைக்கிறது. அதற்கு பின் அந்த தம்பி வளர்ந்து அதிகாரியை பழிவாங்குவதாக கதை.

உயர்ந்த அதிகாரியாக நாட்டுக்கு நல்லது செய்யும் அதிகாரியாக நடித்து பெயர் பெற விரும்பும் மலையாளிகள் ஒரு மோசமான அதிகாரியாக நடிக்க வேண்டும் என்றால் சத்யராஜை தேர்தெடுத்தது அதை காட்டிலும் மோசம் என்றால், அந்த கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜை என்ன சொல்வது. இதுநாள் வரை பிறமொழிகளில் நடிக்க விரும்பாத தமிழன் முதன் முதலில் தேர்வு செய்த வேடத்தை கண்ட எனக்கு தமிழனாக புல்லரித்தது.

உங்க கேரக்டரையே புரிய முடியலயே

Advertisements

One comment on “நன்றிகள் ஆயிரம்

  1. நல்ல பதிவொன்று நம்ம சத்தியராசுவுக்கு ஏன் தேவையில்ல வேலை…. வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s