இந்தியா விழுமா விழ வைக்குமா?


இந்தியா விழுமா விழ வைக்குமா?

முதல் டெஸ்டில் மோசமான ஒரு தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்டை துவங்கும் முன் நல்ல தெம்பாகவே இருந்தது இந்திய அணி, காரணம் முதல் போட்டியில் இந்திய வீரர்களை துவைத்து எடுத்த மலிங்காவும் முரளியும் இல்லாததே.

ஆயினும் போட்டி துவங்கிய போதே டாஸை இழந்தது இடியாக இருந்தது. காரணம் இதுவரை கடந்த பத்து வருடங்களாக இலங்கை அணி இலங்கையில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் டாஸ் ஜெயித்த எந்த போட்டியையும் தோற்கவில்லை. இதுவும் அப்படி ஆகிவிடும் என்ற கணிப்பு அப்போதே துவங்கி விட்டது.

அதன்பின் பேட் செய்ய துவங்கிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சாளர்களை துவைக்க துவங்க அது இன்னும் உறுதியாகிய அதே வேளையில் படுமோசமான ஆடுகளத்தில் எப்படித்தான் பந்து வீசினாலும் பலன் பவுண்ட்ரிதான் என்பது பிறகுதான் புரிந்தது. எப்படியோ முதல் ஆட்டக்காரர் 50 ரன்னில் அவுட் அடுத்து 100ல் அவுட் அடுத்து 200ல் அவுட் என வயிற்றில் புளியை கரைக்க ஒருவழியாக சங்கா தயவில் ரன் குவிப்புக்கு தடை போடப்பட்டது.

அடுத்து முதல் இன்னிங்ஸ்ஸை துவங்கிய இந்திய வீரர்களும் இந்த மோசமான ஆடுகளத்தை சாதகமாக பயன்படுத்த ரன்கள் சேரத்துங்கின. சேவாக் சூப்பராக விளையாடத்துவங்க இன்னும் ஒரு முச்சதம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்துதான்) ஏமாற்றமாக அமைந்தது அந்த அவுட். தேவையில்லாமல் இறங்கி அடித்தார் என ஒரு விமர்சனம் இருந்தாலும் அது தானே சேவாக் ஸ்டைல் . அவரது ஆட்டத்தில் இது வரை குறை காணவில்லை நான். அன்றும் அப்படித்தான் ஏதோ அதிர்ஷ்டம் இல்லாததுதான் காரணம்.

எனினும் அடுத்து வந்த டிராவிட் மீது இருந்த நம்பிக்கை தோல்வியை தவிர்க்க வைக்கும் என நினைத்திருக்க டிராவிட் ஏமாற்றம் தந்தார். ஆயினும் சச்சின் தனது ஆட்டத்தை தனக்கே உரிய ஸ்டைலில் தந்து இப்போது 150 ஐ கடந்து விளையாடி வருகிறார். அதே சமயத்தில் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் சுரேஷ் ரைய்னா தனது கன்னி டெஸ்டில் கன்னி சதத்தை நிறைவு செய்த விதம் மிக அழகு. கை குலுக்க ஆசையாக உள்ளது. வாழ்த்துக்கள் ரைய்னா.

இந்த இருவரும் இன்று முழுவதும் தொடர்ந்து ஆடி ஸ்கோரை ஏற்றும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா எனக்கேட்டால் சிரிப்புதானே வரும் . ஆனாலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் இல்லை.

நேற்று வரை பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த ஆடுகளம் இன்று கொஞ்சம் மாற்றம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இது நாளை இன்னும் மாற்றம் பெற்று பந்து வீச சாதகமாக அமைந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதற்கு தேவை இன்றை ஆட்ட முடிவில் நிச்சயமாக இந்தியா லீட் செய்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் 100 ரன்களாவது லீட் கொண்டு வர வேண்டும்.

அதே சமயத்தில் முதல் இன்னிங்ஸில் பரிதாபமாக பந்து வீசிய ஓஜாவும் பஜ்ஜியும் பந்தை சுழற்றும் வேகத்தில் இலங்கையின் விக்கெட்கள் சரிய வேண்டும் . . .

இது அனைத்தும் நடந்தாலே இந்தியா வீழ்த்தும் , இல்லை எனில் . . . நிச்சயமாக தர வரிசையில் வீழாது . . .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s