கலக்கிய ஆந்திரா


ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம்ம ஆளுகளுக்கு சன் தொலைக்காட்சியில் வெளியிடப்படும் இந்திய தொலைக்காட்சிகளிலே முதல் முறையாகவும் இல்லையென்றால் கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாடவின் நமீதாவையும் பார்க்க கூடி விடுவார்கள். இப்படி திரைஉலகத்தையும் தமிழனையும் பிரிக்க முடியாத நிலையில் திரை உலகத்தால் தமிழன் எப்படி பிரிந்து இருக்கிறான் என்பதை நினைக்க கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்தனர் தெலுங்கு திரைஉலகினர்.

திரைஉலகினரின் கிரிக்கெட் ஆட்டம் என்பது எம்ஜிஆர் சிவாஜி காலத்திலே இருந்தது என்பதை கேள்வியில் தெரிந்திருக்கிறேன். ஆனால் எப்போதாவது நடக்கும் நமது நடிகர் நடிகைகளின் கிரிக்கெட் ஆட்டத்தையும் செய்தி வாயிலாக அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் முழுவதையும் கிரிக்கெட்டுக்காக செலவு செய்து அதை நேரலையாக ஒளிபரப்பிய ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க கிடைத்தது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் சிறப்பான நேரலை. (சன் குழுமத்திற்கு நன்றி).

நம்மால் முடியுமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது காரணம் நமது நடிகர்கள் அல்ல ரசிகர்கள் என்பதை இங்கு நாம் உணரத்தான் வேண்டும். (அங்கேயும் லத்தி சார்ஜ் நடைபெற்றது) நான்கு அணிகளாக பிரிக்கப்பட்ட நடிகர்கள் விளையாட, நடிகைகள் அவர்களின் அணிக்கு உறுதியாக நின்று ஆதரவு தந்ததும் சந்தோசத்தை தந்தது. அவர்களின் ஒற்றுமை மலைப்பாக இருந்தது அவர்களுக்குள்ளும் பிரட்சனை இருக்கலாம் ஆனாலும் அதை எல்லாவற்றையும் மறந்து கிடைத்த ஒரு நல்ல நாளை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடியது மொத்த ஆந்திராவையுமே சந்தோசப்படுத்தி இருக்கும்.

நான்கு அணிகள் நான்கு தலைவர்கள், பாலகிருஷனா ஆஸ்திரேலியா உடையில் தன் அணியை வழிநடத்தினார் சீரஞ்சீவி பாகிஸ்தான் உடையிலும் வெங்கடேஷ் சிகப்பு உடையிலும் நாகர்ஜூனா நீலக்கலர் ஏறக்குறைய நமது டெல்லி அணியை நினைவு படுத்தியது.

முதல் ஆட்டத்தில் பாலகிருஷனா அணி வெங்கடேஷ் அணியிடம் தோல்வியை தழுவ. இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நாகர்ஜூனா அணி 159 ரன்களை பெற்றது ஆச்சர்யம் அதிலும் நாகர்ஜூனாவின் மகன் அகில் ஆடிய விதம் ரசிக்க வைத்தது. ஒரு சந்தர்பத்தில் அப்பாவும் மகனும் பேட் செய்த விதம் சூப்பர். அடுத்த ஆட வந்த சீரஞ்சீவி அணியினர் துவக்கத்தில் தள்ளாடினாலும் அஜயின் சிறப்பான பேட்டிங்கால் 139/9 என்ற நிலையில் இருந்தபோது மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் நாகர்ஜூனா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நாகர்ஜூனா அணியும் வெங்கடேஷ் அணியும் களமிறங்கினர். முதலில் பேட் செய்த வெங்கடேஷ் அணி 88 ரன்களுக்கு சுருண்டது . அகில் சிறப்பாகவும் பந்து வீசினார். அதை தொடர்ந்து 88 ரன்களை நோக்கி பயணம் செய்த நாகர்ஜூனா அணி முதலிலே அசத்தலாக ஆடிய அகில் சிறப்பான ஆட்டத்தை தந்து 50 ரன்களையும் பூர்த்தி செய்தார். 10 ஒவரிலே வெற்றியை பறித்தனர் நாகர்ஜூனா அணியினர்.

சிறப்பான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை போலீசார் கவனித்து கொண்டார்கள், முதலமைச்சர் தலைமை தாங்கினார். திரைஉலகை சார்ந்த அனைத்து நடிகை நடிகர்களும் கலந்து கொண்ட அந்த விழா ஒரு திருவிழாவாக முடிந்தது. தங்கள் கருத்துக்களை மறந்து ஒரு குடும்பமாக அனைவரும் கூடி மகிழ்ந்த ஒரு நிகழ்சியாக திருப்தியாக நிறைவு பெற்றது டோலிவுட் டிராபி.

நிகழ்சியின் உச்சமாக இறுதி போட்டியில் தனது அணிக்கு எதிராக அகில் அடிக்கும் சிக்ஸ்ர்களுக்கும் பவுண்டிரிகளுக்கும் கை தட்டி மகிழ்ந்த வெங்கடேஷ் இறுதியில் அகிலை கட்டியணைத்து வாழ்த்து சொன்னது நெகிழச்செய்வதாக இருந்தது.

இப்படி அந்த கிரிக்கெட் ஆட்டத்தை முழுவதும் பார்த்த எனக்கு என் மனதில் தோன்றியது இதுதான் ஏன் நம்ம நடிகர்கள் இப்படி இல்லை என்பதுதான். இவர்களை இப்படி ஒன்று சேர்த்து விளையாட வைக்க முடியாதா?

இல்லை என்றால் அதற்கு காரணம் யார் . . வேறு யாருமில்லை நாம்தான் காரணம், ரசிகர்கள் என்ற போர்வையில் நடிகர்களை பிரித்து இல்லை என்றால் அவர்களை பெரிய ஆளுகளாக வளர்த்து விட்டதும்தான் தவறு.

அவர்களுக்காக என்று ரசிகர்கள் சண்டை போடுவதுதான் அவர்களின் தலைக்கனத்தை கூட்டுகிறது. ரசிப்பவன் தான் தலைவன் அவனுக்காகத்தான் கூத்தாடிகள் என்பதை மறந்தவந்தான் இந்த ரசிகன் அதனால் தான் இன்று கூத்தாடிகள் பெரிய ஆட்களாக நடிக்கிறார்கள்.

தெலுங்கு தேசத்தில் நடத்தி காட்டிய இந்த போட்டியை நமது நடிகர்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள், இவர்களால் நடத்த முடியுமா என்று கேட்டால் அடுத்த கணமே ஈகோ என்ற இல்லாத ஒன்று வந்துவிடும். பின் எப்படி சமாதானம் ஒருங்கிணைப்பு என்ற வார்த்தைகள் சினிமாவுக்குள் வரும். ஒருங்கிணைப்பு இல்லை என்றால் சினிமா இன்னும் இன்னும் கெடும் கெடுப்பவர்களும் வந்து கொண்டே இருப்பார்கள்.

தமிழகத்திலும் இது போல் இல்லைஇல்லை இதைவிட சிறப்பான ஒரு போட்டியை நடத்திகாட்ட திறமையான ஆட்கள் உண்டு, அங்கே சிறப்பாக நேரலை செய்த சன் குழுமம் நமக்காக செய்யாதா? மேலும் பிரட்சனைகளுக்காக மட்டுமே கூடும் நம் நடிகை நடிகர்கள் மனதில் சில பாதுகாப்பில்லாத தன்மையை உனர்வார்கள் ஆனால் இதுபோல் அவர்களை சந்தோசப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து ஒரு ஒற்றுமையை உணர்த்த வேண்டியது சினிமா உலகின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் கடமை. அதை விடுத்து பொதுக்கூட்டங்களுக்கு வராத நடிகர்கள் மேல் நடிகை மேல் நடவடிக்கை என்பதால் ஒற்றுமை வந்து விடாது என்பதை உணரவேண்டும்.

இறுதியாக கூத்தாடி இரண்டு பட்டால் ஊர்க்காரனுக்கு கொண்டாட்டம் என்பதை உண்மையாக்கி இல்லாத மாயையுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி சீரழிந்து போகாமல் இருக்க மூத்த நடிகர்கள் சிலர் இதற்கென மெனக்கெட வேண்டும். எந்த ஒரு செயலுக்கும் ஒரு துவக்கம் தேவை, துவக்கம் என்னும் போதே தடங்கல் உண்டாகும் அதை கடந்து சாதிப்பவன் நிச்சயம் ஜெயிப்பான்

ஜெயிப்பார்களா நம் நடிகர்கள்???

இதை எழுதும்போது நண்பன் ஒருவனின் கருத்து: “நம்ம நடிகர்களில் யாருக்கு ஆரோக்கியமான கிரிக்கெட் விளையாட தகுதியான உடம்பு இருக்கு, இல்லை விளையாடவும் தெரியும்” என்று கிண்டலடிக்கிறான். இந்த கருத்தையும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s