கோடையில் காத்துக்கொள்ள . . .


கோடையில் காத்துக்கொள்ள . . .

சூ என்ன சூடு என்ற படியே வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் எல்லாரும் சொல்லத்துவங்கி இருக்கும் நேரம் இது. ஆம் கோடையில் வெப்பம் அதிகளவில் நம்மை தாக்கும் நேரம் இது. அந்த வெப்பத்தில் இருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்வது என அவரவர் தண்ணீரிலும் பழச்சாறுகளிலும் அலைவது நமக்கு தெரிகிறது.

இதோ இந்த சூட்டை எதிர்கொள்ள சில ஐடியாக்கள்

கோடை‌யி‌ல் உடலை பாதுகா‌க்க எ‌ல்லோரு‌ம் ‌பி‌ன்ப‌‌ற்ற‌க் கூடியது‌ம், எ‌ளிதானது‌மான முறை பழ‌ங்க‌ளு‌ம், பழ‌ச்சாறு‌ம்தா‌ன். அதாவது பழ‌ங்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ‌நீ‌ர்‌த்த‌ன்மையு‌ம், சுவையு‌ம் கோடை‌க்கு ந‌ல்ல வர‌ப்‌பிரசாதமாக அமையு‌ம்.

திராட்சை பழ‌‌ச்சாறு கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அதிகரிக்கு‌ம். கோடை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் உடற்சூடு, நீர்க் கடுப்பு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை பழ‌ச்சாறு மரு‌ந்தாகவு‌ம் அமையு‌ம்.

வெ‌யிலை த‌ணி‌த்து‌க் கொ‌ள்ள கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை‌க் குடி‌ப்பது‌ம், கு‌ளி‌ர்பான‌ங்களை அரு‌ந்துவதும் தவறாகும் இதனை‌த் த‌வி‌ர்‌த்து, அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் (குளிர்ந்த நீரல்ல) குடி‌ப்பது‌ம், பழ‌ச்சாறுகளை‌க் குடி‌ப்பது‌ம் ந‌ல்லது.

பழச்சாறுகள் என்று சொல்லும் போது பா‌ட்டி‌ல்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு கு‌ளிரூ‌ட்ட‌ப்ப‌ட்ட கு‌ளி‌ர்பான‌ங்க‌ள் அல்ல வீட்டிலே தயார்க்கப்படும் பழச்சாறுகளே நல்லது எனெனில் குளிர்பானங்களால் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்து‌ம் த‌ப்‌பி‌க்கலா‌ம்.

த‌ற்போது மா‌ம்பழ‌ ‌சீசனாக இரு‌ந்தாலு‌ம் ம‌ற்ற வகை‌ப் பழ‌ங்களு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன. மாதுள‌ம் போ‌ன்ற ஒரு ‌சில பழ‌ங்க‌ள்தா‌ன் ‌வி‌ற்பனை‌க்கு குறைவாக வரு‌கி‌ன்றன. த‌விர, ‌திரா‌ட்சை, முலா‌ம் பழ‌ம், ஆ‌ப்‌பி‌ள் போ‌ன்றவை அ‌திகமாக ‌வி‌ற்பனை‌க்கு வரு‌கி‌ன்றன. மு‌க்‌கியமாக ஆர‌ஞ்சு பழ‌ம் த‌ற்போது ‌சீச‌ன்தா‌ன். எனவே ஆர‌ஞ்சு பழ‌த்தை வா‌ங்‌கி வ‌ந்து சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌க்கலா‌ம்.

மாம்பழச்சாறு உடலு‌க்கு சூ‌ட்டை உ‌ண்டா‌‌க்கு‌ம் எ‌ன்றாலு‌ம், அதனை ப‌க்குவமாக சாறெடு‌த்து குடி‌ப்பது ந‌ல்லதுதா‌ன். கோடை மயக்கத்தை நீக்கும் ஆ‌ற்ற‌ல் மா‌ம்பழ‌ச் சாறு‌க்கு உ‌ண்டு

இரண்டு முன்று பழச்சாறுகள் கலந்து பழ‌ச்சாறு செய்யும்போது, இரண்டு தே‌க்கர‌ண்டி இஞ்சிசாறு விட்டுப் பருகுங்கள். சுவை ந‌ன்றாக இரு‌க்கு‌ம்

பழ‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல் இள‌நீ‌ர், த‌யி‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் கோடை‌யி‌ல் தாராளமாக நா‌ம் உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்

வெறு‌ம் மோரை‌ச் செ‌ய்து குடி‌க்காம‌ல், மோ‌ரி‌ல் ‌சி‌றிது க‌றிவே‌ப்‌பிலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி ஆ‌கியவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி‌ச் சே‌ர்‌த்து குடி‌ப்பது ந‌ல்லது

வெ‌ள்ள‌ரி‌க்கா‌யி‌ல் பெ‌ரிதாக எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ந்தாலு‌ம், அ‌திலு‌ள்ள ‌நீ‌ர்‌த் த‌ன்மை ‌ஜீரண‌ ச‌க்‌தியை ‌சீரா‌க்க உதவு‌கிறது. மேலு‌ம், வெ‌ள்ள‌ரி‌க்கா‌யி‌ல் உ‌ள்ள பொ‌ட்டா‌சிய உ‌ப்பு ‌‌சிறு‌நீரக‌ங்களை‌ப் பாதுகா‌க்க உதவு‌கிறது

காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் வெ‌ள்ள‌ரி‌க்கா‌ய்‌த் து‌ண்டுகளை மோ‌ரி‌ல் போ‌ட்டு அதனுட‌ன் ‌சி‌றிது கொ‌த்தும‌ல்‌லி, இ‌ஞ்‌சி போ‌ட்டு வை‌த்து ‌விடு‌ங்க‌ள். இ‌‌ந்த மோரை‌ அ‌வ்வ‌ப்போது பரு‌‌கி வ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌த் தொ‌ற்று ஏ‌ற்படுவதை‌த் த‌டு‌க்கலா‌ம்.

‌வீ‌ட்டி‌ல் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி இ‌ல்லையே எ‌ன்று கவலை‌ப் பட வே‌ண்டா‌ம். எ‌ளிய, ‌மி‌‌ன்சார‌ச் செலவு இ‌ல்லாத கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி பானைதா‌ன். ஒரு ந‌ல்ல பானையை வா‌ங்‌கி வ‌ந்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி மண‌ல் ‌‌மீது வை‌த்து ‌விடு‌ங்க‌ள். ‌வீ‌ட்டி‌ற்கு வருவோரு‌க்கு பானை ‌‌நீரை‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்களை மனமார புக‌ழ்வா‌ர்க‌ள்

இப்படி நம் வீட்டில் உள்ள அல்லது எளிதாக கிடைக்க கூடிய பழங்கள் மற்றும் மோர், குடிதண்ணீர் கொண்டே இந்த கோடையை எளிதில் வெற்றி கொள்ள முடியும்.

அதே சமயத்தில் வருடா வருடம் கூடிகூடி வரும் இந்த சூட்டினை குறைக்க என்ன செய்யலாம், உலகமே அச்சப்பட்டு இருக்கும் குளோபல் வார்மிங் என்பதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது நாம் அறிந்ததே. எனவே நம் வீடுகளில் உபயோகிக்கும் மின் உபகரணங்களை மிச்சப்படுத்துவதன் மூலம் அடுத்த வருட கோடைகாலத்தின் சூட்டினை இப்போதே குறைக்க முடியும்.

அதே சமயம் மின் துண்டிப்பை குறைக்கவும். இரவு நேரங்களில் அதிக அளவில் மின் விளக்குகள் பயன்படுத்தாமல் இருக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s