எந்திரன் – இதுவரை . .


எந்திரன் – இதுவரை . . .

வணக்கம் நண்பர்களே, இந்தியாவின் திரைப்படங்களிலே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற பெயர் பெற்ற எந்திரன் திரைப்படம் பற்றிய இதுவரை வந்த தகவல்களும் செய்திகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன . . .

தமிழக சினிமா வரலாற்றிலே அதிக வசூல் சாதனை செய்த மற்றும் அதிக நாள் திரையிடப்பட்ட சந்திரமுகி க்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சூப்பர் இயக்குனர் சங்கரும் இணைந்து உருவாக்கிய சிவாஜி பட்டி தொட்டியெல்லாம் மொட்டை போட வைத்தது ஒரு பக்கம். அடுத்த படம் குறித்து ஆலோசனையில் இருந்த ரஜினிக்கு கிடைத்தது தான் இந்த ரோபோட் என்ற எந்திரன்.

அதிலும் சங்கர் தனது முதல்வன் திரைப்படத்திற்கு அடுத்ததாக கமலையும் பீரிதி ஜிந்தாவையும் வைத்து 2001 ல் இதே கதையை ரோபோ என்ற தலைப்பில் துவங்க போவதாக அறிவித்தார். புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மீடியா டீரீம்ஸ் தயாரிப்பதாக இருந்த அந்த படம் பல காரணங்களால் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து பாய்ஸ் மற்றும் அந்நியன் செய்தார் சங்கர். விக்ரம் நடித்த அந்நியன் தான் ரோபோ என்று அப்போது செய்திகள் வந்தன.

இந்த நிலையில் சங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலமாகவே ரோபோவை தயாரிக்க இருப்பதாகவும் அநேகமாக சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன அதன் பிறகு அஜீத்குமார் நடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இது நடந்தது 2007ல். அதே வருடம் ஜூலை மாதத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ரோபோட் படத்தில் நடிக்கவும் அவரே தயாரிக்கவும் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதே வருடம் அக்டோபர் மாதம் சங்கர் மற்றும் ஷாருக்கான் இருவமே இணைந்து இந்த படம் கைவிடப்பட்டது என அறிவித்தனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தின் முழுகதையும் இன்னும் ரெடியாகவில்லை அதோடு என் மற்ற படங்களை விட இது மோசமாக இருக்கிறது என்றார் ஷாருக்கான்.

இறுதியாக 2008 ஜனவரி மாதம் ரஜினிகாந்த் ரோபோட் திரைப்படத்தின் கதாநாயகனாக முடிவு செய்யப்பட ரஜினியும் சம்மதித்தார். மொத்தமாக திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 165 கோடி என முடிவும் செய்யப்பட்டது.

ஜனவரி இறுதியில் ஐங்கரன் நிறுவனமும் ஈராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது என்று முடிவானது. அதே சமயத்தில் தமிழக சினிமா வரைமுறைக்குட்பட்டு ரோபோட் என்ற பெயர் எந்திரன் என்று செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது. அதன் கதை தமிழக எழுத்தாளர்கள் சிறந்த எழுத்தாளர் சுஜாதாவால் எழுதப்பட்டு திரைக்கதையும் வடிக்கப்பட்டது.

எல்லாம் முடிவு செய்ய்ப்பட்ட பின் கதாநாயகிக்காக தொடர்ந்து தன் நான்கு படங்களுக்காக பரிந்துரைக்கப்பட ஐஸ்வர்யா ராயை யே தேர்ந்தெடுத்தார் ரஜினி.  ஐஸ்வர்யாவும் கையெழுத்திட சூட்டிங் போக துவங்கியது சங்கர் குழு.

2008 டிசம்பர் மாதம் பல திருப்பங்களை சந்தித்தது எந்திரன் குழு. ஈராஸ் நிறுவனம் தனது முந்தைய படங்களின் தோல்வியால் பணப்பாற்றாக்குறைக்கு ஆளானது. ஐங்கரன் நிறுவனத்திற்கும் அதே நிலை. இருப்பினும் தயாரிப்பு செலவை குறைத்தால் எந்திரனை தொடரலாம் என சங்கரிடம் கேட்க சங்கர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இறுதியாக ரஜினியின் பேச்சுவார்த்தையால் சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியது மேலும் ஆங்கில தொலைக்காட்சியான எச் பீ ஓ வுடன் ஆங்கிலத்தில் எந்திரனை வெளியிட ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன் பிறகு எந்திரன் முழு வீச்சில் படபிடிப்பு நடத்தப்பட்டது.

மேற்படி படபிடிப்பு பற்றிய பல தகவல்கள் வெளியாகிய போதிலும், இன்னும் கதை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும் எந்த தகவல்களும் வெளிவராத அளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் படபிடிப்பு முடிந்து விட்டது என்று கிராபிக்ஸ் வேலைகளும் கிட்டதட்ட முடிந்து விட்டது என்றும் தகவல் கிடைத்துள்ளன.

இறுதியாக கிடைத்த தகவல் படி ஒரு பாடல் மட்டுமே மிஞ்சிய உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் எந்திரன் திரையில் விளையாடுவான் என்று ரஜினியே தகவல் தந்திருக்கிறார்.

எந்திரன் எல்லாரையும் கவருவானா?

ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய சினிமா ரசிகர்களே எதிர்பார்த்திருக்கும் எந்திரன் ஏமாற்றாமல் இருக்கட்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s