சென்ற வாரம்


விஜயின் கூத்து

விஜய் தொலைக்காட்சி வருடந்தோறும் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி தங்களை விளம்பர படுத்தி வருகிறது. எல்லா அரசியல் வாதிகள் மற்றும் தலைவர்களை ப்போலவே விஜய் தொலைக்காட்சியும் ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கிறது. அது எளிதான விளம்பரம் சினிமா என்பதுதான்.

இருந்தாலும் இது கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிகிறது. ஏற்கனவே ஒரு முறை விருது அறிவிக்கப்பட்ட போதும் விழாவை புறக்கணித்த சூப்பர் ஸ்டாருக்கு அந்த விருதை குசேலன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டு போய் கொடுத்தனர். அதுபோல் இந்த முறையும் ஆனால் சற்று வித்தியாசமாக அதிலும் அவர் பெரிதும் மதிக்கும் சிவாஜி கணேசனின் பெயரிலான செவாலியே விருதை வழங்கி அவரை அழைத்தது விஜய் தொலைக்காட்சி.

எந்த தூண்டில் வந்தாலும் மாட்டுகிற மீனாக இல்லையே ரஜினி. இதிலும் தப்பித்து விட்டார் இருந்தாலும் அந்த விருதை சிவாஜி சாரின் மகன்கள் மூலமாகவே அவரது வீட்டிற்கே சென்று விருது வழங்கி கவுரவித்திருக்கிறது??? விஜய் தொலைக்காட்சி . . .

உண்மையிலே விஜய் தொலைக்காட்சியின் இந்த விருது வழங்கும் விழா குறித்த செய்திகள் வெளிவரவே இல்லை எனினும் ரஜினிக்கு வீட்டிற்கே போய் விருது அளித்தார்கள் எனும் போது அது ஒரு செய்தியாகி இப்போது விஜய் தொலைக்காட்சிக்கு அது ஒரு விளம்பரமாகிவிட்டது.

இதுபோல் தொடர்ந்த தோல்வியில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்க்கு மக்கள் கதாநாயகன் என்ற ரீதியில் சித்திகரித்து ஒரு விருதையும் வழங்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி. பாவம் தியேட்டர்காரர்களின் கெடுபிடியிலிருந்து எப்படி விடுபடலாம் என்ற வேதனையில் இருக்கும் விஜய்க்கு இந்த விருது செய்தி வேண்டுமானால் சிறு மகிழ்ச்சியைத்தரலாம் என்பது உண்மை. மேலும் விஜயின் சோகத்தை சுகமாக்கும் விதமாக அவரது அப்பா விஜய் அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாதது என்று ஜோக்கடித்துள்ளார். . (இந்த டெக்னிக் இப்போ பலம் தராது என்பதை அவருக்கு யாராவது உணர்த்த கூடாதா)

விமானியின் திமிர்

நடந்து முடிந்த கோரவிபத்தை மக்கள் இப்போது மறந்து விட்டிருப்பார்கள், விமான துறையும் சூடு ஆறிப்போயிருக்கும் இந்த வேளையில். இறந்தவர்களின் குடும்பங்களின் சோகத்தின் கண்ணீர் வற்றாத இந்த வேளையில் விமான விபத்துக்கு காரணம் விமானியின் வேகமே மற்றும் துணை விமானியின் அச்சுறுத்தல் மற்றும் அறிவுரையை புறந்தள்ளிய செயலே காரணம் என்றும் செய்திகள் வரத்துவங்கியுள்ளன. ஏற்கனவே ஏர் இந்தியா விமான சேவையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இப்படி செய்திகள் வருவது நல்லதல்ல. மேலும் அந்த விமானிக்கும் ஒரு குடும்பம் உண்டு என்பது அவர் எப்படிபட்டவர் என்பதும் அறியாத நிலையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாக புலப்படாதவரை யாரையும் குற்றமோ குறையோ கூறுவது நல்ல செயல் அல்ல என்பதையும் உணர வேண்டும் . .

எது எப்படியோ விபத்து நடந்து விட்டது மக்கள் மாண்டார்கள் அரசு உதவித்தொகை அறிவித்து விட்டது . . இன்னும் சொல்லப்போனால் விமான துறை விபத்து நடந்து ஓடுகளத்தை 1000 அடிகள் அதிகப்படுத்த போகின்றது. எல்லாம் சரி இனி அடுத்த விபத்து வரை இனியும் உள்ள குறைபாடுகள் நீக்கப்படாமல் அப்படி தொடரத்தான் வேண்டுமா ??

களை எடுக்கும் நேரம் எல்லாக்களைகளையும் எடுக்க வில்லை என்றால் இன்னும் பயிர்களுக்கு ஆபத்துதான். . .

மீண்டும் பா.ம.க.

இந்த வெட்கம்கெட்ட அரசியலில் இன்று எதிரிகள் நாளை நண்பர்கள் என்ற சாரம்சத்தில் எல்லா அரசியல்வாதிகள் உள்ளவர்கள். அதுக்கு விதிவிலக்கல்ல கருணாநிதியும் இராமதாசும். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பது ஊரறிந்த உண்மை. இப்போது மீண்டும் ஒன்று சேர்கிறார்களாம்.

இது என்ன கூத்து என்றால் கேலிக்கூத்து என்பார்கள். சரி பாமக சென்ற இடைத்தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி காப்பாற்ற வேண்டி ஜெயிக்க கூடிய கட்சி?!!! என்று கருத்தப்படும் திமுக விடம் கூட்டணிக்கு முயல்கிறது என்றால் அது தப்பில்லை, ஜெயித்தவிடக்கூடிய கட்சி அல்லது நிரந்த முதல்வர்!! (இப்படி ஒருபோதும் திமுக சொன்னதில்லை என்ற நிலையில் இருக்கும் ஒரு கட்சி ஏன் தங்களை திட்டி தீர்த்த ஒரு கட்சியை கூட்டணியில் சேர்க்க முயலவேண்டும் என்றால், சும்மா இல்லை அடுத்த தேர்தலின் போது எப்படி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பது திமுக வின் கோட்டையில் விருப்பம் அதற்கு எந்த விதத்திலும் இடைஞ்சல் வந்து விடக்கூடாது என்பது கருணாநிதி இருப்பதையே இது எடுத்து காட்டுகிறது. . .

கருணாநிதியை விட ஸ்டாலின் எனக்கு பிடித்தமானவர். ஏன் இன்னும் சொல்லப்போனால் கட்சி வட்டாரத்தை விட அதிகளவில் நல்ல பெயர் எடுத்திருப்பவர்தான் ஸ்டாலின் அதனால் அநேகமானவர்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதே என் எண்ணம் அப்படி இருக்கும் பட்சத்தில் பாமகவின் துணை தேவையா. இன்று வேண்டுமானால் ஒரு உதவியாகத்தெரியும் இதே பாமக நாளை கண்டிப்பாக ஒரு சுமையாகவே மாறும் என்பது எல்லாருக்கும் தெரியும் . . .

சிங்கத்தின் வெற்றி

உடனே சூர்யா நடித்த சிங்கத்தின் வெற்றி என்று எண்ணி விடாதீர்கள், விளம்பரங்களிலே அதீத சத்தத்தில் கர்ஜிக்கும் சூர்யாவை பார்த்து பயந்து போய் இன்னும் அந்த படத்தை பார்ப்பதை தவிர்த்து வருகிறேன். இது சிங்கம் என்று நான் கூறியது நம் இளம் சிங்கங்களை பற்றி அதாவது ஜிம்பாப்வேயில் முதல் ஆட்டத்தில் தவறுகளை செய்து ஜிம்பாப்வேயிடம் தோல்வியை தழுவிய நமது இளம் ஆட்டக்காரர்கள் அடுத்த சந்தித்த ஜிம்பாப்வேயை விட பலமான இலங்கையை எதிர்கொள்ள இருந்த நிலையில் நான் உண்மையிலே பயந்துதான் இருந்தேன் ஆனால் தங்கள் தவறுகளில் இருந்த பாடம் கற்றுக்கொண்ட சிங்கங்கள் சீறிப்பாய்ந்தது பார்க்க பார்க்க மகிழ்சியாகவே இருந்தது. வாழ்த்துக்கள் . . இது தொடரட்டும் . .

ஐஃபா புறக்கணிப்பு

இலங்கையில் நடக்கவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நமீதாவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது வேடிக்கையாகி உள்ளது. ரஜினியும் அமிதாப்பும் கமலும் எதற்காக எதிர்ப்பு தெரிவித்தார்கள் அல்லது கலந்து கொள்ள போகவில்லை என்பதன் உண்மைக்காரணத்தை உணரவில்லை இன்னும் தமிழர்கள் அதற்கிடையில் நமீதா இந்த அறிவுப்பும் அதற்காக அவர் தந்த விளக்கமும் புல்லரிக்க வைக்கிறது. ஏன் நமீதா இலங்கை விழாவில் கலந்து கொண்டால் அவர் நடித்த படத்தின் படப்பெட்டியை தூக்கி கொண்டு ஓடுவோமா அல்லது அவர் நடித்த திரைப்படத்தை திரையரங்குகளின் ஓட விடமாட்டோமா ஏன் அவர் போகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எனக்கு புரியவில்லை. (இப்படி ஏதாவது எழுதிதான் நமீதா படத்தை போட வேண்டி இருக்கு)

நமீதா கலந்து கொள்ளவில்லை என்பதால் இலங்கை அதிபர் தொங்கபோட்டபடி (தோளில் கிடக்கும் துண்டு) வரமலா போய்விடுவார். அதே சமயத்தில் தெனிந்திய சினிமா சங்கம் எடுத்த ஒரு முடிவுக்கு நான் தலைவணங்குகிறேன். அது இலங்கையில் நடைபெறவிருக்கு இதே விழாவை வேறு ஏதேனும் இடத்திற்கு மாற்றுவார்கள் என்றால் எல்லா விதமான பங்கும் உண்டு என்பதுதான் அது . அதுமாதிரியே சர்வதேச இந்திய சினிமா விழாவை வேறு ஏதேனும் நாட்டுக்கு மாற்றும் பட்சத்தில் சிறப்பான முறையில் நம் விழாவை நடத்தி நல்ல பெயர் சம்பாதிக்க முடியும். மாறாக இலங்கையில் நடத்தும் போது விழா பொலிவிழந்து விடும் என்பது உண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s