களைத்துப்போனார்களா? கலைந்து போனார்களா?


சென்ற பதிவின் போது இருந்த நம்பிக்கையை நமது வீரர்கள் ஆடுகளத்தில் தகர்த்த போது இது பற்றி இனி ஒன்றும் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன் ஆனால் தோல்வி குறித்து எழுந்த கேள்விக்கு நமது அணித்தலைவர் தோனி விளக்கம் கொடுத்ததை படித்த பிறகு எழுதியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன்

முதலில் சில விசயங்களை கவனிப்போம்

2007 ல் நடைபெற்ற முதல் உலக கோப்பை போட்டியில் வென்று கோப்பையை பெற்றோம் அதன் பிறகே இந்திய கிரிக்கெட் வரலாற்றின் புதிய முகமான இந்தியன் பிரீமியர் லீக் துவங்கியது அதன் பிறகு உலக கோப்பை போட்டிகளில் நம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை . . ஏன்?

இ.பி.லீக் ஆட்டங்களில் கவனம் செலுத்தும் நமது வீரர்கள் களைப்படைந்து விடுகிறார்கள் என்பதல்ல அல்லது நமது அணித்தலைவர் சொன்னது போல் இரவு விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வதால் மப்பாகி விடுகிறார்கள் என்பதும் அல்ல

( மற்ற நாட்டு வீரர்களை இரவு விருந்துக்கு ஏன் அழைக்கவில்லை ஹ ஹ ஹ . . இன்னும் தெளியவில்லை போல் அதான் இப்படி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்  . .எல்லாரும் தானே குடித்து கும்மாளம் போட்டார்கள் அவர்கள் விளையாடவில்லையா . .தோனி விளையாட்டில் கவனம் போச்சு இப்போ பேச்சிலுமா )

இ.பி.லீக்கில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கவனமாக பிரித்து பார்த்து அணியில் சேர்த்து விளையாடத்தெரியவில்லை என்பதே சரி . . . ஒரு ஆட்டத்தில் சதம் அடித்தால் அவரை அணியில் சேர்ப்பது எந்த அளவிற்கு சரி என்பது தெரியவில்லை . . சேவாக் இல்லாத நிலையில் அந்த இடத்தை நிரப்ப கண்டிப்பாக அவரைப்போல் அடிக்க தெரிந்த ஆள் வேண்டி இருக்க வேண்டும் ஆனால் விஜயை கொண்டு போய் என்ன சாதித்தோம் என்பது இப்போது தெரிந்திருக்கும் . . அதற்கு பதிலாக உத்தப்பாவை கொண்டு சென்றிருக்கலாம் . . . ஏன் அப்படி செய்ய வில்லை . .

இன்னும் சொல்லப்போனால் வீராட் ஹோலியையும் விட்டு விட்டு சென்றார்கள். . . யுவராஜ் சிங் எதற்கு என்பதே இன்னும் தெரியவில்லை . . அவர் இ.பி,லீக்கிலும் விளையாடவில்லை ஏன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே . . இப்படி மனநிலையில் உள்ள வீரர்களை விட உற்சாகமாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள் தேவை என்பதை ஏன் இந்திய அணீ இன்னும் ஏற்க மறுக்கிறது . . .

அதுபோல் பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும் நமது அணி வீரர்களில் அநேக வீரர்கள் ஷார்ட் பிச் பவுன்சருக்கு அவுட் ஆனார்கள் அதே சமயத்தில் அந்த வகையில் சிறப்பாக பந்து வீசும் ஆர்.பி.சிங் அணீயில் இல்லை . . என்ன சொல்ல . . .

பல சாதனைகளை கையில் வைத்துள்ள ஜெயசூரியாவை நீக்கவேண்டும் என்ற மனநிலையில் சங்ககாரா அவரை எப்படி எல்லாம் நடத்துகிறார் ஆனாலும் விலக மாட்டேன் என்கிறார் ஜெயசூரியா . . எனவே தன் அணித்தலைவர் பதவியை இந்த தொடருக்கு பிறகு ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி இருக்கிறார் சங்ககாரா . .

இங்கு அந்த துணிவு இருந்த தோனி இப்போது இல்லை . .காரணம் மீடியா

துவக்கத்தில் தோனிக்கு வெற்றி அவசியமாக இருந்தது அதற்காக திறமையாக உழைத்தார் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார் அதற்கான பலனை விரைவிலே பெற்றும் கொண்டார் . . இன்று போதுமளவிற்கு பணம் பெயர் புகம் எல்லாம் ஏன் சொல்லப்போனால் கிரிக்கெட்டின் கடவுளை மிஞ்சும் அளவிற்கு (அது முடியாது) புகழ் வேண்டாத குறைக்கு நடிகைகளின் சகவாசம் எல்லாம் திகட்ட திகட்ட கிடைத்ததும் . . கவனம் முழுவதும் திசைமாற இப்போ இவை எல்லாம் கிடைக்க காரணமாக இருந்த அந்த திறமை போராட்ட குணம் எல்லாமே போய்விட்டது . .

போட்டியும் பொறாமையும் வீரர்களுக்குள் அதிகமாக , எதிரணியை வெற்றி கொள்ள வேண்டிய தோனியின் கவனம் உடன் விளையாடும் வீரர்களை வெல்ல தூண்டியது . .அதன் விளைவாகவே இந்த குழப்பங்களும் தோல்வியும் . .

வீரர்களுக்கு ஒற்றுமை என்பது இந்திய அணிக்கு சாபக்கேடாகவே இருக்கிறது . . மேலும் நடிகைகளின் சகவாசமும் அப்படியே .. . தாதா சரிந்ததும் அப்படியே . .தோனி இன்னும் சரியவில்லை  .. இன்னும் நாட்கள் இருக்கிறது ..

உங்களை வெளியேறச்சொல்லவில்லை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள் மீண்டும் இந்திய அணியை புதுபித்து அரசியல் கலக்காத இந்திய அணியை கொண்டுவரும் போது மீண்டும் கோப்பைகள் நம் கையில் . . .

முதல் 10 ஓவரில் 90 ரன்கள் அடித்த நமக்கு 20 ஓவரில் 162 ரன் களே எடுக்க முடிந்தது என்றால் நமது வீரர்களில் பேட்டிங் திறமையை என்ன செய்ய . . .

அதுபோல் முதல் 10 ஓவரில் 60 ரன்களுக்குள் இருந்த இலங்கை 20 ஓவரில் 163 எடுத்தது எப்படி  . . எங்கே தவறு . . . .

நானாவது பரவாயில்லை இரவு 11 மணி வரைதான் விழித்திருந்தேன் (பஹ்ரைன்) இந்தியாவில் முழித்திருந்து மேட்ச் பார்த்த ரசிகர்களை நினைத்தால் இந்திய வீரர்கள் மீது எத்தனை கோபம் வரும் . . ஆனாலும் கோபத்தால் அவர்களை சபிக்க விருப்ப படவில்லை . . .

இந்த முறை தோற்றால் இனி வரும் போட்டிகளில் கவனம் செலுத்துவோம்

(எப்போது இதுதானே கடைசி நிலை)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s