அரை இறுதிக்குள் இந்தியா?


என்ன இந்தியாவின் என்னைப்போன்ற கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் எல்லாரும் மிகவும் நொந்து போய் இருப்பீர்கள் இந்த நிலையில் இனிமேல் கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்க போவதில்லை என்று வேறு நினைத்து இருப்பீர்கள்

ஆனால் எனக்கு அந்த அளவுக்கு வருத்தம் இல்லை காரணம் நம்ம டீம் இந்த 20 ஓவர் விளையாட்டில் அதிலும் முதல் உலக கோப்பையில் கோப்பையை வென்றது எப்படி என்பதை உணர்ந்தவர்களுக்கு இந்த வருத்தம் இந்த ஆண்டின் உலக கோப்பைக்கான நமது அணி மேற்கிந்திய தீவுகளுக்கு போனபோதே தோன்றி இருக்கும் . .அப்படி எனக்கு தோன்றியதால்தான் இந்த தோல்விகளை என்னால் தாங்கி கொள்ள முடிந்தது . .

தொடர் ஆட்டங்கள் என சொல்லி விட்டு யாரும் விடுபட்டு விடலாம் என்றால் அது தவறு . .தொடர்சியாக ஆடுகின்ற அணிதான் ஆனால் வீரர்களை கலந்து விட்டுருக்கலாமே . .குறிப்பாக சேவாக்கை வெளியே வைத்து விடும் அளவிற்கு அணியின் தேர்வுக்குழுவை விஜய் கவர்ந்திழுத்தார் என்றால் (தேர்வுக்குழுத்தலைவர் சென்னைக்காரர்) உத்தப்பா அப்படி ஆகாதது கவனைக்குறைவாக இருக்க கூடுமோ . . ஒருவேளை அந்த நபர் சென்னை ஆட்டங்களையே கவனித்திருந்ததால் இப்படி நடந்திருக்க கூடும்

இப்படியான பல காரணங்களை கூற முடியும் ஆனாலும்  . . என்னால் இப்போதைக்கு சொல்ல முடிகின்ற காரணம் இதுதான் . .முதல் உலக கோப்பையை இந்தியா வென்றது என்றால் அதற்கு இந்திய அணியின் ஒற்றுமைதான் காரணம்  அதிலும் முதிர்ந்த வீரர்களும் புதிய வீரர்களும் ஒற்றுமையாக செயல்பட்டனர் , புதிய வீரர்களின் வேகம் முதிர்ந்த வீரர்களின் விவேகமும் செயல்பட்டது .. இந்த முறை அது எங்கே போனது . . எல்லாம் அவரவர் ஈகோக்குள் மறைந்துவிட்டது . . இப்போதைக்கு இந்திய அணி மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கிறது எனலாம்

வீரர்களுக்கிடையே உள்ள பனிப்போர்களும் மாற்றுக்கருத்துக்களுமே இந்த தோல்விக்கு காரணம் . .

வெற்றியின் மீதும் ஆட்டங்களின் மீதும் கவனமிருந்த அணித்தலைவருக்கு இப்போது அணி வீரர்கள் மீது கவனம் மாறிவிட்டதும் ஆட்டத்தின் மீதும் வெற்றியின் மீதான கவனமும் சிதையக்காரணமாக இருக்கலாம்

எது எப்படியோ மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான் எப்போதெல்லாம் நீங்கள் ஒன்று சேர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களால் வெற்றியை சுவைக்க முடியும் . .உங்கள் ஒன்று சேர்ந்த உழைப்பு மட்டுமே வெற்றியை தேடித்தரும் மாறாக போட்டியும் பொறாமையும் உங்கள் மனதில் தோண்றுமானால் இப்படித்தான் இருக்கும் ..

இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் கிடைத்த ஒரு செய்தி இந்திய அணியின் ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் முத்தொடருக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மாற்றம் எதைக்கொண்டு வரும் என்று தெரியவில்லை . . நல்லாதாகத்தான் எனக்கு தோன்றுகிறது அதே சமயத்தில் அனைத்தும் இளம் வீரர்கள் போதிய அளவிற்கு ஆட்டத்தின் நேக்குபோக்குகள் தெரியாதவர்கள் என்றாலும் இவர்களும் என்னதான் செய்கிறார்கள் பார்க்கலாமே அதே சமயத்தில் நல்ல அணியாக வரும் வாய்ப்பும் இந்த அணிக்கு உள்ளது பார்க்கலாம் . . அதே சமயத்தில் தோனி யுவராஜ் சிங் (சமீபமாக இவர் விளையாடுவதே இல்லை) ஹர்பஜன் சிங் சகீர்ஹான் காம்பீர் சேவாக் அனைவரும் கழட்டி விட்டது புத்திசாலித்தனமா இல்லையா என்பதை முதல் ஆட்டத்திலே நமக்கு தெளிவு படுத்தும் இந்த புதிய அணி . . (என் கருத்து இவர்கள் நல்ல முறையில் ஆடுவார்கள் என்பதே) அதிலும் இந்திய அணியின் தலைமை ஏற்றுள்ள ரைனா சிறந்த ஆட்டக்காரனாக நீரூபித்தவர் ஆனாலும் கேப்டனாக தலைமையேற்ற பின் அவரது ஆட்டமும் சக வீரர்களோடு அவர் காட்டும் நட்பும் அவருக்கு வெற்றிக்கு பலம் சேர்க்கும்

மேற்க்கண்ட தகவல்களூக்கு இந்த பக்கத்தை படித்துக்கொள்ளுங்கள்

http://www.cricinfo.com/zim-tri2010/content/story/459056.html

இந்த மாற்றங்கள் உலக கோப்பையில் மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் எதிரொலிக்குமா இல்லை இந்திய அணி வெற்றி பெற போராடுமா?

இனி வரும் ஆட்டத்தை பார்க்கலாம் . . பாதளத்தில் விழுந்து கிடந்த பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குள் செல்ல ஒரு வழி உருவாக்கி விட்டது

இங்கிலாந்து நியுசிலாந்தை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரை இறுதிக்குள் செல்ல முடியும் இந்த சூழ்நிலையில் முதலில் பேட் எடுத்து ஆடிய நியுசிலாந்து 149 ஓட்டங்களே எடுத்துள்ள நிலையில் நியுசிலாந்து வெல்லும் என்பது சந்தேகமே எனவே கிட்டதட்ட பாகிஸ்தான் அரை இறுதிக்குள் நுழைந்தே விட்டது என்பேன்

இப்பதிவுக்கு முன்பான ஸ்கோர் இங்கிலாந்து 60 ஓட்டக்களூக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது

இனி நமக்குள்ள வாய்ப்பு பற்றி சொல்லப்போனால் முதலில் நாளைய இரண்டாம் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவ வேண்டும் அப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு . . சரி அரை இறுதி வாய்ப்பு எப்படி என்பதை பார்க்கலாம்

நாளைய ஆட்டத்தில் முதலில் இலங்கை பேட் செய்யுமானால் 160 ஓட்டங்களுக்குள் இலங்கையை மடக்க வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி 161 ஓட்டங்களை 17.5 ஓவரிலே எடுத்து வெற்றி பெற வேண்டும் . . நாளை என்ன நடக்கும் காத்திருப்போம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s