விஜய்க்கு சில கேள்விகள்


விஜய்க்கு சில கேள்விகள்

பதிவுலக நண்பர்கள் அனைவரும் ஏந்தான் இப்படி குறிவச்சி தாக்குறீங்களோ தெரியல ஆனாலும் உங்கமேல எனக்கு எந்த வருத்தம் இல்ல காரணம் உங்களுக்கெல்லாம் இப்படி ஒரு பதிவு போட வாய்ப்பளித்த விஜய்க்கு வாழ்த்துக்கள்

முடிஞ்ச அளவுக்கு எல்லாரும் போஸ்ட்மார்ட்டம் பண்ணீட்டீங்க இனி நான் என்ன எழுத என்று யோசித்தபோது உதித்ததுதான் இந்த பதிவு.

நண்பர்களின் விமர்சனங்களை படித்த பின் சத்தியமாக “சுறா” வை பாக்க ரொம்பவே பயமா இருக்கு அதிலும் அந்த துவக்க காட்சியை பார்த்து ஸ்டாப் பட்டனை அழுத்தியவன் தான் இப்ப வரைக்கு பிளே பட்டனை தட்டவே இல்லை அப்படியே எஜக்ட் போயிட்டேன் . .

நான் கடப்புறத்தை சேர்ந்தவன் என்பதால் அந்த முதல் காட்சிக்கு முடிந்தளவுக்கு சிரித்து விட்டேன் . .என்ன செய்ய விஜய்க்கு சகவாசம் சரியில்லை என்பதே என் வருத்தம் .. நல்ல நடிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் சராசரியாக நடிக்கவும் சூப்பராக நடனமாடத்தெரிந்த அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் செய்ய முடிந்த மிக விரைவிலே தனக்கென கூட்டம் ஒன்றை கூட்டத்தெரிந்த நடிகர் என வேண்டுமானல் சொல்லமுடியும். .

இருந்தாலும் அவர் தனக்கென உருவாக்கிய கூட்டமே தலையிலடித்து கொள்ளும் அளவிற்கு இப்படிபட்ட சினிமாக்கள் வருமானால் அவரது எதிர்காலம் எப்படி அமையும் . .

விஜய்க்கு ஒரு கேள்வி . .

உங்களுக்கான இந்த கூட்டம் கில்லிக்கு அப்புறம் வந்து சேர்ந்ததல்ல . . பூவே உனக்காகவில் உணர்ந்து காதலுக்கு மரியாதையில் சேர்ந்த கூட்டம் . . அவர்கள் கில்லியில் கண்டது தாங்கள் ரசிக்கும் ஹீரோவின் மாறுபட்ட ஒரு முகத்தைத்தான் ஆனால் அதையே தொடர்ந்தால் என்ன ஆகும் மரியாதை சேர்த்த கூட்டம் கலைந்து விடாதா?

ஒன்று தெரியுமா உங்களுக்கு நீங்கள் உங்கள் சட்டையில் பட்டன் போட்டு நடித்த படங்கள் பெற்ற வெற்றியை சட்டையில் பட்டன் போடாமல் நடித்த படங்கள் பெறவில்லையே அது ஏன் என்று யோசித்தீர்களா?

(போக்கிரி என்று நீங்கள் கேட்டால் . . .சாரி அடுத்த பாராவை படியுங்கள்)

ஒரு நடிகன் என்பவன் பல வேடங்களில் சிறப்புற நடிப்பவே அல்லாமல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிக்கி கொண்டு சின்னபின்னமாகுபவன் அல்ல . . உங்களுக்கு சினிமாவின் ஒரு முகமாக மட்டுமே இருக்க வேண்டிய சண்டை நாயகன் என்ற ஆக்ஷன் ஹீரோ என்பதை பல படங்களாக வரிசையாக ரவுண்ட் கட்டி வில்லனை அடிக்கிறீங்களோ இல்லையோ ரசிகர்களை தாக்குவதை எப்போதுதான் நிறுத்தப்போகிறீர்கள் . .

நடிகனுக்கு தேவையான பல குணங்களை இப்போது மறந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் . . குஷியிலும் என்னவளேவும் அப்படி ஒன்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை உங்களுக்கு மட்டும் ஏன் அந்த படங்கள் பிடிக்காமல் போனது . .

சண்டை காதாநாயகனாகவே இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை என்னால் மாற்ற முடியாது ஆனால் நீங்கள் அதை மாற்ற நினைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்திருக்கும்

உங்களூக்கு தேவையான அரசியல்! வசனங்களுக்காகவோ அல்லது பஞ்ச் டயலாக்குகளுக்காக மட்டுமே இது போன்ற சண்டைப்படங்கள் உதவுமே அல்லாது வேறு ஒன்றுக்கும் இல்லை ஆனாலும் நான் ஏற்க்கனவே சொன்ன குஷியிலும் என்னவளேயிலும் உங்களுக்கான வசனங்களை வைக்கலாம் அது இப்போது ரீச்சாகும் அளவை விட அதிகமாகவே இருக்கும்

மலையாளத்தில் ஒன்று சொல்வார்கள்

“அறியாத பிள்ளை சொரியும் போது அறியும்”

இப்போது சொரியத்துவங்கியுள்ளது இப்போது அறியாமல் விட்டால் . . ?

சரி இதுவரை வந்ததை விடுவோம் இனி வரவிருப்பதை எப்படி எடுத்து கொள்வது என்று பார்ப்போம் என்றால்  . . சமீபத்தில் நீங்கள் கொடுத்த பேட்டி ஒன்று என்னை இன்னும் ஷாக் ஆக்கிவிட்டது . .

சுறா ஆடியோ வெளியீட்டு விழாவில் நீங்கள் என்ன பேசினீர்கள் என்று அதற்குள் மறந்துவிட்டீர்களே . . . அதில் ஏதோ ஒரு புதுதுதுதுது படத்தை அதுவும் 50வது படமல்லவா அதான் பொறுமையா பல விசயங்களை நிரப்பி கொண்டுவருகிறேன் என்ற அளவில் பேசிவிட்டு . . என் மற்ற படங்களைப்போல் இதுவும் ஒரு படமே என எப்படி மாற்றி பேச முடிந்தது. (எழுதி தந்த அப்பா மறந்திருப்பார்)

சச்சினின் வெற்றி என்பது அவரது தவறுகளை அவரே உணர்ந்து அதில் அவர் மாற்றங்களை செய்ததுதான் என்பது ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாமல் போய் விட்டதா?

இப்போதும் ஒன்றும் கெட்டுபோகவில்லை

அடுத்த தலைமுறைக்கான முன்னனி நடிகர் என்ற வரிசையில் உங்கள் பெயரே இன்னும் முதலிடத்தில் இருக்கிறது . . மற்றவர்களை போட்டியாக நினைப்பதை விட்டுவிட்டு உங்களையே (உண்மையும் அதுதான்) போட்டியாக நினைத்தால் இன்னும் இன்னும் உயரம் காத்து இருக்கு . . .

இன்னும் ஒன்று

சிலருக்கு எதிரிகள் வெளியில் இருப்பதில்லை உங்களுக்கும் அப்படித்தான் அது வேறு எந்த வடிவிலும் இல்லை ஒன்று நீங்கள் இல்லை என்றால் உங்கள் அ . . . ?

உங்கள் அடுத்த படம் நான் ஏற்க்கனவே பார்த்து எனக்கு மிகவும் பிடித்த “பாடி கார்டு” அஸினால் நயந்தாராவின் இடத்தை நிரப்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை . . அதே போல் அதில் திலீப் சட்டையை திறந்து போட்டு திரியவில்லை. . . பஞ்ச் வசனம் பேசுவதில்லை . . குறிப்பா படத்துக்கு தேவையில்லாத வசனங்களும் பாடல்களும் அதில் இல்லை . . இவையாவும் இல்லாமல் இருந்தாலே படம் நல்லா இருக்கும் . . ஆனால் படம் துவங்கும் முன்னரே வந்த செய்திகள் இப்போதே பயத்தை ஊட்டிவிட்டது . . “விஜய்க்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்”

சுறா படத்திற்கு முன்னாடி சுறாவை மலையாளப்படமான சோட்டா மும்பையை விஜய்க்கு ஏற்றாற்போல் மாற்றி எடுத்துள்ளோம் என்றார்கள். . என்ன ரிசல்ட் என்பதை இப்போது உணர்திருப்பீர்கள் . . .

இனி . . .

காவல்காரனுக்கும் இத்தகைய விமர்சனங்களை வரவிடாதீர்கள் . .

Advertisements

One comment on “விஜய்க்கு சில கேள்விகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s