குஷ்பூவும் கற்பும் வழக்கும்


குஷ்பூவும் கற்பும் வழக்கும்

இன்று அதிகாலையிலே கிடைத்த நல்ல செய்திகளில் மிக முக்கியமான செய்தி குஷ்பூவின் மேல் தொடரப்பட்ட 22 வழக்குகளிலிருந்து அவரை விடுவித்து புது சாதனை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

குஷ்பூ யார் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அவர் கற்பு குறித்த விசயத்தில் என்ன சொன்னார் என்பது பலருக்கு தெரியவில்லை. அவர் கூறிய கருத்தை தங்கள் சுய லாபத்திற்காக சில பத்திரிகைகளும் மீடியாவும் மாற்றி பரப்பி அவருக்கு எதிராக ஒரு மாயை ஏற்ப்படுத்தியது என்பது ஒருவேளை உண்மையாக இருக்கலாம்

இருந்தாலும் கற்பு என்ற விசயத்தை வைத்து கொண்டு ஏதோ ஒரு கருத்தை தன் விருப்பத்திற்கு கூறிய அவரை பலரும் பல வழிகளில் மனரீதியாக தாக்கினார்கள் . . அதற்கெல்லாம் வழைந்து கொடுக்காமல் வருத்தப்படாமல் எதிர்த்து நின்று அதையெல்லாம் தன் பெயருக்கான புகழுக்காக மாற்றி இன்று ஜெயித்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

தீடிரென இப்படி ஒரு தீர்ப்பு வர என்ன காரணம்?

அது அப்புறம் பார்க்கலாம்

பொதுப்படையாக அவரது கருத்தையே அல்லது இந்த விசயத்தையோ எடுத்து கொண்டால் நமது கலாச்சாரம் என்ற கூட்டுக்குள் வாழும் நமக்கு சற்று விநோதமாக இருக்கலாம். இருந்தாலும் திருமணத்திற்கு முன்பாக உறவு என்பது சரி என்பதல்ல அவரது கருத்து என்று பலமுறை அவரே சொன்னாலும் . . யாரும் ஏற்று கொள்வது போல் இல்லை.

பாதுகாப்பான உறவு என்பதை அரசாங்கமே வலியுறுத்தும் போது குஷ்பூவும் அதுசார்ந்த ஒரு கருத்தைதானே சொன்னார் என்று அவருக்கு வக்காலத்து வாங்கவும் நான் தயாரில்லை. . அதன்பிறகு பொதுமன்னிப்பும் கேட்டார் குஷ்பூ தான் செய்யாத ஒரு குற்றத்திற்கும் சமுதாயம் என்பதை மதித்து மன்னிப்பு கேட்ட பிறகும் இந்த விசயத்தை வைத்து தங்கள் சுய விளம்பரத்திற்காக எதிர்பார்த்து இருந்த ஒரு சிலர் முகத்தில் அதே சமுதாயமும் சட்டமும் கரி பூசி இருக்கிறது எனலாம்

அதிலும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ இல்லாமல் இல்லை. . வழக்குகளை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல். வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளும் வழக்காடும் வழக்கரிஞர்களும் தங்கள் பொன்னான நேரத்தை இது போன்ற சீப்பான விளம்பரம் தேடும் வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

மீண்டும் அதே கேள்விக்கு போகலாம்

தீடிரென இப்படி ஒரு தீர்ப்பு வர என்ன காரணம்?

இதற்கான பதிலை படிப்பதற்கும் முன்னால் முடிந்தால் இந்த செய்தியையும் படித்து பாருங்கள்

இங்கே படித்து பாருங்கள்

படிச்சிட்டீங்களா இனி என்ன சொல்ல இருக்கு. . .

திமுகவின் தொண்டன் என்பதில் பெருமை பட்டுக்கொண்ட பல கோடி மக்களில் நானும் ஒருவன். என்ன செய்ய இன்றைய நிலையில் திமுக எதை நோக்கி பயணிக்கிறது என்பதை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது . .

மேற்கொண்டு என்ன எழுத என நினைக்கும் போது குமுதம் வார இதழில் எழுதி வரும் ஞானி என்பவர் எல்லா வாரங்களிலும் கலைஞரையும் திமுக அரசை குற்றம் சாட்டியே எழுதி வருகிறார். . அதை படிக்கு போதொல்லாம் எனக்கு வரும் கோபம் இருக்கிறதே . . சில சமயங்களில் அவர் எழுதுவதும் சரியோ என தோணவும் செய்கிறது. . இனி வரும் வாரம் அந்த இதழில் என்ன எழுதப்போகிறாரோ என்பதுதான் என் இப்போதைக்கு கவலை . . .

என்ன இருந்தாலும் குஷ்பூ வும் அந்த சட்ட சபையில் உட்காரப்போகிறாரா இல்லையா என்பதல்ல . . அங்கேயும் சாமி சிலைகள் இருக்கிறதா என்பதை சட்டசபை ஆர்வலர்கள் கவனித்து கொள்ளுங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s