விளையாட்டு வினையானது


விளையாட்டு வினையானது

இன்றைக்கு இந்தியர்களால் மட்டுமல்ல உலகமே ஒரு விளையாட்டை விரும்பி பார்க்கிறது என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களைத்தான் என்றால் மிகையில்லை.

அந்த அளவிற்கு விளம்பரங்களாலும் வித்தியாசத்தாலும் இந்த அளவிற்கு இந்த அமைப்பை கொண்டு வந்த பெருமை மோடியையே சேரும் ஆயினும் அவரது நீருபிக்கபடாத சில பல குற்றங்களால் அவரை இந்த அளவிற்கு மனரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தியதன் பின்னனி என்ன என்று யாரும் யோசிப்பதே இல்லை.

மொத்தமாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடப்பட்ட பணத்தின் தொகையை ஒரு தொலைக்காட்சி இப்படி சொல்லிற்று 75 ம் அதன் பிறகு 13 பூஜ்யமும் போட்டு நீங்களே வாசித்து கொள்ளுங்கள் என்று. அப்படி போட்டு பார்க்கும் போது 750,00,000, கோடி ரூபாய் வருகிறது. நமக்கு தேவையில்லாத விசயமாக இதை பார்க்க முடியுமா .

இந்தியாவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு அமைப்பில் இந்த அளவிற்கு பணம் விளையாடுகிறது என்றால் . இந்தியா முழுமையாக உள்ள அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அதில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளும் என கணக்கு போட்டு பார்க்கும் போது வரும் ஒரு தொகை மலைப்பாக இருக்கும் இருக்கிறது . .

இப்படி பட்ட செல்வங்கள் நிறைந்த இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது (இதைப்பத்தி என்ன சொல்ல எல்லாருக்கும் தெரியும்) ஏன் வளரவில்லை என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் எது எப்படி இருந்தாலும் இரண்டு நபர்களுக்கிடையே நடைபெற்ற ஈகோ பிரட்சனையால் வெளிவந்த இந்த தொகையும் இந்த முறைகேடான வழியில் சம்பாதிக்கபட்ட பணம் மற்றும் வெள்ளையாக்கப்பட்ட கருப்பு பணம் என இந்த அளவிற்கு வெளிவந்துவிட்டது என்றால் . . .

இன்னும் இன்னும் இன்னும் யார் யாருக்கெல்லாமோ பிரட்சனை வந்தால் எந்த் அளவிற்கு கருப்பு பணம் வெளிவரும் என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் எனினும் இன்னும் நாம் இந்தியாவை வளரும் நாடு என்ற பெயரிலே அழைப்பது தவறா அல்லது இந்தியா வளர்ந்துவிட்ட நாடா?

இனியும் விளையாடாதீர்கள் . . . . . . . .

Advertisements

One comment on “விளையாட்டு வினையானது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s