பேராண்மை – தமிழ் சினிமாவுக்கு அவசியம்


வாங்க சினிமா ரசிகர்களே

பல கரடு முரடான பாதையிலும் சகதியிலும் பயணிக்கும் நம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு சில நல்ல சினிமாக்கள் வந்து சினிமா உலகத்தை சுத்தப்படுத்தும். பல சமயங்கள் அது அப்படியே கடந்து போக மீண்டும் நாம் “அப்பன் செஞ்ச தப்புல ஆத்தா பெத்த வெத்தலை” என்று சகதியை தேடுகிறோம்.

இந்த சூழ்நிலையில்தான் “பேராண்மை” வந்துள்ளது. சிறந்தபடம் என்று எனக்குத்தோணுகிறது. எதிர்கருத்து என்பது எல்லாருக்கும் உள்ளது. எனினும் இயக்குனர் ஜனநாதன் நிஜமாலுமோ ஜனங்களின் நாதனாக தன்னை வெளிப்படுத்த எத்தனை சிரமப்பட்டுள்ளார் என்பது என் சின்ன சினிமா அறிவில் அறிய முடிகிறது.

தமிழ் சினிமா இலக்கணப்படி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலே அந்த இருவரும் கதாநாயகனோடு காதல் பாட்டு ஒன்றை பாட வேண்டும் , இதற்கு அன்றைய புரட்சி தலைவரும் இன்றைய சூப்பர் ஸ்டாருமே விதி விலக்கல்ல அதிலும் உலக நாயகனும் இக்கேடுகெட்ட செயலை செய்வதும் உண்டு (தெனாலி) இருந்த போதிலும் ஐந்து பெண்களை கதாநாயகி களாக்கி (கடையில் காண்டம் வாங்க கூடிய திறமை சாலிகள் அவர்கள்) அவர்களை கதையின் நாயகிகளாக மாற்றி தமிழ் சினிமா இலக்கணத்தை உடைத்ததற்காக முதல் சல்யூட்

இந்த படத்தில் பல இடங்களில் “பச்சை” வசனங்கள் இருப்பதாக சிலர் சொல்லும்போது சிரிப்பு வருகிறது. அந்த காட்சியை விட்டுவிட்டு வசனங்களை மட்டும் தனித்து பார்க்கும் அறிவு ஜீவிகள் எப்போது பாடலை அதற்காக உடல் அசைவுகளையும் தனித்தனியே பார்க்க போகிறார்களோ (பல பாட்டுகளுக்கும் நடனத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் தொப்புளையும் *** யும் காட்டுவதை இவர்கள் குற்றம் காணப்போவதில்லை)

இளைஞிகள் அதிலும் முற்ப்போக்கான இளைஞிகள் தங்கள் மனம் துள்ளிக்குதிக்கும் வயதில் பேசும் பேச்சுக்கள் மகிழ்சிக்காக, விளையாட்டுக்காக, தங்களுக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ள இளைய சமுதாயத்தின் பேச்சே அது . கேட்கும் போது ஒரு மாதிரி இருந்தாலும் சில நொடிகளிலே அதை ரசிக்கவும் முடிகிறது. அதை விட்டு விட்டு அதை குறைகூற என்னால் முடியவில்லை. அதே இளைஞிகள் தான் நாட்டுக்காக இத்தனை சிரமப்படுகிறார்கள் எனபதை சினிமா காட்டும்போது. பெற்றோர்களை உங்கள் பிள்ளைகளை வீணாக சந்தேகம் மற்றும் சுடு சொற்கள் பயன்படுத்தி காயப்படுத்தாதீர்கள்.

அவர்கள் தப்பு செய்பவர்கள் அல்ல,

கதாநாயகனின் பாத்திரம் படைப்பு இயக்குனரின் தைரியத்திற்கு ஒரு உதாரணம், இறுதி வரை தன் கட்டுப்பாடுக்குள் இருக்கும் ஹீரோ இந்த படத்தில்தான். கதாபாத்திரத்தின் தனமை இறுதி வரை கெடவே இல்லை, இடையில் நாசுக்கான ஒரு காதல் உணர்வு உண்டு என்ற போதிலும் அதையும் கடந்து ஜெயித்து விட்டான் துருவன்.

ஐந்து பேரில் இருந்து விலகி ஒற்றையாக செய்தி சுமந்து செல்லும் அஜிதா போராட்டங்களுக்கிடையேயும் அந்த அடையாள துணியை பார்த்த சந்தோசத்தில் திணறி தடுமாறி மாட்டி மரிக்கும் போது ஏனோ கண்ணோரத்தில் சில துளிகள்.

யதார்த்தம் என்ற போர்வையில் விகாரமாகவோ வித்தியாசமாகவோ இல்லாமல் இயல்பாக மிகவும் இயல்பாக சினிமாவை இயக்கிய இயக்குனருக்கு இறுதியாக ஒரு சல்யூட் . .

இச்சினிமாவின் வெற்றி இதுபோல பல சினிமாக்கள் வர வழைக்குமானால் அதுதான் தமிழ் சினிமாவின் வெற்றியாக அமையும் . .

அதற்காக முயற்சியில் இறங்கும் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன்.

பின் குறிப்பு: அட்வான்ஸ்டு டெக்னாலஜி உடைய பல ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் பெண்களும் துருவனும் கையள்வது குறித்து பலருக்கு நயாண்டியாக தோணலாம். சினிமாதானப்பா இயல்பு காட்சி என்று கம்புகளை ஈட்டியாக்கி எதிரியை வீழ்த்தி இருந்தால் இன்னும் நகைச்சுவையாக இருக்கும் அல்லவா. சினிமா என்பதால் இதை மறப்போம் இருந்த போதிலும் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வோம் என்ற கருத்தை அழுத்தமாக பதிக்கவே அந்த காட்சி என்றும் சொல்லலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s