கிரிக்கெட் விளையாட்டா? வியாபாரமா?


சாம்பியன் டிராபியை இழந்து விட்டோம்

அடுத்து இந்தியாவிலே நடத்தப்பட்ட 2020 ஏர்டெல் சாம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய பெயர்கள் கொண்ட இந்திய வீரர்களும் உடைய மூன்று அணிகளில் முதல் சுற்றிலே நடப்பு சாம்பியன் வெளியேற அடுத்த ரவுண்டில் இரண்டு அணிகளும் வெளியேறிவிட்டன.

இறுதியாக அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளாக வெளிநாட்டு வீரர்களை கொண்ட அணிகளே தகுதி பெற்ற நிலையில் அரை இறுதிப்போட்டியும் சரி இறுதி போட்டியும் சரி எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடந்தேறும் என்பதே இப்போதைய கேள்வி.

இதில் என்ன சந்தேகம், நடுவர் வருவார் போட்டி ஆரம்பிக்கும் 40 ஓவர்கள் வீசப்பட முடிவுக்கு வந்து விடும் என்றுதானே நினைக்கிறீர்கள்  அப்படி என்றால் நீங்கள் கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களாக இருக்க வேண்டும் கிரிக்கெட்  போட்டி நடத்த தேவை ரசிகர்கள் என்ற நிலைக்கு மாறிவந்து விட்ட காலகட்டம் இது.

20 20 நடத்துவதன் மூலம் நமக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் செல்வினங்களை கணக்கில் எடுத்தால் இது நன்கு புலப்படும். அதீத இலாபம் கிடைக்கும் ஒரு விளையாட்டு என்பதாலே இந்திய அரசில் கிரிக்கெட் வீரர்களுக்கான சலுகைகளும் மரியாதைகளும் தரப்படுகின்றன, எது எப்படி இருந்தாலும் கிரிக்கெட் மூலம் நமக்கு கிடைக்கும் வருமானம் என்பது மிக மிக அதிகம்.

அதனாலேயே கிரிக்கெட் நம்மை கேட்காமலே நமது வீட்டுக்குள் ஒரு சாத்தானை போல் நுழைந்து விட்டது. இருந்தபோதிலும் 2020 சாம்பியன் லீக் ஆட்டத்தில் பார்வையாளர்களை இழந்துவிட்டது என்றே சொல்லலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் வருமானத்தின் ஒரு பகுதியை இழக்க நேரிடும். இருந்த போதிலும் அந்நிய செலவாணி போன்றவகையில் கிடைக்கும்  வருமானம் கிடைத்தே இருக்கும்.

ஆனாலும் கிரிக்கெட் போட்டிகளின் பேரில் உழைத்து சம்பாதிக்கும் சில பல சின்ன வருவாய்காரர்கள் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் உழைப்பையும் தங்கள் சின்ன முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலை இவர்க்ளுக்கு வராமல் தடுக்க என்ன செய்திருக்கலாம். அரை இறுதி போட்டிக்குள் இந்திய பெயர் கொண்ட ஏதேனும் ஒரு அணி இடம் பெற செய்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை என்றால் பெரிதாக எதிர்பார்க்க பட்ட உலகளாவிய வருமானம் தடை பட்டு விடக்கூடாது என்பதுதான்.

எது எப்படி இருந்தாலும் 20 20 சாம்பியன் லீக் ஒரு வகையில் வெற்றி பெற்று விட்டது என்றே சொல்லவேண்டும் இந்திய 20 20 சாம்பியன் லீக் போட்டியின் பார்வையாளர்களாக உலகம் முழுவதும் இல்லை என்றாலும் பங்கு பெற்ற நாடுகளிலிருந்து நேரடியாக வந்தவர்களும் தொலைக்காட்சி வழியாக பார்த்தவர்களும் என ஒரு வட்டத்தை உருவாக்கி விட்டார்கள். இது இப்படியே தொடர்வதால் இந்திய அரசுக்கும் 20 20 யின் நிருவனருக்கும் நல்ல வருமானம் என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

இது இப்படி இருக்கு தொடர்ந்து தோல்வியை பரிசாக தந்து கொண்டிருக்கும் நமது அணித்தலைவர் தனது தோல்வியை ஒத்து கொண்டு சேவாக்கை திரும்பவும் அணியில் சேரச்செய்திருப்பது நல்லது. சேவாக் திரும்பவும் வந்த தெம்பில் காம்பீரும் நல்ல ஓப்பனிங் செய்வார் என்றே நம்பலாம். எது எப்படி இருந்தாலும் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் . .சேவாக்கும் காம்பீரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனியின் முகத்தில் கரியை பூசினால் அது தோனியின் தலைவர் பதவிக்கே ஆபத்தாக முடியலாம். ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு ஆளான தோனியின் ஆட்டமும் கணக்கில் எடுக்கப்படலாம். எனினும் மீண்டும் நமது அணி ஒற்றுமையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குமா இல்லை பனிப்போர் தொடருமா காத்திருப்போம்

பாத்தீங்களா கிரிக்கெட் விளையாட்டே அல்ல என்றும் தொடர் தோல்விகளை தந்த நமது அணியை விமர்சிப்பதையும் செய்தே நானே நொடிப்பொழுதில் அதை எல்லாம் மறந்து விட்டு அடுத்த ஆட்டத்தை பற்றி எண்ண ஆரம்பித்து விட்டேன் . .இதுபோன்ற ரசிகர்களை எல்லாம் ஏமாற்றி கிரிக்கெட் என்ற கணவான்களின் ஆட்டத்தை வியாபாரமாக மாற்றீயது எது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s