ஐஸும் எந்திரனும் ரஜினியும்


ரொம்பவும் வேகமா வந்திருப்பீங்க

வாங்க இங்க தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியோ இல்லை முன்னாள் உலக அழகி ஐஸ் பற்றியோ அல்ல இந்த பதிவு, சும்மா இருந்த நேரத்தில் தீடிரென ஒரு சிந்தனை அதைத்தான் இங்கே தருகிறேன்

தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக தீபாவளிக்கு மூன்றே மூன்று சினிமாக்கள் வெளிவந்தன அதிலும் பேராண்மை மட்டும் சிறப்பான சினிமாவாக கருத்து தெரிவித்த சினிமா ரசிகர்களும் வேறு சினிமா வெளிவராத வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் சினிமா உலகத்தை முதல்வர் பல வழிகளில் காப்பற்ற நினைத்து பலவிதமான சலுகைகள் செய்து வருகிறார் இருந்தாலும் சினிமா உலகம் செழிப்பதில்லை ஆனால் சினிமா நடிகர்களும் நடிகைகளும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்

இப்படி பட்ட சூழலில் சினிமா சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பலரும் பலம் பெறுவது ரஜினி சினிமாவில்தான் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை  அப்படி பட்ட ஒரு நடிகர் தொடர்ந்த மூன்று சினிமாக்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டி உலக அழகி ஐஸை கேட்டதும் அவருக்கு நடிக்க முடியாமல் போனதும் அறிந்ததே

இருந்த போதிலும் இறுதி வெற்றியாக சங்கரின்”எந்திரன்” படத்திற்கு ஐஸ் கிடைத்ததும் மிகவும் மகிழ்ந்து போனார் ரஜினி. ஆனால் சில உண்மைகளை இங்கே சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் நான்

பெருமைக்குரிய உலக அழகி ஐஸ் வட இந்தியாவாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் நடித்தது தமிழ் சினிமாவில்தான் அதுவும் ஒன்றோ இரண்டோ என அந்த சினிமாக்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. நமது சினிமா இலக்கணப்படி ராசியில்லாத நடிகை என்ற “பேட்ஜ்” குத்தப்பட வேண்டிய ஐஸை ஏன் ரஜினி இத்தனை விருப்பபட்டு தனது சினிமாவில் கதாநாயகி ஆக்க நினைக்கிறார்.

தனது முந்திய சினிமா சிவாஜி அந்த அளவுக்கு (ரஜினியின் அளவு கோல் வேறு) வெற்றி பெறவில்லை என்பது ரஜினி ரசிகர்களே அறிந்த உண்மை இதற்கிடையில் பத்திரிக்கைகளும் பதிவர்களும் சிவாஜி வெற்றீயா தோல்வியா என பட்டிமன்றம் வைக்காத குறையாக விமர்சனம் எழுந்தது அதை ரஜினி இன்னும் மறந்திருக்க மாட்டார். அடுத்து தனது மன திருப்திக்காக நடித்த அல்ல நட்புக்காக செய்த சின்ன ரோலை அந்த படத்தின் இயக்குனர் தவறாக பயன்படுத்தி ஒரு வெற்றி படத்தை நாசமாக்கியதும் எல்லாரும் அறிந்ததே

இப்படி பட்ட சூழலில் மற்ற நடிகர்களை போல் இரண்டு தோல்வி வந்தாகிவிட்டது அதனால் ஒரு வெற்றிப்படம் தரவேண்டும் என்ற சூழலில் சூப்பர் ஸ்டார் இல்லைதான் இருந்தாலும் அவரது கோடிக்கணக்கான? ரசிகர்களின் மனதை புரிந்து கொண்ட அவர்களுக்கான கொண்டாட்டமாக ஒரு படம் வரவேண்டும் இந்த தருணத்தில்தான் ரஜினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

சங்கரின் கனவுப்படம் என்கிறார்கள் திறமைசாலி இயக்குனரின் கனவுப்படம் எனும்போது நிச்சயமாக தனது திறமைகள் அனைத்தையுமே அவர் கொட்டி வேலை செய்வார் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்

விஞ்ஞான ரீதியான சினிமா என்பது இதுவரை தமிழ் சினிமாவில் வெற்றி பெற வில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்(சில பல நேரங்களில் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாவது சில நடிகர்கள் முயற்சி செய்து தோற்று இருக்கிறார்கள்) இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் முழுமையான ஒரு விஞ்ஞான ரீதியான சினிமா வரவுமில்லை என்பதால் இது ஒரு  புதிய முயற்சி மட்டுமல்லாமல் இது வீபரீத முயற்சியும் ஆகும்  இது எந்திரன் பற்றிய முதல் எதிர்மறையான கருத்து

அடுத்தது இதுவரை இல்லாத அளவிலான செலவு இத்திரைப்படத்திற்கு இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதா என்றால் மறுக்க முடியாமல் சொல்லலாம் நிச்சயமாக என்று. அதே சம்யத்தில் சன் குழுமம் போன்ற பணபலமிக்க தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இப்படி சினிமா தயாரிக்க முடியும் என்பதும் எதிர்மறையே .. அதைவிட இத்தனை செலவு செய்த பின் அதற்கே அளவிலான பங்கீடும் உலகளாவிய வெளியீடும் மிக முக்கியமானதும் ஆகும் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது இன்னும் எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது இது இரண்டாவது எதிர்மறை

மூன்றாவது நான் ஏற்கனவே சொன்னது போல உலக அழகி ஐஸ் . . சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சினிமாக்களில் வெற்றிப்பட வரிசையில் கடைசியாக உள்ள படம்தான் ஐஸ் தமிழில் அறிமுகமாகிய “ஜீன்ஸ்” , மணிரத்னத்தில் சிறந்த இயக்கமாக இருந்த போதிலும் சிறந்த இரண்டு நடிகர்கள் நடித்த போதிலும் ஊத்தி கொண்ட படம் “இருவர்” பிரியதர்ஷனின் இயக்கத்தில் சீனியர் மற்றும் ஜூனியர் என திற்மையான இளமையான கூட்டணியின் அவர் செய்த நல்ல படம் என்ற பெயர் பெற்ற “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”  என உலக அழகி தமிழில் செய்த படம் எதுவும் சொல்லும்படியாக ஹிட் இல்லை என்பதும் ஒரு உண்மை இது எந்திரனுக்கு எதிரான பலமான சிந்திக்க வேண்டிய கருத்து ஆகும்.

மேலும் இப்படி பட்ட பல பலவீனங்களோடு இருந்தாலும் ரஜினி, சங்கர், சன் குழுமம் என்ற தமிழ் சினிமா பலங்களும் இருப்பதால் என்ன வேண்டுமானலும் நடக்கலாம்

இருந்தாலும் இந்திய எல்லையை கடந்து தனது எல்லையை விரிக்க நிற்கும் ஒரு சினிமாவான இதில் எல்லா விசயங்களும் 100 சதமானம் நல்லதாக அமைவதே நல்லது என்பது என் கருத்து. அதிலும் புதிதாக ஒரு முயற்சி அதுவும் ஆபத்தான ஒரு முயற்சி . .

வெற்றி பெறட்டும் என்ற வாழ்த்துக்களுடன் ஒரு ரஜினி ரசிகன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s