தூதுவர்கள் என்ன செய்தார்கள்


முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை இருந்தபோதிலும் இப்போதே துவங்கி விட்டன பலவிதமான கிசுகிசுக்கள் (இப்படி சொல்வதால் அரசியல்வாதிகள் கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிப்பார்களோ)

எது எப்படி இருந்தாலும் சென்றார்கள் வந்தார்கள் என்பது போல் இல்லாமல் எதேனும் மாற்றம் வருமா இல்லையா என்பதை அறிய முற்ப்பட்டால் நமக்கு என்ன பதில் கிடைக்கும். ஏமாற்றமா இல்லையா.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெயலலிதா சொன்னது போல் இந்த பயணம் பயன் தராதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்  பொறுத்திருந்த பார்ப்போம் என்கிறார். பொறுத்துதான் இருந்தோம் சில “தலை” கள் விழும்வரை இனியும் பொறுக்கிறோம் எதுவரை என்பதையும் அவரே சொன்னால் நல்லதாக இருக்கும்

எம்பிக்களின் குழுவுக்கு இலங்கை அரசு காட்டிய வழி திருப்தியளிப்பதாக சொல்கிறார் முதல்வர் இருப்பினும் இலங்கை இராணுவத்தின் வழியில் சென்ற அந்த குழு உண்மையான நிலையில் உள்ள தமிழர்களைத்தான் கண்டார்களா இல்லை இராணுவத்தின் ஏற்ப்பாட்டில் ஒரு சில பகுதிகள் மட்டும் குழுவுக்கு காட்டப்பட்டதா என்பது குறித்த சந்தேகங்களை மீடியா உருவாக்கி வருவது பயம் கொள்ள செய்கிறது.

முகாம்களில் தமிழர்கள் நிலைகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறது என்கிறார். ஆனால் திருமாவோ பிச்சைக்காரர்களை விட மோசமான நிலையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார் . குழுவுக்குள்ளே வேறு வேறு பார்வைகளோ . . இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த கூட்டணிக்காக வேண்டி நாடகம் நடத்தப்படும் என்று தெரியவில்லை

எது எப்படி இருந்தாலும் முதல்கட்டமாக 58000 தமிழர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் அறிக்கை நமக்கு ஆறுதல் அளித்தாலும் முன்பு நடந்ததுபோல் போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டு அதற்கடுத்த வெளியிடப்பட்ட “இடி” யைப்போன்று ஏதேனும் நடக்காமல் இருக்க இறைவனை பிராத்திப்போம் . .

இனி

மற்ற எல்லா இடங்களிலிருந்தும் இலங்கைக்கு வந்த குழு போன்றே இந்த குழுவும் என்ற மனநிலையிலிருந்த தமிழக மக்களின் எண்ணத்தில் முதல் கட்டமாக 58000 பேர் விடுவிக்க பட போகின்றனர் என்ற செய்தி இனிப்பானது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த இன்னும் பலர் விடுவிக்க படலாம் என்பதும் தமிழர்களுக்கான தீபாவளி பரிசாகத்தான் இருக்க முடியும் . .

இக்கட்டான பல சூழ்நிலைக்குள்ளும் பல அளுத்தங்களுக்கிடையேயும் தனது சார்பாக ஒரு குழு அமைத்து அதை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள சூழலையும் இனி என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையையும் அறிய வேண்டிய இந்த முயற்சியை மேற்கொண்ட தமிழக முதல்வரின் செயலுக்கு தமிழனான எனது பாராட்டுக்கள் . .

எது எப்படி இருந்தாலும் எதிர்ப்புகள், எதிர்கட்சியின் கேள்விகள், தமிழ் ஆர்வலர்கள் தாக்குதல்கள் என பலவகையான சோதனைக்கு நடுவேயும் செய்ய வேண்டிய சில வேலைகளை செய்ய முற்ப்பட்டிருக்கும் முதலவருக்கு என் நன்றிகள்

இன்னும் உங்க கிட்ட எதிர்பார்க்கிறோம்

பின் குறிப்பு:

பிரபாகரனோடு நீங்கள் இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள், என்று ராஜபக்சே ஜோக்கடித்ததாக சொல்லும் திருமா அந்த நேரத்தில் எந்த மனநிலையில் (உண்மையில்) இருந்திருப்பார் என்பதை கண்டிப்பாக அவர் வெள்யிடுவார் என்றே நம்புகிறேன். (தற்போது நானும் ஜோக்காக எடுத்து கொண்டேன் என்று சமாளித்து இருக்கிறார் உண்மையில் அவர் ரத்தம் கொதித்திருக்கும் என்பதை நான் அறிவேன்)

அதுபோல் இந்த தூதுவர்களின் உண்மையான மனிதாபிமானத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை தமிழகமே எதிர்பார்க்கிறது. அது கிடைக்குமா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s