தீபாவளி கொண்டாட்டம்


விலையேற்றம், தீவிரவாதம், ரவுடிகளின் தொல்லை, அரசியல் வாதிகளின் அறிக்கைகள், நடிகர்களின் சில சினிமாக்கள், பன்றிக்காய்ச்சல் கொடுமைகள் என தினமும் அவதிப்படும் என் நாட்டுமக்களுக்கு இதோ புதிதாய் ஓர் ஆறுதல்

இது போன்ற கவலைகளில் மூழ்கி கிடக்கும் என் தமிழனுக்கு அந்த சோர்வை அகற்ற வேண்டி என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது. எந்த கவலை வந்தாலும் அவற்றை மறந்து நடிகர்களின் கண்டனக்கூட்டத்தையும் பத்திரிகைகாரர்களின் பதிலடிகளையும் அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்களையும், கண்டும் படித்தும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறான். அதிலும் சமீபத்திய “அம்மா” வின் வரவும், இலங்கை தமிழர்களை காண சென்ற குழுவின் வரவும் ஓரளவு அவனை மற்ற கவலைகளை மறக்கச்செய்திருக்கும்

இந்த வேளையில் இதோ தீபாவளி

தீபாவளி என்பது புனிதமான ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள் அந்நாளில் நாம் செய்வதென்ன அல்லது நம் தமிழன் செய்வதென்ன

தீபாவளி

தீபாவளி

வழக்கமாக தீபாவளி என்று வந்துவிட்டாலே அதிகாலையிலே எழுந்து எண்ணை வைத்து குளித்து கோலமிட்டு புத்தாடை அணிந்து கோயிலுக்கு போய் என கொண்டாட வேண்டும் அதிலும் தலை தீபாவளி என்பது (கவனிக்கவும் இது “தல” தீபாவளி அல்ல) என்றால் அந்த மாப்பிள்ளைக்கு கொண்டாட்டம்தான், மணமகள் வீட்டில் ராஜ உபச்சாரம் விருந்து என அல்லோகப்படும் அந்த கொண்டாட்டங்கள் இப்போது எங்கே இருக்கிறது. அடுத்த தீபாவளி வரும் வரை இந்த தீபாவளி தந்த நினைவுகளே போதும் என்ற நிலை இருந்தது ஒரு காலம் . . தீபாவளி என்றாலே நினைவுக்கு வரும் ஸ்வீட்களும் பட்டாசுகளும் இன்றளவும் நினைவிலிருக்கும் இந்த ஆண்டு 30ஐ கடப்பவர்களுக்கு

ஆனால் இன்றோ காலையில் சாரி அதிகாலையிலே எழுந்து தொலைக்காட்சி முன்னால் இருந்தால் இருட்டும் வரைக்கும் தொலைக்காட்சியை விட்டு அசைய நேரமில்லை நமக்கு அதிலும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொருவிதமாக நிகழ்சியை போட்டு தாக்க அதிலும் பாதி தமிழ் படித்த நடிகைகள் வந்து அவர்களின் காதல் கதைகளை நாசுக்காக விவரிக்கும் நிகழ்சிகள் . . மறக்காமல் கேட்கப்படும் அதே கேள்விகள் என அன்றைய தினமும் கறைய இறுதியில் ரேசனாக தரப்பட்ட அளவு பட்டாசில் முடிகிறது தீபாவளி

வீட்டிற்கு வந்த விருந்தாளியை கூட கவனிக்க வழியில்லாமல் செய்திருக்கும் இந்த தொலைக்காட்சி இதில் தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளைக்கு எங்கே உபச்சாரம் அவருக்கு வேண்டுமானல் இப்படி இருக்கலாம் உபச்சாரம் அன்று முழுவதும் தொலைக்காட்சியின் ரிமோட்டை அவரிடம் கொடுத்து அவரை கவுரவப்படுத்தலாம் வேறு என்ன செய்ய முடியும்.

இளைஞர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம் பார்களில் பார்ட்டி வம்பு என்று தெம்பாக அலைவார்கள், இளைஞிகளும் இவர்களுக்கு தெம்பளிக்க வேண்டி 20 20 மேட்சில் வரும் ஆடல் பெண்கள் போல் வலம் வருவார்கள் இவர்களை இன்று கோலம்போடச்சொன்னால் நம் கோலம்தான் கந்தலாகும், பட்டாசு வெடிக்க வேண்டிய சிறுவர்கள் சுட்டி டிவிக்காக பெரிய்வர்களிடம் சண்டை போடுவார்கள், பெரியவர்கள் சிறுவர்களோடு சண்டை போடுவார்கள் நயன் தாரா காதலை பற்றி அறிந்து கொள்ள . . என்னதான் செய்ய

உறவுகள் அற்றுப்போன உலகில்

உற்சாகம் தரும் விழாக்கள் கூட

உறங்கி விட்டன இன்று

எனினும் இன்றும் தீபாவளியை தீபமேற்றி கொண்டாடும் என் தமிழர்களுக்கு

Advertisements

2 comments on “தீபாவளி கொண்டாட்டம்

 1. // இளைஞிகளும் இவர்களுக்கு தெம்பளிக்க வேண்டி 20 20 மேட்சில் வரும் ஆடல் பெண்கள் போல் வலம் வருவார்கள் இவர்களை இன்று கோலம்போடச்சொன்னால் நம் கோலம்தான் கந்தலாகும்,

  ராஜோலன்…… ம…… எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா?.
  அக்கம் பக்கம் பாத்து பேசுங்க.

  //மாப்பிள்ளைக்கு எங்கே உபச்சாரம் அவருக்கு வேண்டுமானல் இப்படி இருக்கலாம் உபச்சாரம் அன்று முழுவதும் தொலைக்காட்சியின் ரிமோட்டை அவரிடம் கொடுத்து அவரை கவுரவப்படுத்தலாம் வேறு என்ன செய்ய முடியும்.

  இது போதும் அவங்களுக்கு. ( என் கணவர் இதை பார்க்கமாட்டார் என்ற தைரியம் எனக்கு)

  • பாத்தீங்களா குந்தவை கோலம் போடுறது மட்டும் உங்க வேலைன்னு அதுக்கு வக்காலத்து வாங்கிட்டீங்க, நீங்க எப்படி மாவுக்கோலமா இல்லை ரெடிமேடு கோலமா இதப்பத்தி ஒரு பதிவை பதிக்கலாமே

   மாப்பிள்ளையை கவனிக்கிற வேலையை மட்டும் வேண்டாம் சொன்னா எப்படி (உங்க கணவர் பாத்தா மட்டும் என்னா அதான் தலை தீபாவளி கொண்டாடி முடிச்சாச்சே அதப்பற்றியும் ஒரு பதிவை தட்டி விடறது)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s